சுவாமியை உடனே கைது செய்க: திருமாவளவன்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரும் வன்முறை ஏற்பட சுப்ரமணியம் சுவாமிதான் காரணம். அவர்தான் வன்முறையைத் தூண்டி விட்டார். எனவே அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீசார் அத்துமீறி நுழைந்து வக்கீல்களை தாக்கியது திட்டமிட்ட செயல். இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்.

ரவுடிகள் நீதிமன்ற வளாகத்தில் நுழைந்து வன்முறை நிகழ்த்த துண்டி விட்டது சுப்பிரமணியம் சுவாமிதான். அவரது ஆட்கள் வக்கீல்கள் வேடத்தில் நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு வந்து கலவரம் செய்தனர்.

எனவே சுப்பிரமணியம் சுவாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார் திருமாவளவன்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.