சிறிலங்கா பொருட்களை புறக்கணிப்போம். பிரான்ஸ் லாச்சப்பில் தமிழ் இளையோர்கள்

பிரான்சிலே தமிழ் மக்கள் செறிந்து காணப்படும் பகுதியான லாச்சப்பில் பகுதியிலே, கடந்த திங்கட்கிழமை திடீரென ஒன்று கூடிய தமிழ் இளையோர்கள் அங்குள்ள விற்பனை நிலயங்களுக்குச் சென்று சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை எடுத்து வீதியோரங்களில் போட்டு எரித்தார்கள்.

பொருட்களை கொள்வனவு செய்வதால் அந்தப் பணத்தைக்கொண்டு நம் இனத்தை அழிப்பதற்கு சிறிலங்கா அரசிற்கு நாமே துணை நிக்கின்றோமென வானகரக்கூறிய இளையோர்கள், தமிழ் மக்களாகி நாங்கள் சிறிலங்காவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குவதை அறவே ஒழிப்போம் எனவும், இன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது அடையாள போராட்டம் எனவும் தெரிவித்தார்கள்.

தமிழினப் படுகொலையை மேற்கொண்டுவரும் சிறிலங்காவிலிருந்து வரும் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் முன்னெடுக்கப்படுவருவது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.