வன்னிக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுப்பு

முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு உணவு மற்று மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு திடீரென மறுத்துள்ளது.

இத்தகவலை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

உணவு மற்றும் மருந்துப் பொருட்களை கப்பல் மூலம் கொண்டு செல்வதற்கு தயாரான போது இறுதி நேரத்தில் காரணம் எதுவும் இன்றி அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சிரசி விஜயரட்னவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் மேலதிகமாக எதனையும் தெரிவிக்க விரும்பவில்லை.

இதேவேளை, நிவாரணப் பொருட்களை முல்லைத்தீவுக்கு கொண்டு செல்வது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணைய அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

இன்னும் ஓரிரு நாட்களுக்குள் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கொண்டு செல்லப்படவில்லையானால் முல்லைத்தீவில் இயற்கையான மரணங்கள் ஏற்படலாம் என தொண்டு நிறுவன அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.