யுத்ததில் சிக்குண்டுள்ள பொதுமக்கள் தொடர்பில் இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றச்சாட்டு

இலங்கையில் விடுதலைப் புலிகள் மீது அரச இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் வடபுலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயங்களில் சாமானியப் பொதுமக்களை இலங்கை இராணுவம் இரக்கமின்றி கொன்றுவருகிறது என ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமைகள் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட அந்தரங்க கள விசாரணைகளின்போது மக்கள் வழங்கிய வாக்குமூலங்களை ஆதாரமாகக்கொண்டு குறிப்பிட்ட ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், “பொதுமக்களைக் குறிவைத்து பாதுகாப்பு வலயங்களையும் மருத்துவமனைகளையும் இலங்கை இராணுவம் ஷெல் குண்டுகளை இறைத்துத் தாக்கிவருகிறது” என்று சாடியிருக்கிறது.

இக்குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவம் மறுத்திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற விடாமல் விடுதலைப் புலிகள் தடுத்துவருவதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு குற்றம்சாட்டியது.

ஆனால் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகவே அப்படிச் செய்வதாக விடுதலைப் புலிகள் தெரிவிக்கிறார்கள்.

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.