டென்மார்க்கில் பிசுபிசுத்த சிறிலங்காவின் பொய்ப்பிரச்சாரம்.

தமிழ் மக்களை காப்போம் என்ற சிறிலங்கா அரசின் பொய்ப் பிரச்சாரத்தினை டென்மார்க் வாழ் தமிழர்கள் வெற்றிகரமாக முறியடித்து சிறிலங்காவின் அரச பயங்கரவாதத்தை தோலுரித்துக்காட்டினார்கள்.

தமிழ் மக்களை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் ஊர்வலம் ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை டென்மார்க் பாராளுமன்றத்திற்கு முன்னால் நடாத்த சுவீடனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை அறிந்த டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் “தமிழ்மக்களை பாதுகாப்போம்” என்று கூறிக்கொண்டு தமிழ்மக்களுக்கு எதிராகவே சிங்களவர்கள் பிரச்சாரம் செய்யப்படுவதை முறியடிப்பதற்காக அங்கு கூடியிருந்தனர். தமிழ்மக்களை கண்ட சிங்கள இனத்தவர்கள் காவல்துறையினரை அங்கு பாதுகாப்பிற்கு அழைத்தனர்.

அங்கு வந்த காவல்துறை அதிகாரி தமிழ் மக்களிடம் வந்து உடனடியாக கலைந்து போகுமாறு வற்புறுத்தினார். அதற்கு காரணமாக தமிழ்மக்களிடம் அங்கு கூடுவதற்கு தமிழர்கள் முன் அனுமதி பெறவில்லை எனக் கூறினார். அதனை எதிர்த்த தமிழ்மக்கள் தாமும் தமது இனமாகிய தமிழ்மக்களை காப்போம் என்ற ஊர்வலத்தில் கலந்துகொள்ளவே வந்ததாக விளக்கமாக எடுத்துக் கூறினார்கள். இதனைக்கேட்ட காவல்துறை அதிகாரி மிகவும் அதிர்ச்சியுடன் “அப்ப ஏன் அவர்கள் நீங்கள் தமக்கு எதிராக ஊர்வலம் செய்வதாக கூறுகின்றனர்” என வினாவினார். தமிழ்மக்களும் தமக்கும் தெரியவில்லை எனக் கூறினர். தமிழ்மக்கள் அனைவரும் “தமிழ்மக்களை கொல்லாதே” மற்றும் சிறிலங்கா அரசின் தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலையை சித்தரிக்கும் பதாதைகள் மட்டுமே வைத்திருந்தனர்.

சிறிது நேரத்தில் காவல்துறையினர் அங்கு நின்ற 50 மேற்பட்ட தமிழ்மக்களை அதே இடத்தில் நின்று ஆர்ப்பாட்டம் செய்யுமாறு கூறிவிட்டு அங்கு நின்ற சுமார் 30 சிங்கள இனத்தவர்களை வேறு இடத்துக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இரண்டு பகுதியினருக்கும் இடையில் 2 பெரிய காவல்துறை வண்டிகளையும் நிறுத்தி வைத்து தாமும் காவல் நின்றனர்.

தமிழ்மக்களிடம் வந்த காவல் அதிகாரியுடன் கதைத்த தமிழ்மக்கள் காவல்துறையினரின் செயற்பாட்டை பாராட்டி இதைத்தான் நாம் 60 ஆண்டுகளாக உலகத்திற்கு கூறிவருகின்றோம் என கூறினர். ஈழமக்களின் நிலையை விளக்கமாக கேட்டறிந்த காவல்துறை அதிகாரி அதிர்ந்து போனார். அப்போது தமிழ்மக்கள் அந்த அதிகாரியிடம் விளக்கமாக சிங்கள இனத்துடன் நாம் சேர்ந்து வாழமுடியாது. இப்படி பிரிந்து தான் இருக்கமுடியும். இதை இலங்கைக்கு சென்ற போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்த உங்கள் அதிகாரிகள் நீங்கள் இப்ப செய்தது போன்று செய்திருக்கவேண்டும் என்று விளக்கமாக கூறினர். அங்கே நடைபெற்ற தமிழ் இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிங்க அரசின் தமிழ்மக்களை காப்போம் என்ற கபட பிரச்சாரத்தையும் தோலுரித்து காட்டினர்.

மாலை 3 மணியில் இருந்து 6 மணிவரை ஊர்வலம் என விளம்பரப்படுத்தியிருந்த சிங்கள இனத்தவர் தமிழ் மக்களின் சிறிலங்கா அரசிற்கெதிரான கோசங்களை பொறுக்க முடியாது 5 மணிக்கே அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்பொழுது அவர்கள் கொண்டு சென்ற சிறிலங்கா தேசியக்கொடியொன்றை கைப்பற்றிய தமிழ் மகன் ஒருவர் அதை சிங்களவர் முன்னே தீ வைத்து எரித்து சாம்பராக்கினார்.

உடனடியாக அங்கு வந்த டென்மார்க் காவல் துறையினர் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க சிங்கள இனத்தவர்கள் தங்கள் தேசியக்கொடி எரிவதையும் கண்டுகொள்ளாமல் திரும்பிப் பார்க்காமல் கலைந்து சென்றனர். இறுதியில் தமிழ்மக்களும் காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு நன்றி கூறி கை கொடுத்துவிட்டு கலைந்து அமைதியாக வீடுசென்றனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.