‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (25.02.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நேற்று இரகசியப் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

அண்மையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலேயே மேற்படி விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இரகசியப் பொலிஸாரின் விசாரணை தொடர்பாக விரைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பொதுமக்களின் இழப்புக்களை தவிர்ப்பதற்கு இலங்கையில் உடனடியான மோதல் தவிர்ப்பு அவசியம் என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை திணைக்கள பேச்சாளர் றொபேட் வூட் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வன்னியில் உள்ள களமுனைகளில் துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் தொடர்பாக அமெரிக்கா கவலை கொண்டுள்ளது . அங்கு ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளையே நாம் முதன்மையாக கவனத்தில் எடுத்துள்ளோம் .

போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களின் நிலை குறித்து நாம் கவலை கொண்டுள்ளோம்.
மோதல்களை நிறுத்துவது தொடர்பாக இரு அரசுகளும் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்பது எமக்கு கோரிக்கை. மன்னிக்கவும், மோதல்களை நிறுத்துவது தொடர்பாக விடுதலைப் புலிகளும் அரசும் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்பது எமது கோரிக்கை.

மேலும் பொதுமக்களின் இழப்புக்களை தவிர்க்க வேண்டும் எனில் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம் .
மீண்டும் மோதல்கள் அற்றநிலையை பார்க்கவே நாம் விரும்புகின்றோம். பொதுமக்கள் பாதுகாக்கப்படுவதை நாம் விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
போரை நிறுத்த வேண்டும் என ஜரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் விடுத்த வேண்டுகோளை நிராகரிப்பதாக அந்நாட்டின் அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார் .
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கலாம். ஆனால், அரசாங்கத்துடன் பேச்சுக்கு வரவேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.
அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் போரை நிறுத்த வேண்டும் என ஜரோப்பிய ஒன்றியம் விடுத்த வேண்டுகோள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கருத்துக்கூறிய போதே அமைச்சர் மகிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
போரில் படையினர் வெற்றி பெற்றுள்ளனர். போரின் இறுதி கட்டம் வந்து விட்டது .
இந்நிலையில் போரை நிறுத்துமாறு ஜரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார் .
புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் ஏன் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதேவேளை, கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து சரணடைந்தால் போர் நிறுத்தம் என்ற சொல்லைக்கூட அனைத்துலக நாடுகள் உச்சரிக்க வேண்டிய தேவை இல்லை என்றார
:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகள் தென்னிந்தியா மீது தாக்குதல் நடத்தலாமென இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முடியாதென இந்தியா திட்டவட்டமான தனது முடிவைத் தெரிவித்து விட்டது. தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மட்டுமே இந்திய அரசாங்கம் இலங்கை அரசைக் கேட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆத்திரமடைந்துள்ள விடுதலைப் புலிகள் இந்தியாவின் தென் மாநிலப் பிராந்தியத்தின் மீது பொதுமக்கள் மற்றும் பொருளாதார மையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தலாம் .எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தம்மிடமிருந்த விமானங்களை இழந்ததன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம் குன்றிவிட்டது. அவர்களின் ஏழு விமான ஓடு பாதைகளையும் படையினர் கைப்பற்றிவிட்டனர் .
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்ந்தும் வன்னியிலிருப்பதாகத் தாம் நம்புவதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு உணவு மற்று மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு திடீரென மறுத்துள்ளது.
இத்தகவலை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் மருந்துப் பொருட்களை கப்பல் மூலம் கொண்டு செல்வதற்கு தயாரான போது இறுதி நேரத்தில் காரணம் எதுவும் இன்றி அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இது தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சிரசி விஜயரட்னவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் மேலதிகமாக எதனையும் தெரிவிக்க விரும்பவில்லை.
இதேவேளை, நிவாரணப் பொருட்களை முல்லைத்தீவுக்கு கொண்டு செல்வது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணைய அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
இன்னும் ஓரிரு நாட்களுக்குள் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கொண்டு செல்லப்படவில்லையானால் முல்லைத்தீவில் இயற்கையான மரணங்கள் ஏற்படலாம் என தொண்டு நிறுவன அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காரைநகர் கடற்கரை வீதியில் இடம் பெற்ற வீதிவிபத்தில் பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார் .நேற்றுக் காலை 7.45 மணியளவில் குறித்த வீதியில் பஸ்ஸொன்று மோட்டார் சைக்கிளில் மோதிக்கொண்டதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதில் எட்டு வயதுடைய சிவனேசன் தியானி என்ற பாடசாலை மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது தந்தையார் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மரணவிசாரணையை ஊர்காவற்துறை நீதிபதி திருமதி ஜோஜ் மகாதேவா மேற்கொண்டதையடுத்து பஸ் சாரதியை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு தொப்பிகலை பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விமான எதிர்ப்பு எறிகணையொன்று நேற்று பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்தே இது கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணம் அரசாங்கத்தினால் முழுமையாக விடுவிக்கப்பட்ட பின்னரே அந்த இடத்திற்கு இது கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவில் இடம்பெறும் மோதல்களில் சிக்கி காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்கள் என 5ஆவது தொகுதியினரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நேற்றிரவு கடல் வழியாக அழைத்து வந்துள்ளனர்.

குழந்தைகள், பெண்கள் உட்பட 395 பேர் இப்படி அழைத்து வரப்பட்டதாகத் திருகோணமலை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுள் நோயாளர்களின் உறவினர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்ள மாட்டார் என்று தெரியவருகிறது.இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாகவே கடைசி நேரத்தில் அவர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும், “சார்க் நாடுகளின் 31ஆவது வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு 27, 28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் பயங்கரவாதம் பொருளாதார ஒத்துழைப்புகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன. இதில் இந்தியா சார்பாக பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வாரென ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே அவர் தனது பயணத்தை ரத்துச் செய்துள்ளார். அவருக்குப் பதிலாக மாநில வெளிவிவகார அமைச்சர் இ.அஹமட் இலங்கை வரவுள்ளார்.

அதேவேளை, இந்தியாவில் தற்போது நிலவும் அரசியல் , பொருளாதார நிலைமைகள் காரணமாக முகர்ஜிக்கு ஏற்பட்டுள்ள கடுமையான வேலைப்பளுவின் நிமித்தமே அவரது பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை என்பது ஜனநாயகம் நிறைந்த இறைமையுள்ள நாடாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தைக் கொண்டிருக்கும் நாம், யுத்த நிறுத்தம் குறித்து கொக்கரிக்கும் சர்வதேச ஏகாதிபத்தியத்துக்கும் அதன் அழுத்தங்களுக்கும் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை. வெண்ணெய் திரண்டு வரும்போது தாளியை உடைக்க சர்வதேசம் முயற்சிக்கக் கூடாது என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். ஜனநாயகமும் பயங்கரவாதமும் ஒரே கட்டிலில் படுத்துறங்க முடியாது . இலங்கையைத் தவிர எமக்கு வேறு நாடு இல்லை. இதுவே எமது தாயகம். எமது தாயகத்தைக் காக்கும் பணியை படையினர் சரிவரச் செய்கின்றனர். எனவே, படையினரைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் நாம் எம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஹொரணைத் தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் படையினருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு பிரதமர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் இங்கு தொடர்ந்து பேசுகையில், “பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டும் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு சில நாடுகள் எம்மை தமது ஆதிக்கத்துக்குள் அடிமைப்படுத்தி விட முயற்சிக்கின்றன.

வேறு சில நாடுகள், அமைப்புகள் யுத்த நிறுத்தம் ஒன்று தேவையெனவும் அதற்கு அரசாங்கம் உடன்பட வேண்டும் என்ற தோரணையிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. நாம் யாருக்காக யாரிடம் அடி பணிவது? இலங்கை என்பது சுதந்திரமடைந்த நாடு. ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரமடைந்து பல காலங்கள் கடந்து விட்டன. அது மட்டுமல்லாமல் ஜனநாயகம் நிறைந்த இறைமையுள்ள நாடாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றையும் நாம் கொண்டிருக்கிறோம். இவ்வாறான அந்தஸ்துகளைப் பெற்றிருக்கும் நாம், உலகநாடுகள் அல்ல எந்த ஒரு அந்நிய சக்திக்கும் அடிபணிய போவதில்லை. இதுவே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

வெண்ணெய் திரண்டு வரும்போது தாளியை உடைக்கும் கதையாக சர்வதேசம் யுத்த நிறுத்தம் கோருகின்றது. யுத்த நிறுத்தம் என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. அது நடைபெறாத விடயம். முதலில் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும். பயங்கரவாத கலாசாரத்தை ஓரங்கட்டவும் வேண்டும் . அப்படியானால்தான் யுத்த நிறுத்தம் குறித்துச் சிந்திக்க முடியும்.

பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாது. அதற்கு முடிவு கட்டப்பட வேண்டும். பயங்கரவாதமும் ஜனநாயகமும் ஒரே கட்டிலில் படுத்துறங்க முடியாது. 70 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டுள்ள பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காதவாறு முறியடிக்கப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. பயங்கரவாதத்திற்கு அதன் ஊடாகவே பதில் கூற வேண்டும் என்ற கொள்கை தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை நாட்டின் பாரிய அபிவிருத்தித் திட்டமாகும் . இதில் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படுவதுடன் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கும் வழி வகுக்கப்படும் .

இலங்கை எமக்கே உரிய நாடு. வேறு நாடுகள் எமக்கில்லை. எமது தாயகப் பூமியைப் பாதுகாப்பதில் படையினர் தமது பணியை சரிவரச் செய்கின்றனர். அவர்கள் தொடர்பில் பொதுமக்களின் கவனம் மிகக் குறைவாக இருக்கின்றது. படையினரைப் போஷிக்க வேண்டிய பொறுப்பு எம்மிடமே இருக்கின்றது. இன்று ஹொரணை வாழ் மக்கள் படையினருக்கு அத்தியாவசியப் பொருட்களைத் திரட்டி வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது” என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி ரயில்சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 4 கோடி 50 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும இத் தகவலை வெளியிட்டார்.
மாத்தறையில் நேற்று இடம்பெற்றஒருங்கிணைப்புக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் வடபகுதி மக்களின் போக்குவரத்துத் தேவைகள் இலகுவாக்கப்படும். இந்த ரயில் சேவையை இயக்க 4 கோடி 50 லட்சம் ரூபா தேவை. இதனை நாட்டு மக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள விருக்கிறோம்.
யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை அமைப்பதற்கு அம்பாந்தோட்ட மக்களும் கிளிநொச்சி ரயில்நிலையத்தை அமைப்பதற்கு மாத்தறை மாவட்ட மக்களும் உதவ உள்ளார்கள்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி திட்டங்களை ஒன்றிணைக்க தேசிய செயலகம் விரைவில் அமைக்கப்படும்.
இதற்கான பணிகள் ஏ9 வீதி திறக்கப்பட்டதும் ஆரம்பிக்கப்படும் இப்படி அமைச்சர் கூறினார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் சாவின் அகோரப் பிடியில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு , அவர்கள் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் பொறுப்பில் வெளியேற ஒழுங்குகள் செய்யவேண்டும் .
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடம் நான்கு தமிழ் மறைமாவட்டங்களின் ஆயர்கள் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ள னர். இத்தகவலை யாழ்.ஆயரின் செயலா ளர் அருட்தந்தை ஆர்.றொசான் அடிகளார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை, யாழ். ஆயர் தோமஸ் செளந்திரநாயகம், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், மட்டக்களப்பு துணை ஆயர் பொன்னையா ஜோசப் ஆகியோர் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
ஆயர்கள் கூட்டாக தலைவர் பிரபாகர னுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது:
வன்னியில் குறுகிய வட்டத்துக்குள் சிக்குண்டு சாவின் அகோரப்பிடியில் மக் கள் சிக்கித்தவிக்கிறார்கள்.
அண்மைய தகவல்களின் பிரகாரம் 3 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள் ளனர். அதேவேளை மூன்று மடங்கானவர் கள் காயமடைந்துள்ளனர்.
இந்தப் பயங்கர மனித அவலத்தை தடுத்து நிறுத்த எடுத்த சகல முயற்சிக ளையும் அரசு அலட்சியப்படுத்திக் கொண்டு போரை கொடிய முறையில் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.
எம் அருமை வன்னி வாழ் மக்கள் பூண்டோடு அழிந்து போக தாங்கள் அனு மதிக்கமாட்டீர்கள் என்ற நோக்கில் இந்த வேண்டுகோளை தங்கள் உடனடி நட வடிக்கைக்காக மிக உருக்கமாக நான்கு ஆயர்களாகிய நாங்கள் சமர்ப்பிக்கின்றோம் என்று உள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏன் தலையிடவில்லையென ஆபிரிக்க ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.
சூடான் ஜனாதிபதி ஒமர் அல்பசீர் மீதான தீர்ப்பை அறிவிப்பதை ஒத்திவைத்திருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஆபிரிக்க ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் ஜோன் பிவ், உள்நாடுகளில் நீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக ஆபிரிக்கத் தலைவர்கள் தவறிவிட்டதாக அடிக்கடி கண்டனம் தெரிவிக்கும் சர்வதேச சமூகமானது காஸா , ஈராக் அல்லது இலங்கை மோதல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஏன் வலியுறுத்துவதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
றாகம பகுதியில் தனியார் பஸ் உரிமையாளர்களிடம் கப்பம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் , கொழும்பில் பணியாற்றும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரது மகன் உட்பட மூவரை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள், தனியார் பஸ் உரிமையாளர்களிடம் 5 இலட்சம் ரூபாவை கப்பமாகக் கோரியதாக , பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் குழுவொன்று மேற்கொண்ட விசாரணையில் ஏற்கனவே பலரிடம் இவர்கள் பணத்தை கப்பமாக கோரி பெற்று வந்தமை தெரிய வந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர் செய்யவுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள தினசரிப் பத்திரிகை ஒன்றின் பிராந்திய செய்தியாளரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அநுராதபுரம் ஆஸ்பத்திரி பாதுகாப்பு ஊழியரை பிணையில் செல்வதற்கு அநுராதபுரம் நீதிவான் ருச்சிர வெலிவற்ற அனுமதி வழங்கினார்.
வன்னிப் பகுதியில் விஸ்வமடுவில் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டு காயமடைந்து அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்த்து செய்தி சேகரிப்பதற்கு இந்த செய்தியாளர் சென்றபோது அவரை இந்த பாதுகாப்பு ஊழியர் தடுத்து தாக்கியுள்ளார் .
இவர் முதலில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார் . அதன்போது அவரை 7500 ரூபா ரொக்கப் பிணையிலும், இருவரின் 30 ஆயிரம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல நீதிவான் அனுமதித்தார்.
மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்பமிடுமாறும் நீதிவான் உத்தவிட்டார்.
இந்த பத்திரிகையாளரை இராணுவ அதிகாரி ஒருவர் ஆஸ்பத்திரிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக அவரது சட்டத்தரணி நீதிவானின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
ஊடகவியலாளரை தடுத்து நிறுத்தலாம் என்றும் அவரைத் தாக்குவதற்கு ஒருவருக்கும் உரிமையில்லை எனவும் அவர் தெரிவித்தார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் பல்வேறு இன்னல்களை தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்ற இந்தியவம்சாவளி மக்கள் உட்பட அனைத்து தமிழ் மக்களையும் காப்பாற்ற இந்தியா முன்வருமென்று எதிர்பார்ப்பது உண்மைக்கு புறம்பான ஒரு நம்பிக்கையாகும் என்று இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை பிரதித்தலைவருமான இரா.தங்கவேல் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தாய் தந்தையரின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க நடந்துகொள்ள வேண்டுமென தொழில் அமைச்சர் அதாவுட செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
மாவனல்ல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் வேளையில், சந்திரிக்காவும், ரணில் விக்ரமசிங்கவும் இலங்கை குறித்து சர்வதேச மட்டத்தில் பாதகமான விமர்சனங்களை முன்வைத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் காணப்படும் தனிப்பட்ட கோபம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சிரேஸ்ட அரசியல் தலைவர்களாகப் போற்றப்படும் பண்டாரநாயக்க தாய் தந்தையரின் புதல்வி என்ற ரீதியில் சந்திரிகா பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சார்க் நாடுகளின் 36ஆவது அமர்வின் வெளிவிவகார அமைச்சர்களின் செயலாளர்களின் மாநாடு இன்றும் நாளையும் கொழும்பு சிலோன் கொண்டினெண்டல் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோகன்ன தலைமையில் இடம்பெறும் இம் மாநாட்டில் சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

!!!!!!!!!!!!!!!!!
பிரான்சில் தமிழ் மக்கள் செறிந்து காணப்படும் பகுதியாகிய லாச்சப்பல் பகுதியில் (23.02.2009) திங்கட்கிழமை அன்று திடீரென ஒன்று கூடிய, பல நூற்றுக் கணக்கான இளையோர் அங்குள்ள விற்பனை நிலையங்களுக்குள் சென்று சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை எடுத்து வீதி ஓரங்களில் போட்டு எரித்துள்ளனர்
சிறிலங்காப் பொருட்களை கொள்வனவு செய்வதால், அப்பணத்தைக் கொண்டு நம் இனத்தை அழிப்பதற்கு , கொடிய அரசிற்கு நாமே துணை நிற்கிறோம் என வானதிரக் கூவிய இளையோர், தமிழ் மக்களாகிய நாங்கள் சிறிலங்கா பொருட்களை வாங்குவதை அறவே ஒழிப்போம் எனவும் கூறியிருந்ததுடன் இன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது ஒரு அடையாளப் போராட்டம் எனவும் கூறியிருந்தனர்.
இதே நேரம் தமிழினப் படுகொலையை மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா நாட்டிலிருந்து வரும் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம் தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கத
india
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
”விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்” என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வற்புறுத்தினார்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு மற்றும் உடனடி போர் நிறுத்தத்தை வற்புறுத்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் டெல்லியில் இன்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கட்சித்தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ரயில் மூலம் டெல்லி வந்துள்ளனர்.
டெல்லியில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ‌விடுதலைப்புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை இந்தியாவும், இலங்கை அரசும் தற்காலிகமாக நீக்கினால் விடுதலைப்புலிகளுடன் சமரச பேச்சு நடத்துவதற்கு இணக்கமான சூழ்நிலை உருவாகும். இதன் தொடர்ச்சியாக, விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தும் ஏற்பாட்டை கவனிக்க தமிழக அரசியல் கட்சி குழு ஒன்று இலங்கை செல்ல வேண்டும்.
தமிழக முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இலங்கை சென்று அந்த நாட்டு அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் . இதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்.
உள்நாட்டு போரினால் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாட்டிற்கு உடனடியாக திரும்ப வேண்டும். அப்படி திரும்புவதன் மூலம் இலங்கை தமிழர்களின் மக்கள் சக்தி வலுப்பெறும்.
இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைகள் மீது அந்நாட்டு இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதன் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இலங்கை அரசுக்கு விருப்பம் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்திற்கு தயாராக உள்ளனர்.
எனவே அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் அனைவரும், தங்கள் உடலில் கடைசி சொட்டு இரத்தம் உள்ளவரை இலங்கை இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும், அமைதி திரும்பவும் குரல் கொடுப்பார்கள் எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றினா‌ர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தாய்மார்கள், குழந்தைகள் அழிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு அரணாக போராடும் விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டுவோம் என்று கூறும் ராஜபக்சேவின் நாக்கை அறுக்க முடியாதா? என மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படக்கோரியும், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மதுரையில் வக்கீல்கள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று மதுரை மாவட்ட கோர்ட்டு முன்பாக வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர். வக்கீல்களின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசிகையில் இதனைத் தெரிவி்த்தார்.
’’தமிழீழ மக்களின் துன்பத்தை தவிர்க்க உறக்கத்தில் இருக்கும் தாய் தமிழகம் விழிக்காதா என்று நினைத்த நேரத்தில் தொப்புள்கொடி உறவினரான சகோதரர்களை பாதுகாக்க, வக்கீல்கள் போராட்டத்தில் குதித்திருப்பது பாராட்டுக்குரியது.

எந்த போராட்டம் என்றாலும் கந்தகம் என்னும் தீப்பொறி களம் பதிக்க வேண்டும். அதுபோல தீக்குளித்து இறந்த முத்துக்குமார் என்னும் கந்தகம் மூட்டிய தீயை இனி யாராலும் அணைக்க முடியாது. அது இன்று ஐ.நா.சபையிலும் எரிகிறது. இலங்கை தமிழர்களுக்காக 4 மாதங்களாக போராட்டம் நடக்கிறது.

வக்கீல்களின் அறவழி போராட்டம் தொடர வேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ி.மு.க சா‌ர்‌பி‌ல் இளையா‌ன்குடி தொகு‌தி‌யி‌ல் போ‌‌ட்டி‌யி‌ட்டு வெ‌ற்ற‌ி பெ‌ற்ற ராஜ கண்ணப்பன் தனது ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பத‌வியை ரா‌ஜினாமா செ‌ய்ததுட‌ன் அ‌க்க‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்து‌ ‌வில‌கியு‌ள்ளா‌ர்.

1991 முதல் 1996 வரையில் அ.இ.அ.தி .மு.க. ஆட்சி‌யி‌ல் பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். ‌பி‌ன்ன‌ர் 1996-ல் ஏ‌ற்ப‌ட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு “மக்கள் தமிழ் தேசம்’ என்ற கட்சியைத் தொடங்‌கினா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து 2001-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுட‌ன் கூட்டு சேர்ந்து தேர்த‌லி‌ல் போ‌ட்டி‌யி‌ட்டு தோ‌ல்‌வி அடை‌ந்தா‌ர். ‌பி‌‌ன்ன‌ர் 2006-ல் தி.மு.க.வி‌ல் இணைந்து இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர்.

ஏற்கனவே பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்ததா‌ல் ‌தி.மு.க. அர‌சி‌ன் அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் இதுநா‌ள் வரை‌யிலு‌ம் அவர் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை.

இ‌ந்‌நிலை‌யி‌ல் ராஜ க‌ண்ண‌ப்ப‌ன் தனது ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பத‌வியை ரா‌ஜினாமா செ‌ய்து‌ள்ளா‌ர். இத‌ற்கான கடித‌த்தை ச‌ட்ட‌ப்பேரவை செயலாள‌ரிட‌ம் இ‌ன்று கொடு‌த்தா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கட‌ந்த 19‌ஆ‌ம் தே‌தி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வளாக‌த்‌தி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு‌ம் , காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌ம் ஏ‌ற்ப‌ட்ட மோத‌லி‌ல் காய‌‌ம் அடை‌ந்தவ‌ர்களு‌க்கு தலா ரூ.5 ஆ‌யிர‌ம் இடை‌க்கால ‌நிவாரணமாக வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று ச‌ட்ட‌த்துறை அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன் இ‌ன்று ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

!!!!!!!!!!!!!!!!!!!
த‌மிழக‌த்‌தி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள்- காவ‌ல்துறை‌யின‌ர் மோத‌ல் காரணமாக ச‌ட்ட‌ம்- ஒழு‌ங்கு கெ‌ட்டு ‌வி‌ட்டதை கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு மா‌‌நில‌த்‌தி‌ல் குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சியை அம‌ல்படு‌த்துவத‌ற்கு ப‌ரி‌ந்துரை செ‌ய்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ம் உ‌த்தர‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று அ.இ .அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

முன்னாள் அமைச்சரும், அ.இ.அ.தி.மு.க. ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பினருமான டி .ஜெயக்குமார், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வளாகத்திற்குள் கடந்த 19ஆ‌ம் தேதி காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌ம், வழ‌க்க‌றிஞ‌ர்களுக்கும் இடையே மிகப் பெரிய வன்முறை ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் அரசியலமைப்பு எந்திரங்கள் செயல் இழந்து சட்டம்- ஒழுங்கு நிலை சீர்குலைந்து போய்விட்டது.

காவ‌ல்துறை‌யின‌ர் உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களையும், ‌நீ‌திம‌ன்ற ஊழியர்களையும் கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி, வழக்கு தொடர்பாக ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு வந்தவர்களையும், பொதுமக்களையும் கூட காவல‌ர்க‌ள் விட்டு வைக்கவில்லை . அவர்களையும் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள். மேலும், வழ‌க்க‌றிஞ‌ர்களின் கார்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர்.

எனவே சட்டம்- ஒழுங்கு கெட்டு விட்டதை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் குடியரசு‌த் தலைவ‌ர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு பரிந்துரை செய்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிடவேண்டும். உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வளாகத்தில் காவ‌‌ல்துறை‌யினரு‌க்கு‌ம் , வழ‌க்க‌றிஞ‌ர்களுக்கும் இடையே நடந்த வன்முறைக்கான காரணம் குறித்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ நீதிபதியைக் கொண்டோ அல்லது ஓய்வு பெற்ற உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற நீதிபதியைக் கொண்டோ நீதி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடவேண்டும்.

மேலும், இந்த வன்முறை தொடர்பாக மத்திய அரசு உரிய அதிகாரிகளிடமிருந்து அறிக்கையை பெறவும், அதன் மீது குடியரசு‌த் தலைவ‌ர் உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் அதை அவருக்கு அனுப்பி வைக்குமாறும் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிடவேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் எ‌ன்று மனுவில் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் மத்திய அரசு, தமிழக அரசு, தலைமை பதிவாளர், சென்னை உய‌ர் ‌ நீ‌‌திம‌ன்ற‌ம், தமிழ்நாடு காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர், சென்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டு உள்ளனர்.

இந்த மனுவை உ‌ச்ச ‌ நீ‌தி‌ம‌ன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி.சதாசிவம் , ஜே.எம்.பாஞ்சால் ஆகியோர் கொண்ட முத‌ன்மை அம‌ர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனு இன்று (25ஆ‌ம் தே‌தி) விசாரணைக்கு வருகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னை உயர்நீதிமன்றம் உட்பட தமிழகத்தின் அனைத்து நீதிமன்றங்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. போராட்டத்தைத் தொடர்வது குறித்து வழக்கறிஞர்கள் இன்று முடிவெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் , காவல்துறையினருக்கும் இடையே கடந்த 19 ஆம் தேதி கடும் மோதல் நடைபெற்றதை அடுத்து , தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அனைத்து நீதிமன்றங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் திறக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் , வழக்கறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படாததால், அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் இன்று பணிக்கு செல்லவில்லை. இதனால், வழக்குகள் தேங்கும் அபாய நிலை நீடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று முடிவெடுக்க இருப்பதாக வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .
!!!!!!!!!!!!!!!!

நாடாளுமன்றத் தேர்தலை 6 அல்லது 7 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இன்னும் ஒருவாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய இருப்பதால், அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக, மத்திய உள்துறை செயலர் மதுகர் குப்தா மற்றும் தொலைத்தொடர்புத்துறை செயலர் சித்தார்த்த பெருவா ஆகியோரை , தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி, தேர்தல் ஆணையர்கள் நவீன் சாவ்லா, குரேஷி ஆகியோர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, தேர்தல் பாதுகாப்பிற்கு தேவையான துணை ராணுவப்படை குறித்து பேசப்பட்டது. இதனையடுத்து, நெட்வொர்க்கிங் வசதி இல்லாத இடங்களில் போர்க்கால அடிப்படையில் தொலைத் தொடர்பு வசதி செய்து கொடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் 6 அல்லது 7 கட்டமாக நடைபெறக்கூடும் என்றும், வரும் ஏப்ரல் 3வது வாரத்தில், முதல் கட்ட தேர்தல் தொடங்கும் என்றும் தெரிகிறது . இதற்கான அறிவிப்பு இன்னும் ஒருவாரத்தில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
world
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்காவில் அமல் செய்யப்பட்டுள்ள பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தங்கள் நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் முதல்முறையாக இன்று உரை நிகழ்த்திய அவர், பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் என்பது வங்கிகளின் நலனுக்காக அல்ல என்றும் , பொதுமக்களின் நலனுக்கானது என்றும் குறிப்பிட்டார். இந்த திட்டத்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளில், அமெரிக்காவில், 3.5 மில்லியன் பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என்றும் ஒபாமா நம்பிக்கை தெரிவித்தார். இதன்மூலம், அமெரிக்க பொருளாதாரம் நிச்சயம் சீராகும் என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தானிலும், ஆப்கனிலும் இருந்துவரும் அல்கொய்தா தீவிரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என்றும், இதற்காக, நட்பு நாடுகளோடு இணைந்து புதிய அணுகுமுறையைக் கையாளத் திட்டமிட்டுள்ளதாகவும் ஒபாமா கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவை தாக்கக் கூடிய வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா நகர்த்தியுள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது . அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தை தாக்கக் கூடிய நீண்டதூர ஏவுகணைப் பரிசோதனைக்கு வடகொரியா தயாராகி வருவதாக கூறப்படும் சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே தென்கொரியா இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளது.
வடகொரியாவின் இப்புதிய நடுத்தர ஏவுகணையானது 3 ஆயிரம் கிலோமீற்றர் வரை பயணம் செய்யும் திறன் கொண்டது.
இத்தூரத்திற்குள் அமெரிக்காவின் குவாம் மாநிலம், அவுஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியன உள்ளடங்குகின்றன.
ஆனால், அந்த நடுத்தர ஏவுகணைகுறித்து மேலதிக தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கவில்லை . அத்துடன் புதிய ஏவுகணையானது எங்கே நிறுத்தப்பட்டுள்ளது, எத்தனை ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளது என்ற கூற்றுகளும் வெளியிடப்படவில்லை.
ஆனால், 2007 ஆம் ஆண்டு வடகொரியாவில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் வைக்கப்பட்டிராத ஏவுகணையைப் போலவே இருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகின்றது.
அத்துடன் 1990 ஆம் ஆண்டிலிருந்து வடகொரியா ஏவுகணை அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ளதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!!
ரஷ்ய படைகளின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட சரக்கு கப்பலிலிருந்த சீன மற்றும் இந்தோனேஷிய நாடுகளைச் சேர்ந்த 8 மாலுமிகளின் மரணத்திற்கு ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது.
ஆனால், கடந்தவாரம் இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு கப்பலின் கப்டனே காரணமென ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
சியேரா லியோன் கொடியுடன் பயணித்த “நியூஸ்டார்’ என்னும் இக் கப்பலின் மீது ரஷ்யாவின் கிழக்குப் பகுதியிலுள்ள நஹோட்கா துறைமுகத்திற்கு அப்பால் வைத்து ரஷ்யப் போர்க் கப்பலொன்று தாக்குலை ஆரம்பித்ததைத் தொடர்ந்து இக் கப்பல் மூழ்கியுள்ளது .
இச் சம்பவம் தொடர்பில் ரஷ்யாவுக்கு தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த சீன வெளியுறவுத் துறை அமைச்சு இதற்கான முழு விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரியிருந்தது .
ஆனால், இந்தோனேஷியாவைச் சேர்ந்த கப்பல் கப்டன் தமது எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்ததாக ரஷ்யா தெரிவிக்கின்றது. எச்சரிக்கை துப்பாக்கி வேட்டுக்கள் உட்பட அனைத்து எச்சரிக்கைகளையும் கப்பல் கப்டன் அலட்சியப்படுத்தியதைத் தொடர்ந்தே தமது படையினர் கப்பலின் மீது தாக்குதலை மேற்கொண்டதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
நஹோட்கா துறைமுகத்திலிருந்து இக் கப்பல் தமது அனுமதியின்றி புறப்பட்டதைத் தொடர்ந்தே தமது படையினர் இக் கப்பலைத் துரத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் ரஷ்யா தெரிவிக்கின்றது .
பலரது மரணத்திற்கு வழிவகுத்த இச் சம்பவம் தொடர்பில் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சு கப்டனின் நடவடிக்கை பொறுப்பற்றதும் ரஷ்யாவின் சட்டத்தை மீறியதுமாக உள்ளதென குற்றஞ்சாட்டியுள்ளத
!!!!!!!!!!!!!!!!
ஆப்பிரிக்க பிராந்தியத்தின் பொருளாதாரக் கருவூலம் என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரம் கடந்த தசாப்த காலத்தில் முதல் தடவையாக எதிர்மறையான வளர்ச்சியை காண்பித்துள்ளது .
கடந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களில் தென்னாப்பிரிக்க பொருளாதாரம் 1.8 வீதத்தினால் சுருங்கியுள்ளது.
இருந்தபோதிலும், 2008 ஆம் ஆண்டை ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது அந்தப் பொருளாதாரம் 3 வீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
உலக மட்டத்தில் ஏற்பட்ட தேவைக்கான வீழ்ச்சியால், நுகர்பொருட்கள் பெரும் தாக்கத்தை எதிர்கொண்டுள்ள
!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜப்பானின் சறுக்கலை எதிர்நோக்கியுள்ள பங்குச் சந்தை விலைகளை காப்பாற்றும் நோக்கில் பங்குகளை வாங்க அந்த நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதன் புதிய நிதி அமைச்சர் கௌரு யொசானோ கூறியுள்ளார்.
கடந்த 26 வருடங்களில் மிகவும் குறைந்த புள்ளிக்கு வீழ்ச்சியடைந்த டோக்கியோ பங்குச் சந்தை, இன்றைய தினத்தின் இறுதியில் ஓரளவு சுதாரித்து ஒன்றரை சத வீழ்ச்சியை காட்டியது.
பங்குப் பெறுமானங்களில் ஏற்படுகின்ற வீழ்ச்சி, சந்தையில் பெருமளவு பங்குகளை தம் வசம் வைத்திருக்கின்ற ஜப்பானிய வங்கிகளின் முதலீட்டுத்தளத்தை குறைப்பதன் மூலம் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கடந்த வாரம் பதவியேற்ற யொசானோ கூறியுள்ளார்.
கடந்த 12 வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்ட வால் ஸ்ரீட் பங்குச் சந்தையின் வீழ்ச்சியை அடுத்து டோக்கியோவின் வீழ்ச்சி வந்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!
T¦×¬Ùm CPeL°p ùTiLÞdÏ G§WôL SûPùTßm Tô#Vp ùRôpûXLs Utßm Õu×ßjRpLû[j RÓdL ®ûW®p Tô#Vp Õu×ßjRp RûPf NhPjûRd ùLôiÓYW UúX£V AWÑ EjúR£jÕs[Õ.
Tô#Vp ùLôÓûULÞdÏ Es[ôÏm ùTiLÞdLô] TôÕLôl× Utßm Cl©Wfû] ùRôPoTô] Y¯LôhÓ ùS±Øû\Lû[ YÏlTÕ ùRôPoTôL NhPm CVt\, U²R Y[ úUmTôhÓ AûUfNLjÕPu BúXô£jÕ YÚYRôL ùTiLs Utßm NêL úUmTôhÓj Õû\ CûQ AûUfNo úSô¬Vô Lv]ôu ùR¬®jRôo.
Tô#Vp ùLôÓûULs ùRôPoTô] ©Wfû]L°p 1999-m BiÓ ùLôiÓYWlThP NhP ®§Øû\Lú[ RtúTôÕ ©uTt\lTÓYRôL, Oô«tßd¡ZûU SûPùTt\ LÚjRWe¡p úTÑûL«p úSô¬Vô ϱl©hPôo.
Tô#Vp Tô§l×dÏs[ôÏm ùTiL°p TXo TVm, ÏÓmT ùLüWYm LôWQUôL ×Lôo ùNnY§pûX. G]úY Cl©Wfû] ùRôPoTô] YZdÏLs Ïû\kR A[®úXúV T§Yô¡u\] Gußm AYo á±]ôo.
2005-08 BiÓL°p UhÓm LtT¯l×, Tô#Vp ùLôÓûU ùRôPoTôL 3,906 YZdÏLs T§Yô¡Ùs[]. ùTôÕj Õû\ ¨ßY]eL°p UhÓm 27 JÝeÏ SPY¥dûL YZdÏLs úUtùLôs[lThÓs[RôL AjÕû\ RLYpLs ùR¬®jÕs[].
!!!!!!!!!!!!!!
EXLjûR RuTdLm LYok§ÝdÏm YûL«p, £\kR TPjÕdLô] BvLo ®ÚÕLû[ As°d Ï®jR “vXmPôd ªp#]o’ §ûWlTPjûRl TôodL Rôm ªLÜm BYÛPu CÚlTRôL AùU¬dL A§To TWôd JTôUô ùR¬®jRôo.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணியான கரியமில வாயுவின் உலக மூலங்களைக் கண்டு வரைவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தனது முதலாவது செய்மதியை விண் சுற்றுப் பாதையில் செலுத்தும் நடவடிக்கையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தோல்வி கண்டுள்ளது.
இந்த செய்மதியை காவிச் சென்ற ராக்கட் தென்துருவத்துக்கு அருகே தரை தட்டியதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அதன் மூலம், 270 மில்லியன் டாலர்கள் செலவில் மேற்கொள்ளப்பட்ட அந்தத் திட்டம் தோல்வியைத் தழுவியுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!
sports
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ள 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகேந்திரசிங் டோனி தலைமையிலான இந்திய அணி, 47 நாட்கள் பயணமாக நியூசிலாந்து சென்றுள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக 20 ஓவர், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. 20 ஓவர் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில், இந்திய நேரப்படி இன்று பகல் 11 மணிக்கு துவங்குகிறது. இதுவரை நடைபெற்ற பதினோரு 20 ஓவர் போட்டிகளில், இந்தியா 7 போட்டிகளில் வெற்றி பெற்று, முதல் நிலை அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது . அதிரடி ஆட்டக்காரர்களான வீரேந்திர ஷேவாக், கௌதம் காம்பீர், யுவராஜ்சிங் போன்றவர்களுடன் இந்திய அணி இன்று களம் இறங்குகிறது. நியூசிலாந்து நாட்டில் குளிர்காலம் தொடங்கி இருப்பதும், அங்கு வீசும் கடும் காற்றும் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனை மீறி, இந்தியா, நியூசிலாந்து அணியை வென்று சாதனை படைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று Muk;gk; Mfpa20 ஓவர் கிரிக்கெட்போட்டிapy; Kjypy; JLg;ngLj;jhba ,e;jpa mzp 20 Xtupy; 8 tpf;Nfl; ,og;gpw;f;F162 xl;lq;fis vLj;Js;sJ.
!!!!!!!!!!!!!!!!!!
1 euro = 147.33 sl /64.07in
1 us $ = 114.55 sl / 49.81in
1 swiss fr = 98.85sl / 42.99in
1 uk pound = 166.69sl / 72.48in
1Saudi Arabian Riyal = 30.54sl /13.29 in

Leave a Reply

Your email address will not be published.