தொடர்ந்தும் கொலைப் பொறியாகும் ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’: 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை

வன்னியில் சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதி மீது இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வலைஞர்மடம், பொக்கணை ஆகிய ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை 5:30 நிமிடத்துக்கும் பின்னர் பிற்பகல் 3:30 நிமிடத்துக்கும் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 49 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.