நிவாரணம் பொருட்களை அனுப்புகிறாறாம் சோனியா

டெல்லி: இலங்கை விவகாரத்தில் மெளனம் சாதித்து வருவதால் தமிழகத்தில் மக்களிடையே காங்கிரஸ் மீது வெறுப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்களை அனுப்ப அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது.

போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கும், இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கும் உணவு, உடை, மருந்துப் பொருட்களை அனுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்தப் பொருட்களைத் திரட்டுமாறு தமிழகம் உள்ளிட்ட தென் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பொருட்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கும் சோனியா உத்தரவிட்டுள்ளார்.

போர் நிறுத்தம் தொடர்பாக தீவிர நடவடிக்கை எதையும் எடுக்காமல், இப்போது திடீரென நிவாரணப் பொருட்களை அனுப்புவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

விரைவில் மக்களவைத் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.