செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌விர தமிழகம் முழுவதும் நீதிமன்றங்கள் நாளை திறப்பு

சென்னை உய‌ர் ‌‌‌நீ‌திம‌ன்ற‌ம் மற்றும் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ வளாகத்தில் உள்ள ‌நீ‌திம‌ன்ற‌ங்களைத் தவிர தமிழக‌த்‌தி‌ல் உள்ள அனைத்து கீழ் ‌நீ‌திம‌ன்ற‌ங்களும், தீர்ப்பாயங்களும் நாளை (25ஆ‌ம் தே‌தி) திறக்கப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற பதிவாளர் (நிர்வாகம்) நேற்றிரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழ் நீ‌திம‌ன்ற‌ங்களும், சென்னையில் மூன்று இடங்களில் உள்ள மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீ‌திம‌ன்ற‌ங்களும், சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌துக்கு வெளியே அமைந்துள்ள அனைத்து தீர்ப்பாயங்களும் நாளை (25ஆ‌ம் தேதி) முதல் செயல்படும். உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற சம்பவம் காரணமாக கீழ்நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் மூடப்பட்டிருந்த வேலை நாட்கள், இனிவரும் நாட்களில் சரிசெய்யப்படும். இதுதொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

நீ‌திம‌ன்ற‌ வளாகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முதன்மை மாவட்ட நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும். நீ‌திம‌ன்ற‌ ஆவணங்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் நீ‌திம‌ன்ற‌ வளாகத்திற்கு வெளியே சற்று தூரத்தில் காவல‌ர்க‌ள் நிறுத்தப்பட வேண்டும்.

உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வளாகத்தில் கடந்த 19ஆ‌‌ம் தேதி நடந்த சம்பவத்திற்கு பிறகு கீழ் நீ‌திம‌ன்ற‌ங்களில் 20ஆ‌ம் தேதி முதல் 23ஆ‌ம் தேதி வரை நீ‌திம‌ன்ற‌ வளாகத்திற்கு உள்ளே ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்திருந்தால் அதுகுறித்து முதன்மை மாவட்ட நீதிபதிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறை இனிவரும் காலங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் மற்றும் அதன் வளாகத்தில் உள்ள நீ‌திம‌ன்ற‌‌ங்கள் மற்றும் மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளை எப்போது திறக்கப்படும் என்பது குறித்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற நீதிபதிகள் இன்று (24ஆ‌ம் தே‌தி) கூடி முடிவெடுக்கிறார்கள்.

Source & Thanks : amil.webdunia.com

Leave a Reply

Your email address will not be published.