முல்லைத்தீவுக்கு நிவாரணப் பொருட்களுடன் கப்பல் மீண்டும் செல்கிறது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மற்றுமொரு தொகுதி நோயாளாகளை அழைத்து வரும் வகையில் சற்று முன்னர் கிறீன் ஓசியானிக் கப்பல் அனைத்துலக செஞ்சிலுவக் குழுவின் அனுசரணையுடன் முல்லைத்தீவை நோக்கிப் புறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கப்பலில் கோதுமை மாவு உள்ளிட்ட ஒரு தொகுதி உணவுப் பண்டங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதுமாத்தளன் பகுதியிலிருந்து தொடர்ந்து நோயாளர்கள், கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் காயங்களுக்கு இலக்கானோர் திருகோணமலைக்கு அழைத்துவரப்படும் நிலையில், சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான மருந்து வகைகள் பெருமளவில் தேவைப்படுவதாகவும், இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் மருத்துவப் பணிகளுக்கான இணைப்பாளர் டாக்டர் ஞானகுணாளன் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக மருத்துவ சிகிச்சைகள் வழங்குவது
பற்றியதான இணைப்புக் குழுவின் கூட்டமும் இன்று
மாலை இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.