வன்னியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் நோக்கி வரும் மக்களை தடுத்து வைத்துள்ளமையை அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

வன்னிப் பிரதேசத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் நோக்கி வரும் பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை அரசாங்கம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது.
விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து வரும் வயது முதிர்ந்தவர்களை தடுப்பு முகாம்களிலிருந்து விரும்பிய இடங்களுக்கு செல்ல அனுமதிக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் மூலம் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது.

அகதி முகாம்களில் தங்கியுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட வயது முதிர்ந்தவர்கள் தங்களது உறவினர்கள் வீடுகளுக்கோ அல்லது வேறும் இடங்களுக்கோ செல்ல முடியும் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ஏனையவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவார்கள் என்பதனையே மறைமுகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.