இலங்கை தமிழருக்கு ஆதரவாக மேலும் ஒரு திமுக தொண்டர் தீக்குளித்து மரணம்

இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது கண்டித்தும் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக பிரமுகர் சிவப்பிரகாசம் தீக்குளித்து இறந்தார். இந்நிலையில் இன்று சிவகாசி ஆணையூர் பஞ்சாயத்து அய்யம்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகர் கோகுலகிருஷ்ணன் தீக்குளித்து இறந்துள்ளார்.

40வயதாகும் கோகுல கிருஷ்ணன் இன்று காலையில் திமுக கொடி, மண்ணெண்ணெய் கேன், கடிதம் சகிதம் கையில் வைத்துக்கொண்டு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வந்ததும் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப் போகிறேன் என்று குரல் கொடுத்தபடியே மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு பற்ற வைத்துக்கொண்டார்.

பற்றி எரியத் தொடங்கியதும் அவர் ஓடத் தொடங்கியுள்ளார். அப்போது கேட் ஒன்றில் மோதி கீழே விழுந்து எரிந்து கொண்டிருந்திருக்கிறார்.

எஸ்.பி. சந்தோஸ்குமார் விரைந்து வந்து அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.என தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.