50 காசுகளில் இந்தியா முழுக்க பேசலாம் ‘3 ஜி’ சேவை சென்னையில் அறிமுகம்

சென்னை : பி.எஸ்.என்.எல்., சார்பில் இந்தியா முழுவதும் எந்த நெட்ஒர்க்கிற்கும், எந்த பகுதிக்கும் “50 காசுகளில்’ பேசும் “இந்தியா கோல்டன் 50′ எனும் திட்டம் மார்ச் 1ம் தேதி முதல் துவக்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத் தின் சார்பில் மூன்றாம் தலைமுறை “3 ஜி’ சேவை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப் பட்டது.

தமிழக முதல்வர் கருணாநிதி, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபடியே, “வீடியோ கான்பரன்சிங்’ மூலம் இச்சேவையை அறிமுகப்படுத்தினார். 3 ஜி சேவையில் உள்ள “வீடியோ கால்’ மூலம் முதல்வரும், தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவும் பேசிக் கொண்டனர்.

முதல்வர் கருணாநிதி வீடியோ கான்பரன்சிங் மூலம் இச் சேவையை துவக்கி வைத்து பேசியதாவது: சில வளர்ந்த நாடுகளில் மட் டுமே அறிமுகப்படுத்தப்பட்டு நடப்பில் உள்ள இந்த “3 ஜி’ சேவை, தற்போது முதன் முதலாக இந்தியாவிலும் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ். என்.எல்., மூலம் சென்னையிலேயே துவக்கப்படுகிறது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஒரே நேரத்தில் ஏழை மக்களுக்காக நடத்தும் இதுபோன்ற சாதனைகளை நாம் என் றைக்கும் நிரந்தர சரித்திர கல்வெட்டுக்களாக ஆக்குகிறோம்.

இவ்வளவு நெருக்கடியான நேரத்திலும், நான் இங்கே வந் திருப்பது என் உடலில் ஒரு துளி ரத்தம் ஒட்டிக் கொண்டிருந்தாலும், உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை மக்கள் பிரச் னைக்காக, நாட்டு நன்மைக் காக போராடுவேன் என்பதற்காகத் தான். இந்தியாவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட “ஒன் இண்டியா’ திட்டம் போல், மற்றொரு திட்டம் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தால் வரும் மார்ச் 1ம் தேதி முதல் “இண்டியா கோல்டன் 50′ என்ற பெயரில் அறிமுகமாகிறது.

இந்தியாவில் எங்கிருந்தும் 50 பைசாவில் பேச வாய்ப்பளிக்கும் இந்த திட்டம் மக்கள் பயன் பாட்டிற்கும், பி.எஸ்.என்.எல்., வளர்ச்சிக்கும் உதவிடும். கருணாநிதி என்றைக்கும் ஏழை எளியோரின் அன்பனாக, பாட்டாளி மக்களின் தோழனாக இருப்பான். இந்த அரசை நீடிக்க விடுங்கள், மத்திய அரசை வாழ விடுங்கள், மத்திய, மாநில அரசுகளை ஒன்றுபடுத்தியிருக்கும் ஒருமைப்பாட்டை காப்பாற்றுங் கள், இறையாண்மையை காப் பாற்ற முன்வாருங்கள், வன் முறைகளால் நாட்டில் உள்ள நன்முறைகளை கெடுக்காதீர்கள். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜா பேசியதாவது: கடந்த 19 மாதங்களில் இத்துறையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 2006-07ல் 13 சதவீதமாக இருந்த தொலை அடர்த்தி தற்போது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2007ம் ஆண்டில் 70 லட்சம் இணைப்புகள் வழங் கப்பட்டன. ஆனால், கடந்த ஜனவரி மாதத் தில் அதிகபட்சமாக 1.5 கோடி தொலைபேசி இணைப்புகள் பி.எஸ்.என்.எல்., மூலம் வழங் கப்பட்டுள்ளன.

இந்த “3 ஜி’ சேவை ஏற்கனவே பி.எஸ்.என்.எல் – எம்.டி.என். எல்., மூலம் துவக்கப்பட்டு, வர்த்தக ரீதியிலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள “3 ஜி’ சேவை வரும் ஏப்ரல் 20ம் தேதி வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்துவிடும். மற்ற மாநிலங்களிலும் விரைவில் இச்சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு ராஜா பேசினார்.

நிகழ்ச்சியின் முடிவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பி.எஸ்.என்.எல்., நிறுவன தலைவர் குல்தீப் கோயல் கூறியதாவது: சென்னையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்த “3 ஜி’ சேவை விரைவில் மற்ற நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதில் அதிவிரைவு “இன்டர்நெட் டவுண்லோடிங், வீடியோ காலிங், வீடியோ ஸ்டிரீமிங்’ உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஏற்கனவே அறிமுகப்படுத்தப் பட்ட “ஒன் இண்டியா’ திட்டத் தில் முதலில் குறைந்த பட்ச மாத ரீசார்ஜ் 799 ரூபாய் என இருந்தது. இது கடந்தாண்டில் 299 ரூபாயாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத் தில் 375 ரூபாய் ரீசார்ஜ் கூப்பனில் 50 ரூபாய்க்கு இலவசமாக பேசும் வசதி வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் எந்த எண்ணிற்கும் பேச 50 காசுகளும், எஸ்.எம்.எஸ்.,க்கு 50 காசுகளும் கட்டணம் வசூலிக்கப்படும்.

இரண்டு பி.எஸ்.என்.எல்., லேண்ட் லைன், மொபைல், வில் போன்களுக்கு பேச நிமிடத் திற்கு 20 பைசாவும், ஒரு பி.எஸ். என்.எல்., எஸ்.டி.டி., எண் ணுக்கு நிமிடத்திற்கு 30 காசுகளும் கட்டணம் குறைத்து வசூலிக்கப்படும். லேண்ட் லைனிலிருந்து மொபைல் போனுக்கு பேச, “90′ வினாடியிலிருந்து 120 வினாடியாக நேரம் உயர்த்தப்பட்டுள் ளது. “3 ஜி’ சேவையை தடையின்றி வழங்க நோக்கியா, சாம்சங், சோனி மொபைல் நிறுவனங்கள் மற்றும் டேட்டா கார்டுகள் வழங் கும் நிறுவனங்களுடனும் ஒப் பந்தம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 50 லட்சம் “3 ஜி’ இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு குல்தீப் கோயல் தெரிவித்தார்.

நிகழ்வில், பி.எஸ்.என்.எல்., சென்னை தொலைபேசி முதன் மை பொது மேலாளர் வேலுசாமி, தொலைத்தொடர்பு செயலர் சித்தார்த் பெகுரா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

3 ஜி’ சேவைக்கு தனி “சிம் கார்டு‘ : பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சார்பில் மூன்றாம் தலைமுறை “3ஜி’ மொபைல் சேவை சென்னையில் துவக் கப்பட்டுள்ளது. இச்சேவை வரும் ஏப்ரல் மாதம் 20ம் தேதி வர்த்தக ரீதியாக பயன் பாட்டிற்கு வருகிறது. இதற்கு தனி சிம் கார்டு மற்றும் எண் வழங்கப்படுகிறது. இந்த சிம் கார்டின் விலை 300 ரூபாய். இதில் பேசும் வசதி அளிக்கப் படவில்லை. ஏழு நாட்கள் “வேலிடிட்டி’ வழங்கப்பட் டுள்ளது. 2 ஜி சேவையிலிருந்து 3ஜி சேவைக்கு நேரடியாக மாறும் வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இதில் வாய்ஸ் மற்றும் டேட் டா பிளான் எனும் இரண்டு திட்டங்கள் உள்ளன. இரண்டு திட்டங்களிலும் போஸ்ட் பெய்டு மற்றும் பிரிபெய்டு வசதிகளும் உள்ளன.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.