ஸ்வாட் பள்ளத்தாக்கின் மூத்த அதிகாரி கடத்தப்பட்டார்

பாகிஸ்தானின் பிரச்சினைக்குரிய வடபகுதியின் ஸ்வாட் பள்ளத்தாக்கின் ஒரு மூத்த அதிகாரியான குசால் ஹான் என்பவர் தலிபான் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

ஸ்வாட் பகுதிக்கான புதிய மாவட்ட இணைப்பு அதிகாரியான ஹான் அவர்கள், தனது மெய்ப்பாதுகாவலர்கள் 6 பேருடன் சேர்த்து துப்பாக்கிமுனையில் கடத்தப்பபட்டுள்ளார்.

ஸ்வாட்டில் உள்ள முக்கிய நகரான மிங்கோராவுக்கு சென்றுகொண்டிருந்த வழியில் அவர் கடத்தப்பட்டுள்ளார்.

அவரை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகளும், தலிபான்கள் சார்பில் பேசவல்ல ஒருவரும் கூறியுள்ளனர்.

ஸ்வாட்டில், இஸ்லாமியச் சட்டம் அல்லது ஷரியா சட்டத்தின் அறிமுகத்துக்கு வழி செய்யும் என்று எதிர்பாக்கப்படுகின்ற ஒரு நிரந்தர போர் நிறுத்தம் குறித்து அரசாங்கத்துக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் சமரச பேச்சுக்கள் தொடரும் நிலையில், இந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.