வான்புலிகளின் இலக்கு அரச தலைவர் இல்லமா?

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை வான்புலிகள் நடத்திய தாக்குதலில் போது அவர்களின் இலக்குகளில் ஒன்று அரச தலைவரின் இல்லமாக இருந்திருக்கக் கூடும் என ‘லக்பிம’ வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வான் புலிகளின் தாக்குதலுக்கு இலக்கான உள்நாட்டு வரித் திணைக்களத்திற்கு எதிராக வான்படை தலைமையகம் இருந்ததனால் வான்படை தலைமையகமே வான் புலிகளின் இலக்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கொழும்பு நகரத்திற்குள் ஊடுருவிய வானூர்திகள் பல தடவைகள் தமது இலக்குகளை தேடி வட்டமிட்டுள்ளன. உள்நாட்டு வரித்திணைக்களத்திற்கு அண்மையில் இராணுவத் தலைமையகமும், அரச தலைவரின் இல்லமும் உள்ளன.

எனினும், வான்புலிகள் வானூர்தி தனது இலக்கினை தாக்குதவற்கு முன்னர் தாக்குதலில் சிக்கியதனால் உள்நாட்டு வரி திணைக்களத்தின் மீது மோதி வெடித்துள்ளது.

எனவே, வான்புலிகளின் இலக்கு அரச தலைவரின் இல்லமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு வரித்திணைக்களத்தின் மூன்றாவது மாடிக்கும் 12 ஆவது மாடிக்கும் இடையில் வானூர்தி மோதி வெடித்துள்ளது.

திணைக்களத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், அது தொடர்பான மதிப்பீடுகள் தற்போது வரை மேற்கொள்ளப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.