பங்குச் சந்தையில் முதலீடு செய்யவுள்ள ஜப்பானிய அரசாங்கம்

ஜப்பானின் சறுக்கலை எதிர்நோக்கியுள்ள பங்குச் சந்தை விலைகளை காப்பாற்றும் நோக்கில் பங்குகளை வாங்க அந்த நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதன் புதிய நிதி அமைச்சர் கௌரு யொசானோ கூறியுள்ளார்.

கடந்த 26 வருடங்களில் மிகவும் குறைந்த புள்ளிக்கு வீழ்ச்சியடைந்த டோக்கியோ பங்குச் சந்தை, இன்றைய தினத்தின் இறுதியில் ஓரளவு சுதாரித்து ஒன்றரை சத வீழ்ச்சியை காட்டியது.

பங்குப் பெறுமானங்களில் ஏற்படுகின்ற வீழ்ச்சி, சந்தையில் பெருமளவு பங்குகளை தம் வசம் வைத்திருக்கின்ற ஜப்பானிய வங்கிகளின் முதலீட்டுத்தளத்தை குறைப்பதன் மூலம் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கடந்த வாரம் பதவியேற்ற யொசானோ கூறியுள்ளார்.

கடந்த 12 வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்ட வால் ஸ்ரீட் பங்குச் சந்தையின் வீழ்ச்சியை அடுத்து டோக்கியோவின் வீழ்ச்சி வந்துள்ளது.

Source & Thanks : .bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.