காங்கோவுக்கு ஐ.நா மேலதிக படையை அனுப்புகிறது

லோர்ட் றெசிஸ்டண்ட் ஆர்மி அதாவது எல் ஆர் ஏ எனப்படுகின்ற கிளர்ச்சிக்குழுவுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக காங்கோ ஜனநாயகக் குடியரசின் வட பகுதியில் தமது பிரசன்னத்தை பலப்படுத்துவோம் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

எல் ஆர் ஏ கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்படும் டுங்கு என்னும் நகருக்கு மேலதிக இராணுவத்தினருடன் பல ஹெலிக்கொப்டர்களையும் அனுப்பவுள்ளதாக ஐ. நா தெரிவித்துள்ளது.

அடுத்த சில வாரங்களில் மேலும் 1500 எகிப்திய சிப்பாய்கள் காங்கோவில் இருப்பார்கள் என்று அங்கு செயற்படும் ஐ. நாவின் சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை தாக்கத் தவறிவிட்டார்கள் என்று, காங்கோவில் செயற்படும் ஐ.நாவின் பிரிவு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த நத்தார் பண்டிகை முதல் இதுவரை எல் ஆர் ஏயினால் 1000 பேர்வரை அங்கு கொல்லப்பட்டுள்ளார்கள்.

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.