ஐகோர்ட் மோதல் பிரச்னைக்கு முதல்வர் தீர்வு காண வேண்டும் , உண்ணாவிரதம் தேவையில்லை : ஜெ., அறிக்கை

சென்னை : வக்கீல்கள் – போலீஸ் இடையே கடந்த 19ம் தேதி நடந்த மோதலுக்கு உரிய முறையில் தீர்வு காண வேண்டுமே தவிர உண்ணாவிரதம் இருப்பது என்பது தேவையற்றது என அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

வக்கீல்கள் – போலீசார் சமாதானம் செய்யாவிட்டால் மருத்துவமனையில் இருந்தே உண்ணாவிரதம் ‌மேற்கொள்ளயிருப்பதாக, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள ஜெ., அறிக்கையில் கூறியதாவது : வன்முறையை தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், இப்படி அறிவுரை கூறுவது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கடந்த 19ம் தேதியன்று சென்னை ஐகோர்ட்டில் நடந்த மோதலின் போது பலர் படுகாயமடைந்தனர், பல வாகனங்கள் சேதமடைந்தன . அதற்கு என்ன பதில். சேதமடைந்த வாகனங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் மக்கள் விரும்புகின்றனர். அரசு இந்த சம்பவத்துக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு ஜெ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.