தலிபான்கள் அபாயம்: சர்தாரி ஒப்புதல்

வாஷிங்டன்:”அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு பெரிய அபாயமாக தலிபான்கள் உருவெடுத்துள்ளனர்’ என, பாக்., அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி ரிச்சர்டு ஹோல் புரூக் சமீபத்தில் பாகிஸ்தான் பயணம் மேற் கொண்டிருந்தார்.

இதன்பின், வாஷிங்டன் திரும்பிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்குப் பகுதியில் தலிபான்கள், பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்பதை அதிபர் சர்தாரி ஒப்புக் கொண்டுள்ளார். சுவாத் பள்ளத்தாக்கு பகுதியில் தலிபான்களுடன் பாகிஸ்தான் அரசு, சில நாட்களுக்கு முன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. இதற்கு அமெரிக்க அரசு சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் மூலம் தலிபான்களிடம் சரண் அடைந்து விடக்கூடாது என்று அதிபர் பராக் ஒபாமாவும், வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் எச்சரித்துள்ளனர். பாக்., தலைநகர், இஸ்லாமாபாத்திலிருந்து 100 கி.மீ., தொலைவில் சுவாத் பகுதி உள்ளது. அப்படிப்பட்ட நிலையில், தலிபான்களுடன் ஏன் ஒப்பந்தம் போடப்பட்டது என்பது புரியாத புதிராக உள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.