‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (23.02.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் யுத்தநிறுத்தத்திற்கு விடுதலைப் புலிகள் தயாரென அறிக்கையொன்றின் மூலம் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நாடேசன் தெரிவித்துள்ளதாக ..பி தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களிற்கு நிரந்தரமான அரசியல் தீர்வு சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனும்,உத்தரவாதத்துடனும் கிடைக்குமாயின் விடுதலைப் புலிகள் ஆயுதமேந்தத் தேவையில்லைஎன அவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச சமூகம் யுத்தநிறுத்தமொன்றினை மேற்கொள்ள சர்வதேச சமூகம் சகல விதமன நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.அத்துடன் இராணுவ நடவடிக்கைகளாலன்றி அரசியல் தீர்வு மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் இணைத்தலைமை நாடுகளிற்கு பா.நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை தமிழ் மக்களிற்கான தனி நாட்டு கோரிக்கை குறித்தும் அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. “சர்வதேச சமூகம் தமிழர்களின் தனி நாட்டு கோரிக்கை குரித்து தயக்கம் காண்பிக்கும் சமயம் நாட்டில் நிலவும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக தனிநாடு ஒன்றே அரசியல் தீர்வாக அமையும்என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை புலிகள் யுத்த நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளமுடியாதெனத் தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயக்கார விடுதலை புலிகள் நிபந்தனைகள் இல்லாது முதலாவதாக ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்,” எங்களது நிலைப்பாடு அவர்கள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு சரணடைய வேண்டும். எங்களது இந்நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லைஎனத் தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப்புலிகளின் இரு விமானங்கள் கடந்த வெள்ளிக்கிழமை தலைநகருக்குள் ஊடுருவியதையடுத்து விமானப்படையினர் மேற்கொண்ட விமான எதிர்ப்பு எறிகணைத் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். விமான எதிர்ப்பு நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்த மாணவியொருவர் உட்பட நான்கு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜகிரியவைச் சேர்ந்த மாணவியான உதேஷனி (வயது 15), மட்டக்குளியைச் சேர்ந்த ராஜமணி பிரபாகரன், பேலியகொடையைச் சேர்ந்த நிமல் மற்றும் களனியைச் சேர்ந்த சீலவங்ச ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர் . இவர்களது உடல்கள் தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் சிறிலங்காவின் வான்படை பேரழிவை சந்தித்திருக்கும் என பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப் புலிகளின் இலக்கு அரச தலைவர் இல்லம் அல்லது வான்படை தலைமையகமாக இருக்கலாம். இந்த நடவடிக்கையில் விடுதலைப் புலிகள் வெற்றி பெற்றிருந்தால் சிறிலங்கா வான்படை இல்லாது போயிருக்கும்.
கட்டுநாயக்க வான்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தாக்குதல் வானூர்திகளும், வான்படை தலைமையகமும் முற்றாக அழிக்கப்பட்டு இருக்கும் என்றார்.
இதனிடையே, கட்டுநாயக்க வான்படை தளத்திற்கு அண்மையில் வீழ்ந்த விடுதலைப் புலிகளின் வானூர்தியின் உட்பகுதிகளில் இருந்து 110 கிலோ எடை கொண்ட 11 குண்டுகள் மீட்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புலிகளின் இரு விமானங்கள் கடந்த வெள்ளிக்கிழமை தலைநகருக்கு ஊடுருவிதையடுத்து விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமான எதிர்ப்பு எறிகணைத் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் . விமான எதிர்ப்பு நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்த மாணவியொருவர் உட்பட நான்கு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜகிரியவைச் சேர்ந்த மாணவியான உதேஷனி (வயது 15), மட்டக்குளியைச் சேர்ந்த ராஜமணி பிரபாகரன் , பேலியாகொடையைச் சேர்ந்த நிமல் மற்றும் களனியைச் சேர்ந்த சீலவங்ச ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். இவர்களது தற்போது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!
அம்பாறை மாவட்டத்தில் உள்ள இங்கினியாகல கிரிமிற்றிய பகுதியில் நேற்று முன்நாள் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலில் 20 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கினியாகல ரத்மல்கஹஎல கிரிமிற்றிய கிராமத்திலும் அருகில் உள்ள அழகேகன கிராமத்திலும் நேற்று முன்நாள் சனிக்கிழமை மாலை 3:30 நிமிடமளவிலும் மாலை 5:30 நிமிடமளவிலும் ஆயுதபாணிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அம்பாறைபிபில வீதியில் அம்பாறை நகரின் மேற்குப் புறமாக சுமார் 30 கிலோ மீற்றர் தூரத்தில் காட்டுப்புறப் பகுதியில் உள்ள இந்த இரு சிங்கள விவசாயக் கிராமங்களுமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
இக்கிராங்களுக்கு சிறிய ரக ஆயுதங்களுடன் சென்றவர்களே கிராமவாசிகள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்தனர். 7 பேர் காணாமல் போய் இருந்தனர் .
தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து சென்றதும் படையினர் மற்றும் காவல்துறையினருக்கு இது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அங்கு விரைந்த படையினரும் காவல்துறையினரும் காட்டுப் பகுதியில் தேடுதலை நடத்திய போது, அச்சத்தால் மறைந்திருந்த நால்வர் மீட்கப்பட்டதுடன் மூன்று உடலங்களும் கைப்பற்றப்பட்டன.
இத்தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 6 பேர் பெண்கள், 2 பேர் சிறுவாகள்.
கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் அம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அம்பாறை இங்கினியாகலை ரத்மல்கம பிரதேசத்தில் 21 சிங்கள விவசாயிகள் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்துள்ளமைக்கு தாமே காரணம் என படைத்தரப்பு சுமத்திய குற்றச்சாட்டை தமிழீழ விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதி நகுலன் இந்த மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சர்வதேச ரீதியில் வெறுப்பை ஏற்படுத்தும் பிரசாரமே இந்தப் படுகொலைகளின் பழியை எம்மீது சுமத்தும் குற்றச்சாட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

சிங்களப்படையினர் சிங்கள மக்களை ஆயுததாரிகளாக்கி வருகின்ற நிலையில் அவர்களுக்கு இடையில் உருவாகியுள்ள குழுவினரே இந்தக்கொலைகளுக்கு காரணமாக இருக்கலாம் என நகுலன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இருகிராமங்களுக்கிடையில் விவசாய நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளே இப்படுகொலைகளுக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூவரும் அடங்குவதாக அந்தப் படைக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர கூறியிருக்கின்றார்.
.
!!!!!!!!!!!!!!!!!!!
வன்னிப் பிரதேசத்தில் யுத்தம் காரணமாக சிக்கித் தவிக்கும் பெருந்தொகையான அப்பாவி சிவிலியன்களை பாதுகாப்பாக வேறு பிரதேசங்களுக்கு இடம் நகர்த்த அமெரிக்கா உதவி வழங்கவுள்ளது . யுத்த பிரதேச சிவிலியன்களை இடம் நகர்த்துவது குறித்த அமெரிக்காவின் திட்டத்திற்கு இணைத்தலைமை நாடுகள் பூரண ஆதரவை தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் பசுபிக் படைப் பிரிவைச் சேர்ந்த உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கக் கடற்படை மற்றும் வான் படை வளங்களைப் பயன்படுத்தி சிவிலியன்கள் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது . வட கிழக்கு கரையோரப் பகுதியில் சிக்கித் தவிக்கும் சிவிலியன்களைப் பத்திரமாக பாதுகாப்பதே முதன்மை நோக்கு என அமெரிக்க மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்படும் சிவிலியன்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டு இடைத் தங்கல் முகாம்களில் அல்லது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படவுள்ளனர். அமெரிக்கப் படையினரின் இந்த மனிதாபிமான பணி குறித்து தமக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தப் பணிகள் எப்போது நடைபெறும் எனத் தெரிவிக்க முடியாதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

சிவிலியன்களைப் பாதுகாப்பாக இடம் நகர்த்துவதற்கு மேலும் சில நாடுகளிடம் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். யுத்த பிரதேசத்திலிந்து சிவிலியன்களை வெளியேற விடாது தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக தடுத்து வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார் . தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இறுதி கட்ட மோதல்கள் நடைபெற்று வருவதனால் சிவிலியன்களைக் குறித்த பிரதேசத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை மிகவும் அவதானமாக மேற்கொள்ளப்பட வேண்டும் அதேவேளை இதேபோன்ற மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இந்தியாவும் விருப்பம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இணைத் தலைமை நாடுகளின் இந்த நடவடிக்கை இந்தியாவின் ஒத்துழைப்புடன் நடைபெறுகின்றதா என்பது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன
!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில், முல்லைத்தீவுப் பிரதேசத்தில் நடத்தப்படும் ஷெல், பீரங்கி, விமானத்தாக்குதல்களால் இரத்த வெள்ளம் ஓடுகின்றது. அந்த வகையில் நேற்று நடத்தப்பட்ட அகோர ஷெல் தாக்குதல்களில் 48 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கை விவகாரத்தைப் பாதுகாப்புச் சபையில் எழுப்புவது குறித்து ஆராயப் போவதாக பிரிட்டனும் பிரான்ஸும் தெரி வித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபி மான விவகாரங்களுக்கான உதவிச் செய லாளர் ஜோன் ஹோம்ஸ் இலங்கையில் இருந்து நியூயோர்க் திரும்பிய பின்னர் பிரிட்டனும் பிரான்ஸும் இது குறித்து தீவிரமாக ஆராய்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
ஜோன் ஹோம்ஸ் நியூயோர்க்கிற்கு திரும்பிய பின்னர் இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபையில் விவாதிக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கப்போவதாக ஐக்கியநாடுகளுக்கான பிரிட்டிஷ் தூதுவர் ஜோன் சவெர்ஸ் தெரிவித்துள்ளார்
இலங்கை நிலைவரம் குறித்து பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் ஐ.நாவுக்கான தூதுவர்கள் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள அதேவேளை ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் மேரி றொபின்ஸன் கடும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் மனித உரிமை ஆணையாளர் மேரி றொபின்ஸன் இலங்கை நிலைவரத்தை ‹டானின் டார்பூர் மற்றும் கொங்கோவுடன் ஒப்பிட்டுள்ளார்.
இப்படி அளவுக்கதிகமாக படைப்பலம் பிரயோகிக்கப்படுவதை கேள்விக்குட்படுத்தாவிட்டால், வாழ்வின் பெறுமதியை நாங்கள் குறைத்து விடுகிறோம் என அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கை நிலைவரம் அதிர்ச்சியூட்டுவதாகவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசு தான் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக உலக நாடுகளை நம்பவைத்துள்ளதால் இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கும் மனோநிலையில் ஐ.நாவோ அதன் செயலாளர் நாயகமோ இல்லை என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
இலங்கையில் இரு தரப்புகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது குறித்து கவலை வெளியிட்டுள்ள பிரான்ஸின் தூதுவர் ஜீன் மோரிஸ் ரிப்டோர்ட் இலங்கை விஜயத்தை ஜோன்ஹோம்ஸ் முடித்துக்கொண்ட பின்னர் பாதுகாப்புச் சபையில் இலங்கை குறித்து விவாதிப்பது பற்றித் தாங்கள் ஆராயப்போகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க பாதுகாப்புச் சபையின் இம்மாதத்துக்கான தலைவரும் ஜப்பான் தூதுவருமான யுகியோ டகாசு தனது நாட்டின் கொள்கையை தனதுதலைமைத்துவத்தின் கொள்கையிலிருந்து பிரித்துப் பார்ப்பது கடினம் எனத் தெரிவித்துள்ளார் .
விடுதலைப் புலிகள் தமது இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மனிதாபிமான விவகாரங்களைப் பயன்படுத்துகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பொதுமக்களின் மனிதாபிமான நிலை குறித்துக் கவனம் செலுத்துவது விடுதலைப் புலிகளுக்கே உதவியாக அமையும் என்றும் அவர் கூறினார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப்புலிகளை 73 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் வரையறுத்தி ஒதுக்கி விட்டதாகவும் புலிகளின் ஆயுத தளபாடங்களில் 90 வீதமானவற்றையும் உட்கட்டுமான வசதிகளையும் இராணுவத் தினர் முற்றாக அழித்துள்ளதாகவும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடிய உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் .
புலிகளுக்கு எதிரான போரில் 57 ஆம் 58 ஆம் படையணிகளும் மற்றும் ஒரு விசேட அணியும் ஈடுபட்டுள்ளதாகவும் 57 ஆவது படைப்பிரிவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தை நோக்கி முன்னேறிச் செல்வதாகவும் அடுத்து வரும் சில தினங்களில் புதுக்குடியிருப்பை படையினர் கைப்பற்றி விடுவர் என்றும் உதயநாணயக்கார மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆறு தினங்களாக அங்கு இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கைகளில் புலிகளின் பெருந்தொகையான ஆயுதங்களையும் விடுதலைப்புலிகளின் 65 cடலங்களையும் மீட்டுள்ளதாகவும் அவர் மேலும் சொன்னார்.
!!!!!!!!!!!!!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை ஆக்கிரமிப்பு செய்யும் சிறிலங்கா படையினருக்கும் விடுதலை புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற இருதினங்களான சமரில் 200 படைச்சிப்பாய்கள் பலியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் செவ்வாய், புதன்கிழமைகளில் புதுக்குடியிருப்பை கைபெற்றுவதற்காக நடைபெற்ற கடும் சமரில் 200 வரையான சிறிலங்காப் படையினர் பலியாகியுள்ளனர். இதனை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த சனி,மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட 400ற்கும் மேற்பட்ட படையினரின் உடலங்கள் கொழும்பிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இத்தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும் இது குறித்து விடுதலை புலிகள் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை ஆனால் தொடர்ந்து புதுக்குடியிருப்பு பகுதியில் சண்டை நடைபெற்றுக்கொண்டிருப்பதாக சிறிலங்கா தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் இடம்பெற்று வரும் உக்கிர மோதல்களில் படைவீரர்களது இழப்பு விபரங்களை வெளியிடாமல் அரசாங்கம் திட்டமிட்டு மறைத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்பிரச்சினை காரணமாக பொருளாதார நலிவு , இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வின்மை போன்ற பாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரம்பரிய யுத்த முனைப்புக்களில் இலங்கை அரசாங்கப் படையினர் வெற்றி பெற்றுள்ளதாக கருதப்பட்டபோதிலும், அண்மைய யுத்த முன்நகர்வுகளில் படைத்தரப்புக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய இழப்புக்கள் பற்றி தகவல் வெளியிட்டால் அது படைவீரர்களது மனோதிடத்தை பாதிக்கும் என அரசாங்கம் கற்பிக்கும் நியாயம் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சடலங்களை பொதியிடும் உறைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக இரகசியத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலைமைகள் உண்மையில் படைவீரர்களது அரிய தியாகத்தையே வெளிப்படுத்தி நிற்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரம்பரிய ரீதியான யுத்தத்தில் படையினர் வெற்றி பெற்ற போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக முல்லைத்தீவு காடுகளிலிருந்து விரட்டியடிக்க நியாயமான கால அவகாசம் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதேச மக்களது ஒத்துழைப்பு கிடைக்கப் பெறும் வரையில் விடுதலைப் புலிகளின் கெரில்லா தாக்குதல்களை முற்றாக தோற்கடிப்பது கடினமான இலக்காகவே அமையும் என அவர் தெரிவித்துள்ளார் .

அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலம் சிவிலியன்களது நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதன் மூலமே நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

!!!!!!!!!!!!!!!!!!!
வன்னிப் பிரதேசத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் நோக்கி வரும் பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை அரசாங்கம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது.
விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து வரும் வயது முதிர்ந்தவர்களை தடுப்பு முகாம்களிலிருந்து விரும்பிய இடங்களுக்கு செல்ல அனுமதிக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் மூலம் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது.

அகதி முகாம்களில் தங்கியுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட வயது முதிர்ந்தவர்கள் தங்களது உறவினர்கள் வீடுகளுக்கோ அல்லது வேறும் இடங்களுக்கோ செல்ல முடியும் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ஏனையவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவார்கள் என்பதனையே மறைமுகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களை வெளியேற்றுவதற்கு இந்தியா உதவியளிக்குமாயின் அம்மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றுவதற்கும் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எஞ்சியிருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு உதவியளிக்கத் தயாரென இந்தியா இணக்கம் தெரிவித்திருப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை நேற்று ஞாயிற்றுக்கிழமை பி.பி.சி. செய்திச் சேவைக்கு வெளியிடும் போதே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு கூறினார்.
அவர் இதன் போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (.சி.ஆர்.சி.) மற்றும் .நா. முகவரமைப்புகளின் உதவியுடன் இந்தியா அவ்வாறு செயற்பட முன்வருமாயின் அதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம். நிச்சயமாக அதற்கு எமது ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராகவே இருப்போம்.
ஆனால், இலங்கை அரசாங்கத்தினது ஒத்துழைப்பும் பரிபூரணமாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது , மக்கள் தங்களது கிராமங்களிலிருந்து வெளியேறி வந்து வேறு இடங்களில் நீண்ட காலத்துக்கு வாழ முடியாது. மிகவும் குறைந்த காலப்பகுதிக்குள் மக்கள் மீண்டும் அவர்களது கிராமங்களுக்குச் செல்ல வேண்டும்.
பாதுகாப்பை காரணம் காட்டி தமிழ் மக்கள் சரித்தர ரீதியாக வாழ்ந்து வந்த கிராமங்களிலிருந்து அம் மக்களை அப்புறப்படுத்தி அவர்களை வேறு இடங்களில் வாழவைக்க இந்த அரசாங்கத்துக்கு இருக்கும் நோக்கத்தை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது .
தாங்கள் வெளியேறி வேறு இடங்களுக்கு போனால் அரசாங்கம் தங்களை மீண்டும் சொந்த கிராமங்களுக்குச் சென்று குடியமர்வதற்கு இடமளிக்காது என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கிறது. எனவே, மக்கள் மத்தியில் இருக்கும் இந்த சந்தேகமே அவர்கள் வெளியேறி வருவதில் முக்கியமான தடையாக இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
எனவே, இந்தியா இவ்விதமான முயற்சியில் ஈடுபட்டால் இம் மக்களை முழுமையாக அவர்களது சொந்த வதிவிடங்களில், கிராமங்களில் மீள குடியேற்றுவதற்கும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார
!!!!!!!!!!!!!!!!!
கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் விடுதலைப் புலிகள் மேலும் வான்வழித் தாக்குதலை நடத்தக் கூடிய வாய்ப்பிருப்பதாகக் கருதும் படையினர் சனிக்கிழமை முதல் நகரின் வான் வழிப் பாதுகாப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக .எவ்.பி. செய்தி நிறுவனம் கூறுகையில்;
வெள்ளிக்கிழமை இரவு வெடிமருந்துகளை நிரப்பியவாறு கொழும்பு நகருக்குள் நுழைந்த இரு விமானங்கள் தங்கள் இலக்குகளை அடைந்து ஏற்படுத்தவிருந்த பேராபத்து தவிர்க்கப்பட்ட நிலையில் வான் வழிப் பாதுகாப்பைப் படையினர் மேலும் அதிகரித்துள்ளனர்.
வன்னியில் முன்னேறும் படையினர் வசம் புலிகள் பெருமளவு நிலப்பகுதியை இழந்து விட்டதால் அவர்கள் மேலும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தக் கூடுமென பொலிஸாரும் படையினரும் எதிர்பார்க்கின்றனர்.
இது போன்று மேலும் பல தாக்குதல்களுக்கு அவர்கள் முயலக் கூடுமெனவும் எனினும் புலிகளின் இவ்வாறான அச்சுறுத்தல்களை எதிர் கொள்ளும் வகையில் வான் பாதுகாப்புப் பொறிமுறையை முழு அளவில் தயார் நிலையில் வைத்திருப்பதாக இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் செக் தயாரிப்பான சிலின் 143 வகை விமானங்கள் ஐந்தை பாகங்களாகப் பிரித்து நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக நம்பப்படுகிறது. எனினும், தற்போது அவர்கள் வசம் எத்தனை விமானங்கள் இருக்கின்றன எனத் தெரியாதென்றும் படைத் தரப்பு தெரிவித்துள்ளது .
இதேவேளை, கொழும்பு நகரின் பாதுகாப்பும் முழு அளவில் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!
பிரிட்டனில் வேலையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதனால் இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத நாடுகளிலிருந்து தொழில் நிமித்தம் வந்து குடியேறுபவர்களுக்கென புதிய கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
வேலை வாய்ப்புகளில் உள் நாட்டவர்களுக்கு முதலிடம் வழங்கும் பொருட்டே தொழில்சார் நிமிர்த்தமான குடியேற்றத்துக்கான இந்த புதிய கட்டுப்பாடுகள் அமுல் செய்யப்படவிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புள்ளிகள் அடிப்படையிலான குடியேறுதல் முறையின் முதலாவது வரிசைப் படுத்தல் பகுதியின் கீழ் பிரிட்டனில் குடியேறுவதற்குத் தேவையான அடிப்படை தகைமைகள் உயர்த்தப்படவிருக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!
france y; 25 e; jpfjp gpw;gfy; 1.30 kzpapypUe;J td;dp kf;fis fhg;ghw;WkhW பிரான்ஸு murplk;;Nfhup khNgUk; fz;ldNguzp
ARGENTEUIL ,3 PLACE DE LA COMMUNE DE PARIS y; eilngwTs;sJ.
!!!!!!!!!!!!!!!!!!!!
,NjNtisapy; 25 e; jpfjp khiy; 4 kzpapypUe;J td;dp kf;fis fhg;ghw;WkhW
பிரான்ஸு murplk;;Nfhup khNgUkfz;ldNguzp VILLENEUVE LE ROI vDk; efupy; Muk;gk; Mfp VILLENEUVE ST GEORGES RER D efurig Kd;wypy; epiwTngWk;
india india india india indiaindiaindia
!!!!!!!!!!!!!!
இலங்கை தமிழர் பிரச்சனையில் சோனியா காந்தி மவுனம் சாதித்துவருவதற்கு கண்டனம் தெரிவித்து , காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து‌ம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலராக பதவி வகி‌த்து வ‌ந்த தமிழருவி மணியன் விலகுவதாக அ‌றி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மதுரையில் நே‌ற்று மாலை செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கையில் ராஜபக்சே அரசால் தமிழ் இனம் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மவுனத்தை கலைக்கவில்லை. எனவே அவருடைய தலைமையிலான கட்சிக்கு தமிழ் மொழியையும் சமுதாயத்தையும் அடகு வைப்பதை எனது இதயம் விரும்பவில்லைஎன்றா‌ர்.

தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களும் இணைந்து செயல்பட்டால், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்க முடியும் என்று தெ‌ரி‌வி‌த்த அவர், தமிழக முதலமைச்சர் கருணாநிதி, இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டு‌க் கொ‌ண்டா‌ர் .
.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதி இல்லாமல் பிரவேசித்து வழக்கறிஞர்களை தாக்கியமையை கண்டித்து தமிழ் நாடு முழுவதும் இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒழுங்கு செய்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையினர் திடீர் தடையை விதித்துள்ளனர்.
எனினும், இந்த தடையை மீறி இன்று ஆர்ப்பாட்டம் திட்டமிட்டவகையில் இடம்பெறும் என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் செயற்படும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் மற்ற அமைப்புகளும் அமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வழக்கறிஞர் மற்றும் காவல் துறையினர் மோதல் போக்கை கைவிடாவிட்டால் வைத்திய சாலையில் இருந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட போவதாக தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி அறிவித்துள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வேளை காவல் துறையினரால் தாக்கப்பட்டிருந்தனர்,

அதன் தொடர்ச்சியாக இன்று வரையிலும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஹெச்.எல்.கோகலே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்ட .கே.கங்கூலி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து , சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிப‌தியாக முகோபாத்தியாயா இருந்து வருகிறார் .

இந்நிலையில், 59 வயதாகும் நீதிபதி ஹெச்.எல்.கோகலே சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் பிறப்பித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களைத் தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், கடந்த 19ஆம் தேதி வழக்கறிஞர்களுக்கும் , காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்ற மோதல், நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இந்த சம்பவத்தின்போது, வழக்கறிஞர்களைத் தாக்கிய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, காவல்துறையினர் நடத்திய தடியடி தொடர்பாக, விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும், காவல்துறையினருக்காக அரசு வழக்கறிஞர்கள் உட்பட எந்தவொரு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் வழக்குகள் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!
,NjNtisapy; ,d;W eilngWtjhf ,Ue;j வழக்கறிஞர்fs; cz;zhtpujNghuhl;lk; xj;jpitf;fg;gl;Ls;sjhf njuptpf;fg;gl;Ls;sJ
!!!!!!!!!!!
world
!!!!!!!!!
சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்காவில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 14 வங்கிகள் திவாலாகி உள்ளன.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடியால் அமெரிக்காவில், வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் பெருமளவில் மூடப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதத்தில் 6 வங்கிகள் திவாலாகி உள்ளன. பிப்ரவரி மாதத்தில் 8 வங்கிகள் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் 4 வங்கிகள் திவாலாகி உள்ளன. கடந்த 20ஆம் தேதி சில்வர்டன் என்னும் வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த வங்கியின் சொத்து மதிப்பு 657 கோடி ரூபாய் என்றும், வாடிக்கையாளர்களிடம் திரட்டிய சேமிப்பு தொகை 550 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, சிட்டி குழுமம் மற்றும் பாங்க் ஆஃப் அமெரிக்கா ஆகியவற்றின் எதிர்காலம் குறித்து பரவலாகக் கேள்வி எழுந்துள்ளது. நிதிநெருக்கடி காரணமாக அமெரிக்காவில், மாதம் ஒன்றிற்கு சராசரியாக 2 வங்கிகள் மூடப்படுகின்றன. கடந்த 2002ஆம் ஆண்டு ஒரே மாதத்தில் 11 வங்கிகள் திவாலானது குறிப்பிடத்தக்கது .
!!!!!!!!!!!!!!!!!
உலக நிதிக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் தேவை என்பதையும் நிதிச் சந்தைகளைக் கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகள் தேவை என்பதையும், ஐரோப்பியத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக பெர்லினிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
உலக பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகளைக் குறைக்கும் வழிமுறைகள் குறித்து விவாதித்துவருகிற இத்தலைவர்கள், ஹெட்ஜ் ஃபண்ட் எனப்படுகிற சர்ச்சைக்குரிய முதலீட்டு நிதிகள் உள்ளிட்ட நிதித்துறை திட்டங்கள் மற்றும் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தவும் கடுமையான சட்டங்கள் தேவை என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.
நிதிச் சந்தைகளுடைய தற்போதைய நிலை மிக மோசமாக இருக்கிறது என்றும் சீர்திருத்தங்கள் செய்யவேண்டிய பெரும் அவசியம் உள்ளது என்றும் இக்கூட்டத்தின் இறுதித் தீர்மானம் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகில் தொழில் ரீதியில் முன்னேறிய மற்றும் முன்னேறிவரும் இருபது நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பு ஆறு வார காலத்தில் லண்டனிலே கூடவுள்ளது.
பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான சிறந்த வழி எது என்பதில் ஐரோப்பிய தலைவர்களிடையே கருத்து வேற்றுமை பரவாலாக காணப்படுவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர
!!!!!!!!!!
சுடானின் டார்பூர் பிராந்தியத்தில் கைது செய்து வைக்கப்பட்டிருந்த கிளர்ச்சிக்காரர்கள் 24 பேரை விடுதலை செய்வதாக சுடானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுடானிய அதிபர் ஒமர் அல் பஷீர் அவர்கள் அண்டை நாடான எகிப்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஆனால், சுடானிய அதிபருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்ற செய்திகளால், எகிப்தில் அவர் நடத்தும் பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் சுருதியிழந்துள்ளன.
சுடானிய சமரச பேச்சுவார்த்தைகளுக்கு நல்லதோர் வாய்ப்பினை வழங்கும் நோக்கில், இந்தப் பிடியாணை உத்தரவு தாமதப்படுத்தப்பட வேண்டும் என்று கோரும் ஆபிரிக்க மற்றும் அரேபிய நாடுகளில் எகிப்தும் ஒன்றாகும்.
!!!!!!!!!!!!
பாகிஸ்தானின் பிரச்சினைக்குரிய வடபகுதியின் ஸ்வாட் பள்ளத்தாக்கின் ஒரு மூத்த அதிகாரியான குசால் ஹான் என்பவர் தலிபான் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டுள்ளார்.
ஸ்வாட் பகுதிக்கான புதிய மாவட்ட இணைப்பு அதிகாரியான ஹான் அவர்கள், தனது மெய்ப்பாதுகாவலர்கள் 6 பேருடன் சேர்த்து துப்பாக்கிமுனையில் கடத்தப்பபட்டுள்ளார்.
ஸ்வாட்டில் உள்ள முக்கிய நகரான மிங்கோராவுக்கு சென்றுகொண்டிருந்த வழியில் அவர் கடத்தப்பட்டுள்ளார் .
அவரை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகளும், தலிபான்கள் சார்பில் பேசவல்ல ஒருவரும் கூறியுள்ளனர்.
ஸ்வாட்டில், இஸ்லாமியச் சட்டம் அல்லது ஷரியா சட்டத்தின் அறிமுகத்துக்கு வழி செய்யும் என்று எதிர்பாக்கப்படுகின்ற ஒரு நிரந்தர போர் நிறுத்தம் குறித்து அரசாங்கத்துக்கும் , கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் சமரச பேச்சுக்கள் தொடரும் நிலையில், இந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!
oscar
ஸ்லம் டாக் மில்லினர், சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது. இதன் மூலம், 8 ஆஸ்கார் விருதுகளை இந்த படம் பெற்றுள்ளது. இரண்டு ஆஸ்கார் விருதினைப் பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை .ஆர்.ரஹ்மான் பெற்றுள்ளார்.

81 வது ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மும்பையில் தயாரிக்கப்பட்ட ஸ்லம் டாக் மில்லினர் திரைப்படம், சிறந்த படத்திற்கான விருது உட்பட 8 விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்த .ஆர்.ரஹ்மான், சிறந்த இசை மற்றும் சிறந்த பாடலுக்காக இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளதன் மூலம், இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த அறிவிப்பு இந்தியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரீடர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கேத்தே வின்ஸ்லெட், சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ளார். மில்க் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஸீன் பென், சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
!!!!!!!!!!!!!
உலகின் அதிஉயர் திரை விருதான அமெரிக்காவின்ஒஸ்கார்விருது வழங்கும் மேடையில் இரண்டு இசை விருதுகளைப் பெற்ற தமிழரான இசை மேதை .ஆர்.ரஹ்மான்எல்லாப் புகழும் இறைவனுக்கேஎன அரங்கத்தில் தமிழில் உரையாற்றினார்.
விருதைப் பெற்ற பின் அந்த அரங்கில் உரையாற்றும் போது, தனது தாய்மொழியான தமிழில் சில வார்த்தைகள் உரையாற்ற விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், “எல்லாப் புகழும் இறைவனுக்கே!” என தமிழில் குறிப்பிட்டார்.
திரையுலகில்ஒஸ்கார்விருது பெறுவதை மிகப் பெருமைக்குரிய ஒரு இலட்சியமாக உலக திரையுலக கலைஞர்கள் எல்லோருமே கொண்டுள்ளனர்.
இந்தஒஸ்கார்விருது பெற்ற முதல் இந்தியர்முதல் தமிழர்.ஆர் .ரஹ்மான் என்பதும், அதுவும் இரண்டு விருதுகளை அவர் ஒரே தடவையில் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மணிரத்தினம் 1992 ஆம் ஆண்டு இயக்கியரோஜாதிரைப்படமே .ஆர்.ரஹ்மான் இசை அமைத்த முதலாவது திரைப்படம் ஆகும்.
இன்னொரு தமிழரான எம்.. (மாயா அருள்பிரகாசம்) அதேஸ்ளம் டோக் மில்லியனியர்படத்தின் பாடல் இசைக்கான விருதுக்காக முன்மொழியப்பட்டிருந்த ஐவரில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கத
!!!!!!!!!!!!!!!!!!
1 euro = 147.68 sl /64.09in
1 us $ = 114.10 sl / 49.52in
1 swiss fr = 99.12sl / 43.01in
1 uk pound = 166.36sl / 725.19in
1Saudi Arabian Riyal = 30.47sl /13.22 in

Leave a Reply

Your email address will not be published.