விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்பட மாட்டாது: சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாதென இராணுவத் தளபதி மேஜர் சரத் பொன்சேகா உறுதிபடத் தொவித்துள்ளார்.


புலிகளை முற்றாக அழித்து ஒழிக்கும் வரை மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகள் எந்தக் காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாதெனவும்
அதே போன்று தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தவித உடன்படிக்கையும் செய்து கொள்ளப்படமாட்டாதென்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்பக் கூட்டுத்தாபனத்துக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளர்.

இராணுவத் தளபதி மேலும் தெரிவிக்கையில், 2006 ஆம் ஆண்டிலிருந்து இந்த மனிதாபிமான நடவடிக்கையை உறுதியுடனும்; அர்ப்பணிப்புடனும் இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

அவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைளின் முன்னேற்றங்களிலிருந்து தாம் எந்தவித காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.