இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையங்களில் 100 ற்கு மேற்பட்டோருக்கு அம்மை நோய்: பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதி

வன்னிப் போர்முனைப் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மத்தியில் அம்மைநோய் தொற்றியிருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட அம்மை நோயாளர்களுக்கு பூவரசங்குளம் வைத்தியசாலையில் தனியான சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.


அம்மை நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், பூவரசங்குளம் வைத்தியசாலையில் அம்மை நோயாளர்களுக்காகத் தனி இடம் ஒதுக்கி, அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரேயொரு வைத்தியரையும், தாதி ஒருவரையும், மருத்துவமாது ஒருவரையும் மாத்திரம் கொண்டுள்ள பூவரசங்குளம் வைத்தியசாலைக்கு அம்மை நோய்க்குரிய மருந்துகளை பிராந்திய சுகாதார அலுவலகம் வழங்கியிருப்பதாகவும், எனினும் ஆளணி பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் புதிய ஆளணி அங்கு இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து இந்த வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ள அம்மை நோயாளர்களை, முகாம்களில் உள்ள அவர்களது உறவினர்கள் சென்று பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.