ரஹ்மானின் ஆஸ்கர் பரிசுக்கு வரி விலக்கு: ப.சிதம்பரம்

டெல்லி: இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்குக் கிடைத்துள்ள ஆஸ்கர் பரிசுக்கு வரி விலக்கு நிதியமைச்சருக்கு சிபாரிசு செய்வேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ஸ்ல்ம்டாக் மில்லியனர் படம் நேற்று நடந்த ஆஸ்கர் விழாவில் விருதுகளை அள்ளிச் சென்றது. நம்ம ஏ.ஆர். ரஹ்மான் 2 விருதுகளைப் பெற்று அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டார்.

இந்த நிலையில் ரஹ்மானின் ஆஸ்கர் விருதுக்கான பரிசுக்கு வரி விலக்கு நிதியமைச்சருக்குப் பரிந்துரை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த நேரடி வரி மற்றும் கலால் வரி வாரியங்களுக்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு ப.சிதம்பரம் பேசுகையில்,

இந்தியாவை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார். ஆஸ்கார் விருதுக்காக ரஹ்மானுக்கு பணம் பரிசாக வழங்கப்பட்டு இருந்தால் அவருக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று நிதி அமைச்சரிடம் பரிந்துரை செய்வேன்
என்றார்.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.