ஸ்லம் டாக் படத்திற்கு இசை அமைத்த ரகுமான் தமிழில் பேசி நன்றி கூறினார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: ஸ்லம்டாக் ப‌டத்திற்கு இசையமைத்த ஏ.ஆர். ரகுமானுக்கு இரண்டு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. விருதுகளைப் பெற்றுக்கொண்ட ரகுமான், எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழில் கூறி நன்றி தெரிவித்தார்.

ஸ்லம்டாக் படத்தின் திரைக்கதை, ஒளிப்பதிவு, சவுண்ட் மிக்சிங், பிலிம் எடிட்டிங், இசையமைப்பாளர், சிறந்த பாடல், சிறந்த படம், சிறந்த இயக்குனர் ஆகிய பிரிவுகளை சேர்த்து மொத்தம் 8 ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. உலகில் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த ஸ்லம்டாக் மில்லினர் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இப்படத்திற்கு இயக்குனர், நடிகர், இசை உள்ளிட்ட துறைகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 81 வது ஆஸ்கர் விழாவில் பங்கேற்க ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த நடிகர்கள் உள்பட 15 கலைஞர்கள் மும்பையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளனர். ஸ்லம்டாக் படத்திற்கு முதல் ஆஸ்கர் விருதாக திரைக்‌‌கதைக்கு விருது கிடைத்தது. படத்தின் திரைக்கதை அமைப்பாளர் சிமோன் ‌பி‌யூபோய் விருதை பெற்றார். அடுத்ததாக படத்தின் ஒளி்ப்பதிவிற்கு விருது கிடைத்துள்ளது. மூன்றாவதாக சிறந்த சவுண்ட் மிக்சிங்குக்கான விருதை ரேசுல் பூக்குட்டி பெற்றுள்ளார். இவருடன் , இணைந்து இயன் டாப் மற்றும் ரிச்சர்ட் பையர்க்கும் சவுண்ட் மிக்சி்ங்குக்காக விருதை பெற்றுள்ளனர். சிறந்த எடிட்டிங்குக்கான விருதையும் ஸ்லம்டாக் மில்லியனர் படம் தட்டி சென்றுள்ளது.

சிறந்த இசைக்கான விருது மற்றும் சிறந்த பாடல் ஜெய்‌ ஹோவிற்கான விருதை ஏ.ஆர். ரகுமான் பெற்றுள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெறும் முதல் இந்தியர் ஏ.ஆர். ரகுமான் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். ஆஸ்கர் விருதை பெறும் நான்காவது இந்தியர் இவர்.

சிறந்த இயக்குனர், சிறந்த படத்திற்கான விருதையும் ஸ்லம்டாக் பெற்றுள்ளது. இத்துடன் ஸ்லம் டாக் மில்லினர் படம் 8 விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த டாகுமென்டரி படத்திற்கான விருது ஸ்மைல் பிங்கி படத்திற்கு கிடைத்துள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.