வான் தாக்குதலில் கொல்லப்பட்ட சிப்பாயின் சடலம் ஐ.சி.ஆர்.சி.யிடம் புலிகளால் ஒப்படைப்பு

விடுதலைப் புலிகளால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த படைச் சிப்பாய் ஒருவர் கடந்த புதன்கிழமை சிறிலங்கா வான்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் உயிரிழந்தார்.அவரது சடலம் விடுதலைப் புலிகளால் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவினரால் திருகோணமலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த படைச்சிப்பாய் தலவாக்கலையைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வன்னியில் காயப்பட்டிருந்த மக்களை கப்பல் மூலம் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்து வந்தனர்.

அச்சமயமே படைச்சிப்பாயின் சடலமும் விடுதலைப்புலிகளால் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.