புதுக்குடியிருப்பு பகுதியில் இரு தரப்பும் தீவிர மோதல் – பிரிகேடியர் தகவல்

புதுக்குடியிருப்பு நகருக்குள் பிரவேசித்து அங்கு நிலைகொண்டுள்ள படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகப் படைத்தரப்பு தெரிவிக்கின்றது


நேற்று மாலை முதல் உக்கிரமடைந்துள்ள இந்த மோதல்களின் போது புலிகள் தரப்புக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் படைத்தரப்புக்கும் சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

மோதலை அடத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலி உறுப்பினர்களின் 21 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு, சாலை, புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு வடக்கு போன்ற பகுதிகளினூடாக முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வரும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இராணுவத்தின் 53, 55, 57, 58, 59ஆவது படையணிகள் மற்றும் 4, 8 ஆவது விஷேட படையணிகளைச் சேர்ந்த இராணுவத்தினரே இந்த முன்னேற்ற முயற்சிகளை மேற்öகாண்டு வருகின்றனர். படையினரின் இந்த முன்னேற்றத்தை தடுப்பதற்காக புலிகள் தீவிர முயற்சிகளை எடுத்த போதிலும் அவை படையினரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.