புலிகள் தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்தலாம்: இராணுவ தளபதி சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகள் தென்னிந்தியா மீது தாக்குதல் நடத்தலாமென இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முடியாதென இந்தியா திட்டவட்டமான தனது முடிவைத் தெரிவித்து விட்டது. தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மட்டுமே இந்திய அரசாங்கம் இலங்கை அரசைக் கேட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆத்திரமடைந்துள்ள விடுதலைப் புலிகள் இந்தியாவின் தென் மாநிலப் பிராந்தியத்தின் மீது பொதுமக்கள் மற்றும் பொருளாதார மையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தலாம்.எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தம்மிடமிருந்த விமானங்களை இழந்ததன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம் குன்றிவிட்டது. அவர்களின் ஏழு விமான ஓடு பாதைகளையும் படையினர் கைப்பற்றிவிட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்ந்தும் வன்னியிலிருப்பதாகத் தாம் நம்புவதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.