தற்கொலைத் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் விமானப்படை முற்றாக நிர்மூலமாகியிருக்கும்: கெஹலிய ரம்புக்வெல

விடுதலைப் புலிகளின் வான் தற்கொலைத் தாக்குதல் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இலங்கை அரசு தனது விமானப்படையை முற்றாக இழந்திருக்கும் என அரசின் பாதுகாப்புப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல செய்தியாளர்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் விமானப்படையென்ற ஒன்று இங்கு இருந்திருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விமானங்கள் தமது இலக்குகளை அடைய முன்னர் சுட்டு வீழ்த்தப்பட்டமையால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளிடம் வேறு விமானங்கள் இருக்குமென்று தாம் நினைக்கவில்லையென மேலும் தெரிவித்துள்ள அவர், புதுக்குடியிருப்பிலுள்ள ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட விமானங்கள் மாங்குளம், மன்னார் ஊடாக கொழும்பிற்குள் நுழைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பிற்குள் நுழைந்த ஒவ்வொரு விமானத்திலும் 215 கிலோகிராம் சி 4 ரக வெடிமருந்துகள் காணப்பட்டுள்ளன. அவர்கள் விமானப் படைத் தலைமையகத்தை இலக்கு வைத்துள்ளனர் என்றும் உதய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.