‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (21.02.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

தமிழீழ விடுதலைப்புலிகள் நேற்று இரவு, இரண்டு சிறிய ரக விமானங்களில் வந்து கொழும்பிலும் கட்டுநாயக்காவிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.
கொழும்பில், விமானப்படை தலைமையகத்துக்கு முன்பாக உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக் களத்தின் பதின்மூன்று மாடிக்கட்டடத்துடன் ஒரு விமா னம் மோதித் தற்கொலைத் தாக்குதல் நடத்தியது.


கட்டுநாயக்காவில் உள்ள விமானப் படைத் தளம் மீது புலிகளின் இரண்டாவது விமானம் தாக்குதல் நடத்தியதாக நேற்றிரவு தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால், அதனை விமானப்படையினர் சுட்டு வீழ்த்தியதாக பாதுகாப்பு அமைச்சு இன்று அதிகாலை விடுத்த அறிக்கையில் அறிவித்தது .
முதலாவது விமானம் கொழும்பில் இலங்கை விமானப் படைத் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக டிரான்ஸ் ஏஸியா ஹோட்டலுக்கு சற்றுத் தள்ளி உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதின்மூன்று மாடிக் கட்டடத்துடன் மோதி வெடித்துள்ளது.இதில் கட்டடத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த சில விமானப் படையினர் உட்பட 47 பேர் இந்தச் சம்பவத்தில் காயமுற்றுள்ளனர். அவர்களில் இருவர் பின்னர் உயிரிழந்தனர்.
எனினும் , இந்தக் கட்டடம் மீது புலிகளின் விமானம் குண்டு வீசியது என்று மட்டுமே முதலில் செய்தி வெளியாகியது. ஆனால் இன்று அதிகாலையில் வெளியான தகவல்கள் இந்தக் கட்டடத்துடன் புலிகளின் விமானம் நேரடியாக மோதியது எனத் தெரிவித்தன.
புலிகளின் மற்றைய விமானம் கட்டுநாயக்கா விமானத் தளத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் அழிக்கப்பட்டதாகவும்
அந்த விமானத்தின் விமானியின் சடலம் மீட்கப்பட்டதாகவும்
பாதுகாப்பு அமைச்சு இன்று அதிகாலை அறிவித்தது.
புலிகளின் இந்த விமானம் கட்டுநாயக்கா விமான தளத்துக்குச் சற்றுத் தொலைவில் வாவியை அண்டிய காட்டுப் பகுதியில் வீழ்ந்ததாகக் கூறப்பட்டது.
கட்டுநாயக்காவில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 6 பொதுமக்கள் காயமடைந்தனர். அவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று மிகப் பிந்திய தகவல்கள் தெரிவித்தன.
இந்த அனர்த்தத்தை அடுத்து கட்டுநாயக்கா விமான நிலையப் பகுதிக்கான போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட்டது.
புலிகளின் விமானங்கள் புத்தளம், கற்பிட்டி பகுதியில் வந்துகொண்டிருக்கின்றமை பற்றிய தகவல் ராடரில் அவதானிக்கப்பட்டமையை அடுத்தே தென்னிலங்கை உஷார்படுத்தப்பட்டது . இரவு 9.45 மணியளவில் தென்னிலங்கையில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. கொழும்பும் புறநகர்ப் பகுதிகளும் இருளில் மூழ்கின.
பல முனைகளில் இருந்தும் வானத்தை நோக்கி ஏவப்பட்டலேஸர்ரக சிவப்பு குண்டுகளால் கொழும்பு நகரத்தின் ஆகாயத்தில் வானவேடிக்கை நிகழ்ந்தது போன்ற காட்சியை பார்க்க முடிந்தது. தரையிலிருந்து வானத்தை நோக்கி தேடுதல் ஒளிக்கற்றையும் பாய்ச்சப்பட்டு வானம் கண்காணிக்கப்பட்டது.
இவற்றுக்கு மத்தியில் உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஒளிப்பிளம்பும் காதைச் செவிடாக்கும் சத்தமும் அங்கு எழுந்தன.
எனினும் இரவு 11 மணியளவில் நிலைமை வழமைக்குத் திரும்பியது.
இந்த இரு விமானங்கள் மூலமும் தற்கொலைத் தாக்குதலே நடத்தப்பட்டன என்பதனைப் புலிகள் இனி அறிவிப்பார்கள் என சில செய்தி வட்டாரங்கள் இன்று அதிகாலை தகவல் வெளியிட்டன.
விமானியின் சடலம் கண்டெடுப்பு விடுதலைப்புலிகளின் இரண்டு விமா னங்களும் கொழும்புக்கு மேலாகப் பறப் பது நேற்றிரவு 9.45மணிக்குக் கண்டறியப் பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக வான் பிரதேசப் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக புலிகளின் இரண்டு விமானங்களும் தமது தாக்குதலை கைவிட நேர்ந்தது
இரண்டாவது விமானம் வான் பாதுகாப்பு பிரதேசத்தை விட்டு தப்பிச் செல்ல முயன்ற வேளை நீர்கொழும்புக்கு மேலா கப் பறந்து சென்றபோது சுட்டு வீழ்த்தப் பட்டது
வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்க ளும், விமானியின் சடலமும் கட்டுநாயக்க விமானத் தளத்துக்குச் சமீபமாக கண் டெடுக்கப்பட்டன என்று பாதுகாப்பு அமைச்சு இன்று அதிகாலை விடுத்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய வான் புலிகளின் கரும்புலிகளா
கேணல் ரூபன்
லெப்.கேணல் சிரித்திரன்
ஆகியோர்களின் திறமையான வீரச்செயல்களுக்கு அண்மையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால்நீலப்புலிகள்என்ற தேசிய விருதும் இந்த இரண்டு மாவீரர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வெற்றிகரமான வான் தாக்குதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்ட இரண்டு மாவீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!

சிறிலங்காவின் கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தின் மீது வான்புலிகள் நேற்று நடத்திய கரும்புலி தாக்குதலையடுத்து, வானூர்தி நிலையம் சில மணி நேரங்கள் மூடப்பட்டது . அத்துடன் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் தரையிறங்க வேண்டிய வானூர்திகள் அனைத்தும் இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டன.
வான் புலிகளின் கரும்புலித் தாக்குதலையடுத்து உடனடியாக வானூர்தி நிலைய பணிகள் அனைத்தையும் இடை நிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டது.
இதனையடுத்து, கட்டுநாயக்காவில் தரையிறங்க வேண்டிய வானூர்திகள் இந்தியாவிற்கு திசை திருப்பி விடப்பட்டன. குறிப்பிட்ட சில வானூர்தி சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
குறிப்பாக, கரும்புலிகளின் தாக்குதலையடுத்து நேற்று வெள்ளக்கிழமை இரவு 10:30 நிமிடமளவில் ஹொங்ஹொங் நாட்டுக்கு பயணமாகவிருந்த வானூர்தி சேவையும் இரவு 12:25 நிமிடமளவில் பாங்கொக் நகருக்கு பயணமாகவிருந்த வானூர்தி சேவையும், அதிகாலை 2:20 நிமிடமளவில் சென்னைக்கு பயணமாகவிருந்த வானூர்தி சேவையும் இடைநிறுத்தப்பட்டது.

இதனிடையே, உள்நாட்டு இறைவரித் திணைக்கள கட்டிட தொகுதி வான் கரும்புலிகளின் தாக்குதலால் பாரிய சேதத்தை சந்தித்துள்ளதுடன், அதற்கு அருகில் இருந்த கட்டடங்களும் சேதமடைந்துள்ளதாகவும், கட்டுநாயக்கா வான்படைத்தளம் மூடப்பட்டு அங்கிருந்த வான்படை வானூர்திகள் இரத்மலானை பகுதிக்கு நகர்த்தப்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 6 பேர் காயமடைந்ததுடன் மொத்தமாக 50 பேர் காயமடைந்ததுடன் இருவர் கொல்லப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கரும்புலித் தாக்குதல்களை நடத்திய புலிகளின் வானூர்திகள் இரண்டும் கொழும்பில் நீண்ட நேரமாக தாழ்வான பறப்பை மேற்கொண்டே தாக்குதல்களை நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கரும்புலி போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
வள்ளிபுனம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.02.09) பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இத்தாக்குதலை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கரும்புலி கப்டன் நெடுஞ்செழியன் நடத்தியுள்ளார்.
இம் மாவீரருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பலவன் பொக்கணை நேற்றுபிற்பகல் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது என்று படைத்தரப்பு அறிவித்துள்ளது.
58
ஆவது படையணியினர் நேற்றுக் காலை மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்தப் பிரதேசத்தை மீட்கப் படையினர் முன்னெடுத்த நடவடிக்கையின்போது இடம்பெற்ற மோதலில் விடுதலைப் புலிகளின் எட்டு cடலங்களும் ரி56 துப்பாக்கிகள் ஐந்தும் மீட்கப்பட்டன என்றும் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்தது.
சாலை கடலேரிக்கு மேற்காக புதுக்குடியி ருப்புக்கு வடக்கே எட்டு கிலோமீற்றர் தூரத்தில் அம்பலவன்பொக்கணை கிராமம் அமைந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்தது.
புதுக்குடியிருப்பின் வடக்கே படையினரின் நடவடிக்கை தொடர்வதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்.மாவட்டம் தென்மராட்சி பிரிவின் சாவகச்சேரி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொலிஸாரினால் அழுகிய நிலையில் இருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:-
நேற்று வெள்ளிக்கிழமை இரவு மேற்படி நபரின் சடலம் அழுகிய நிலையில் மண்ணினால் மூடியிருந்ததாகவும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அருகாமையிலேயே இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் இச்சம்பவம் தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டு பின் அடையாளம் காண்பதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 , 35 வயது மதிக்கத்தக்க இந்த ஆணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபரை சித்திரவதை செய்த பின் கொலை செய்துவிட்டு வைத்தியசாலைப் பகுதியில் கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸிற்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது .
இடம்பெயர்ந்த மக்கள் குறித்து நேரில் கண்டறியுமாறு ஜனாதிபதி மஹிந்தவினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று ஹோல்ம்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

மோதல்கள் இடம்பெற்று வரும் பிரதேசங்களில் பொதுமக்களின் நிலைமை குறித்து ஜனாதிபதிக்கும், ஹோல்ம்ஸிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

!!!!!!!!!!!!!!
புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், முள்ளி வாய்க்கால், இரணைப்பாலை ஆகிய இடங்களை நோக்கி நேற்று மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்; 43 பேர் காயமடைந்தனர் என இணையத்தளங்கள் தகவல் வெளியிட்டன.
அந்த இணையத்தளங்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு:
புதுக்குடியிருப்புப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய ஷெல் தாக்குதலில் 7 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் நடத் திய ஷெல் தாக்குதலில் 5 பேர் படுகொலை செய்யப்பட் டுள்ளனர்.
இந்த இரண்டு இடங்களிலும் 35 மக்கள் காயமடைந் துள்ளனர்.
புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீது நேற்று பிற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய ஷெல் தாக்குதல்களில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
வினோஜன் (வயது 09), .øசக்கீதன் (வயது 19), வி.நளாஜினி (வயது 36), .சிவகுமார் (வயது 30), .விமல் (வயது 30) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட வலைஞர்மடத்தில் நேற்று பிற்பகல் சிறி லங்கா படையினர் நடத்திய ஷெல் தாக்கு தலில் 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
பி.விநாயகன் (வயது 21) மற்றும் வீ. விஜேந்திரன் (வயது 29) ஆகியோரே காயமடைந்தனர்.
இதேவேளை, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய ஷெல் தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமி ஒருவர் நேற்று சிகிச் ø பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ். வடமாராட்சி உடுத்துறையைச் சேர்ந்த பொன்னுத்துரை சுமதா (வயது 10) என்பவரே உயிரிழந்துள்ளார் என்றுள்ளது

!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள புதுமாத்தளன் வைத்தியசாலையில் பல்வேறு வசதியீனங்கள், மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகின்றது .

மன உளைச்சல்களுக்கு மத்தியில் அரச வைத்தியர்கள் பணியாற்றி வருவதாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராஜா வரதராஜா சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள அவசர கடிதம் ஒன்றில் தெரிவித்திருக்கி்ன்றார்.

இந்த வாரம் நடத்தப்பட்ட எறிகணை தாக்குகதலில் இறந்துபோன பலரது உடல்களும், காயமடைந்தவர்கள் பலரும் புதுமாத்தளன் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மிகவும் குறைவான வைத்திய வசதிகளுடன் , காயமடைந்து வந்துள்ள ஏராளமான மக்களுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்று தெரியாமல் தாங்கள் தவிப்பதாகவும் அந்தக் கடிதத்தில் டாக்டர் வரதராஜா தெரிவித்திருக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம் ஆகிய இடங்களில் இயங்கிவந்த வைத்தியசாலைகள் போர்ப் பதற்றம் காரணமாக கைவிடப்பட்டுள்ளன. தற்போது புதுமாத்தளன் மாத்திரமே இந்தப் பிரதேசத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான ஒரேயொரு வைத்தியசாலையாக வசதியீனங்களுக்கிடையில் இயங்கி வருகிறது. இதனால் இந்தப்பிரதேசத்தின் வைத்தியசேவை நிலைகுலைந்து ஸ்தம்பிதமடையும் அபாய நிலைமை தோன்றியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு சிறிய பாடசாலை கட்டிடத்தில் ஆரம்ப வைத்திய நிலையமாக இயங்கி வருகின்ற புதுமாத்தளன் வைத்தியசாலையில் நாளாந்தம் 100 தொடக்கம் 200 வரையில் போர்க்காயங்களுடன் வரும் மக்களை அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு இடவசதியோ ஏனைய உட்கட்டமைப்பு வசதியோ இல்லாத நிலையில் வைத்தியர்கள் அங்கு போராடிக்கொண்டிருக்கி்ன்றார்கள் என்றும் டாக்டர் வரதராஜா தெரிவித்திருக்கின்றார்.

சத்திர சிகிச்சையின்போதும், அதன் பின்னரும், காயமடைந்தவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மருந்துகள், நுண்ணுயிர்க் கொல்லிகள் உட்பட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் கையிருப்பு தீர்ந்துவிட்டன . அவற்றை உடனடியாக அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.வரதாராஜா கோரியுள்ளார்
!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு ஏறாவூரில் இராணுவ மோட்டார் சைக்கிள் தொடரணியில் மோதுண்டு 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் அந்த இடத்திலேயே பலியானார்.

நேற்று மாலை இடம் பெற்ற இந்தச் சம்பவத்தில் பலியானவர் 4 பிள்ளைகளின் தந்தையான 54 வயதான சின்னலெப்பை மொகமட் ஹனீபா எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 2 இராணுவ சிப்பாய்களும் காயமடைந்துள்ளனர். நேற்று வாழைச்சேனையில் இடம்பெற்ற வைபவமொன்றின் பாதுகாப்புக்காக சென்றுவிட்டு இராணுவ மோட்டார் சைக்கிள் தொடரணியினர் மீண்டும் மட்டக்களப்பு திரும்பும் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது
!!!!!!!!!!!!!!!!
வன்னிப் பிரதேசத்தில் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத சொல்லொணா அவலத்தை எமது உறவுகள் தினம் தினம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் ஏதிலிகளின் பங்காளனாகிய இறைவனை மனமுருகி பிரார்த்திக்குமாறு இந்துக்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம் என அகில இலங்கை இந்து மகாசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து மகாசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத சொல்லொணா அவலத்தை எமது உறவுகள் தினந்தினம் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். கொடுமைமிகு இந்த அவல நிலையிலிருந்து எமது மக்களைக் காப்பாற்றுவதற்கு உலகின் எந்த பெரிய மனித சக்தியுமே முன்வரவில்லை .

இந்நிலையில் ஏதிலிகளின் பங்காளனாகிய இறைவனை மனமுருகி பிரார்த்திக்குமாறு இந்துக்கள் அனைவரையும் சிவராத்திரி காலத்திலே வேண்டிக்கொள்கிறோம். இதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு இந்து நிறுவனமும் , சமயத்தலைவர்களும், குருமார்களும் செய்யுமாறு வேண்டுகின்றோம்.

ஆழிப்பேரலை காலத்தில் உதவியது போன்று எம்மக்களுக்கு உளரீதியாக ஆறுதல் அளிக்க எமது நிறுவனங்கள் முன்வரவேண்டும் . இத்துயர்மிகு காலத்தில் எமது விழாக்கள் யாவற்றையும் ஆடம்பரத்தை அறவே கைவிட்டுப் பிரார்த்தனை வைபவங்களாக எமது உறவுகளுக்கு உதவுகின்ற கைங்கரியங்களுக்குப் பயன்படுகின்றவைபவங்களாக மாற்றியமைக்க வேண்டும்.

உங்களுடைய உதவிகளைச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாகவும் தொண்டு நிறுவனங்கள் ஊடாகவும் வழங்க முடியும். மேலும் எம்முடைய பழம்பெரும் சமய நிறுவனங்கள் இந்தப் பணியை உண்மையான இறைபணியாக ஏற்று நிர்க்கதியாய் நிற்கின்ற எம் உறவுகளின் வாழ்வில் சிறிய ஆறுதலையாவது அளிக்க முன்வருமாறும் விநயமாக வேண்டுகின்றோம்என்று அகில இலங்கை இந்து மகா சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!
வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்காக ஆளும் காங்கிரஸ் கட்சியினால் வழங்கப்பட்டு வரும் யுத்த உதவிகள் நிறுத்தப்பட வேண்டுமென சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவரான சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
யுத்த ஒத்துழைப்பை இடையறாது வழங்குவதன் மூலம் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு காங்கிரஸ் ஆட்சி ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாடொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் குறைந்தபட்சம் 250,000 அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அரசாங்கப் படையினர் மேற்கொண்டு வரும் உக்கிர தாக்குதல்கள் பிரதேசத்தில் சிக்கியுள்ள நிர்க்கதியான பொதுமக்களை அதிகம் பாதிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்கா கடற்படையினரால் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்
சிறிலங்கா கடற்படையினரால் தலைமன்னார் கடற்பரப்பபில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுதுடன் மீன்பிடி உபகரணங்களும் கைபெற்றப்பட்டுள்ளதாககடற்படையின் பேச்சாளர் டீ.கே.பி.தசநாயக்கா தெரிவித்தார்.
நேற்று முந்தினம் காலை 10 மணியளவில் இந்திய மீனவர்கள் குழுவொன்று தலைமன்னார் தெற்குக் கடற்பரப்பினூடாக பயணித்துக்கொண்டிருந்த போது சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தலைமன்னார் காவல்துறையினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
!!!!!!!!!!!!!!!
நேபாள பிரதமர் புஷ்ப கமால் டகல் அழைப்பை ஏற்று, இலங்கை அதிபர் ராஜபக்சே வரும் 2ம் தேதி நேபாளம் செல்கிறார்.

சமீபத்தில் புதுடெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் நேபாள பிரதமர் புஷ்ப கமால் டகலும், இலங்கை அதிபர் ராஜபக்சேவும் சந்தித்து பேசினர். அப்போது தங்களது நாட்டுக்கு வரும்படி, ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்தார் டகல். அதன்படி, ராஜபக்சேவின் நேபாள பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேபாளத்தில் சமீபத்தில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பிரதமர் டகல் அழைப்பை ஏற்று, முதல் வெளிநாட்டு அதிபராக ராஜபக்சே செல்கிறார் .

india
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈழத்தமிழர் மீதான படுகொலையை நிறுத்தக்கோரி புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் நடாத்திய உண்ணாநிலைப்போராட்டத்தில் உரையாற்றியதற்காக இயக்குநர் சீமானை கைது செய்த புதுவை காவல்துறையினர் இன்று 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர்.
கடந்த 12ஆம் திகதி புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக உண்ணாநிலைப்போராட்டம் நடத்தினர். அவர்களை வாழ்த்தி பேசிய இயக்குநர் சீமான் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளை தாக்கி பேசியதாகவும் புதுச்சேரி காவல்துறை சீமான் மீது வழக்குப்பதிவு செய்தது.
தலைமறைவாக இருக்கும் சீமானை கைது செய்யும் நடவடிக்கையில் புதுச்சேரி காவலர்கள் செயல்பட்டு வந்தார்கள். இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் 26ஆம் திகதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
இந்நிலையில் சட்டசபையில், 19ஆம் திகதி காங்கிரசு மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சீமானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி விரைவில், கைது செய்துவிடுவோம் என்றார். மேலும் சீமானை கைது செய்வதற்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று இயக்குநர் சீமான் தானே முன்வந்து திருநெல்வேலி காவல் ஆணையர் முன் சரண் அடைந்தார்.சீமான் சரண் அடைந்தது குறித்து நெல்லை ஆணையர் மஞ்சுநாதா, புதுச்சேரி வழக்கு சம்பந்தமாக சீமானை கைது செய்திருப்பதாகவும் அவரை புதுச்சேரி காவல் துறையிடம் ஒப்படைக்க விருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் சீமானை காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புதுச்சேரி காவலர்கள் புறப்பட்டனர்.
இன்று காலை புதுச்சேரி மாவட்ட குற்றவியல் நீதிபதி முன் சீமான் நிறுத்தப்பட்டார் . 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சீமான் மீது தேசப் பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்த புதுச்சேரி காவலர்கள், இயக்குநர் சீமானை புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!
ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த கடலூர் இளைஞர் தமிழ்வேந்தன் என்கிற ஜோதியின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தில் பெரும் வன்முறை வெடித்தது. 15 பேருந்துகள் தாக்கப்பட்டன.

முன்னதாக மஞ்சக்குப்பம் அரசு பணியாளர் ஐக்கிய பேரவை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ்வேந்தன் உடலுக்கு இலட்சக்கணக்கானோர் வணக்கம் செலுத்தினர்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் டாக்டர் ராமதாஸ், பழ. நெடுமாறன், வைகோ , தொல். திருமாவளவன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன், விடுதலை வேங்கைகள் நிறுவனர் மங்கையர்செல்வம், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ.குரு , மாநிலத் துணைத் தலைவர் திருமால்வளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், ரவிக்குமார் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து இறுதி ஊர்வலம் தொடங்கியது . கடலூர் முதுநகரில் உள்ள சுடுகாட்டில் தமிழ்வேந்தனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது .

இறுதி ஊர்வலத்தின் போது வழியில் திடீரென வன்முறை வெடித்தது. ஊர்வலத்தில் வந்தவர்கள் காங்கிரஸ் கட்சியின் பேனர்களை அகற்றியபோது அவர்களை பொலிஸார் தடியடி நடத்தி விரட்டினர் . இதனால் இறுதி ஊர்வலத்தில் வந்தவர்கள் சிதறி ஓடினார்கள்.

அப்போது அந்த வழியாக வந்த பஸ்களின் கண்ணாடிகளை சிலர் கல்வீசித் தாக்கி உடைத்தனர். மொத்தம் 15 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த வன்முறையில் பத்திரிக்கையாளர்கள் சிலரும் தாக்கப்பட்டனர். பின்னர் ஊர்வலம் தொடர்ந்து நடந்தது.

முன்னதாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர்கள் பேசினர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில்,

இலங்கைத் தமிழர்களுக்காக இதுவரை வெளிநாட்டுத் தமிழர்கள் 3 பேர் உட்பட 8 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் . யாரும் உயிர் மாய்த்துக் கொள்ள வேண்டாம். தமிழ்வேந்தன் விட்டுச் சென்ற தீ இனி யாரையும் தொடக்கூடாது. இனி உயிருடன் இருந்து எல்லோரும் போராட வேண்டும் என்றார்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பேசுகையில்,

தமிழ்வேந்தன் , அர்ப்பணித்த உயிர் நம்மை நெகிழ வைக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு யாரும் இனி உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது. அமைதியான தமிழ்வேந்தன் எரிமலையாக வெடித்திருப்பது உலகத் தமிழர்களை உசுப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் இதனை நினைத்து உலகத் தமிழர்களுடன் இணைந்து இலங்கையில் போர் நிறுத்தத்திற்குப் போராட வேண்டும். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக உயிர்நீத்த தமிழ்வேந்தன் குடும்பத்திற்கு 3 இலட்சம் ரூபாய் உதவியாக வழங்குகின்றோம் என்றார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில் ,

தமிழகத்தில் தனித்தனியாகப் போராடியவர்கள் இப்போது ஒன்றிணைந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை ஏற்படுத்தி ஓரணியாகப் போராடி வருகிறோம். திருமாவளவன் 4 நாள் உண்ணாநிலை இருந்தபோது உடல் சோர்ந்ததே ஒழிய உள்ளம் சோர்வடையவில்லை.

நான்தான் அவரைக் கட்டாயப்படுத்தி உயிரை மாய்த்துக் கொள்வதில் எந்த நன்மையும் கிடையாது. நாம் ஒன்றாக இருந்து மக்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தி தமிழக அரசையும், ஒன்றுமே செய்யாத இந்திய அரசையும் திசை திருப்பும் அளவிற்குப் போராட்டம் நடத்தி இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்துவோம் என்றேன்.

அதனை ஏற்று அவரும் உண்ணாநிலையை முடித்துக்கொண்டார். இதுவரை ஆட்சியில் இருப்பவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக ஒன்றும் செய்துவிடவில்லை. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று இந்தியாவையும், உலகத்தையும் வலியுறுத்தி வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்தனர்.

இன்று நடைபெற்ற நிகழ்வில் படுகாயமடைந்து 64 பேர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தமிழ்வேந்தனோடு இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதை விட்டுவிட வேண்டும். இலங்கைச் சிக்கலுக்குத் தீர்வுகாணும் வழிகளை சிந்தியுங்கள்.

இந்தச் சிக்கலில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கடைசிவரை போராடுவோம். இலங்கையில் நடப்பது போர் அல்ல. அது ஒரு விடுதலை இயக்கம் . விடுதலைப் புலிகள் எப்போதும் தோல்வியடைய மாட்டார்கள். ஈழம் வெல்லும். எனவே அனைவரும் நம்பிக்கையோடு இருப்போம். இணைந்து போராடுவோம். எல்லா முயற்சியும் செய்து போர் நிறுத்தம் செய்வோம். தமிழ்வேந்தனுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் என்றார்
!!!!!!!!!!!!
ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவுக்கு எழுதப்பட்ட முறையீட்டு மனுவை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதுவரிடம் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் அளித்தனர்.
அந்த மனு உடனடியாக ஒபாமாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமெரிக்க தூதரக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
!!!!!!!!!!!!!!!!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சம்பவத்தைக் கண்டித்து , சென்னையில் நேற்று வழக்கறிஞர்கள் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், அவர்கள் தலைமைச் செயலகம் நோக்கி செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர் . இதனிடையே, உயர்நீதிமன்றத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து 4 பேர் கொண்ட நீதிபதிகள் குழு நேரில் ஆய்வு செய்தது. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் , எனவே, வழக்கறிஞர்கள் அமைதியாக இருக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். எனினும் , தீ வைத்து எரிக்கப்பட்ட காவல்நிலையத்தில் இருந்த, போலீசாரின் உடைகளை வழக்கறிஞர்கள் எடுத்து வந்து எரித்தனர். மேலும், உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு துறை அதிகாரியின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனையடுத்து, ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால், அங்கு பதற்றம் உருவானது. இதனிடையே, நேற்று இரவு உயர்நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் 50 வழக்கறிஞர்கள் தங்கியிருப்பதாகவும் , அவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்றும் தகவல்கள் வெளியானது. அவர்களை வெளியேற்றும்படி தற்காலிக தலைமை நீதிபதி, காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதனையொட்டி, இரவு, காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதிரடிப்படை காவல்துறையினரோடு உயர்நீதிமன்ற வளாகத்தை சுற்றிவந்த ஆணையர், நீதிமன்றம் உள்ளே தங்கியிருந்த வழக்கறிஞர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்தார். அரைமணி நேரம் காலஅவகாசம் தருவதாகவும் , அதற்குள் அனைவரும் வெளியேறிவிடவேண்டும் என்றும் எச்சரித்தார். இதனையொட்டி, 5 வழக்கறிஞர்கள் மட்டும் வேறு வழியாக வெளியே சென்றனர். இதனைத்தொடர்ந்து, ஏராளமான போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் தயார் நிலையில் இருந்தனர். உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீசாரும், ஏராளமான செய்தியாளர்களும் குவிந்திருந்தனர். இந்நிலையில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ், நீதிமன்றத்துக்குள் இருந்த வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து, 12 பெண் வழக்கறிஞர்கள் உள்பட 30 வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் , தலைமை நீதிபதி உத்தரவின் பேரில், நீதிமன்றத்துக்குள் இருந்த 62 வழக்கறிஞர்களை வெளியேற்றியதாகவும் , தற்போது, உயர்நீதிமன்ற வளாகம் காவல்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போதும் , அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
!!!!!!!!!!!!!!!!!

தி.மு. அரசைக் கலைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில் திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைகளுக்கு பயப்பட மாட்டோம் என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி கூறினார் .

சென்னை பாடி சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.125 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலை சுற்றுவட்ட மேம்பாலத் திறப்பு விழா பாடியில் நே‌ற்று நடைபெற்றது.

சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி, மருத்துவமனையில் இருந்தபடியே மேம்பாலத்தைத் திறந்து வைத்து, ‌வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பேசுகை‌யி‌ல், இன்றைய தினம் நடைபெறுகின்ற இந்த நல்லவிழாவில் நேரில் கலந்து கொண்டு உங்களோடு பங்கு பெற முடியாமல், உடல்நிலை காரணமாக சென்னை போரூர் மருத்துவமனையில் இருந்தவாறுஇந்த உயர்மட்ட சுற்று மேம்பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

இத்தகைய அரும்பணிகள் பல தி.மு.. ஆட்சியிலே தமிழகத்தில் நடைபெற்று, மக்களுக்காகவே இந்த ஆட்சி அமைந்துமக்களுக்காகவே பாடுபட்டு வருகின்ற இந்த நேரத்தில் இந்த சர்க்காரை கவிழ்க்க வேண்டுமென்று சில சதிகாரர்கள் திட்டமிட்டு செய்கின்ற வேலைகளைதிட்டமிட்டு நடத்துகின்ற வன்முறை செயல்களை மருத்துவமனையிலே இருந்தவாறே நான் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும்தான் இருக்கின்றேன்.

அவர்களுக்கென்று சில பத்திரிகைகள் துணை போகின்றன என்பதை எண்ணும் போதும், சில கட்சிக்காரர்கள் துணை போவதாக இருப்பதும் நாட்டில் நல்ல பரிபாலனத்தை செய்து வருகின்ற ஒரு அரசுக்கு இது போன்ற தொல்லைகளைத் தர நினைப்பதும் சரியல்ல. அவர்கள் என்னதான் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டாலும், சதி வேலைகளில் ஈடுபட்டாலும், அதற்காக பயப்படாமல் நம்முடைய பயணம் நேர்மையான பயணம், நிச்சயமான பயணம்அந்தப்பயணத்தை தொடர்ந்து நடத்துவோம் எ‌ன்று கருணா‌நி‌தி பே‌சினா‌ர்.
!!!!!!!!!!!!
பேரு‌ந்து, அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வன்முறையாளர்களை கண்டதும் சுட த‌மி‌ழ்நாடு காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் (டி.ஜி.பி.) கே.பி.ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்குள் சுப்பிரமணியசாமி தாக்கப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக 19ஆ‌ம் தேதியன்று உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த சம்பவங்களை அடுத்து மாநிலத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடவாமல் இருக்க தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல்துறையினர் செய்துள்ளனர்.

இருப்பினும் இப்பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, மாநிலத்தில் ஒரு சில இடங்களில் சமூக விரோதிகள் பேரு‌ந்துகள் மற்றும் அரசு சொத்துக்களை கல் வீசி சேதப்படுத்துதல் , தீ வைத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, பொது சொத்துக்களை சேதப்படுத்தி, பொதுமக்களின் உயிருக்கும் மற்றும் உடமைக்கும் சேதம் விளைவிக்க முயற்சிக்கும் சமூக விரோதிகளை கண்டதும் சுடவும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என எச்சரிக்கப்படுகிறது எ‌ன்று த‌மி‌ழ்நாடு காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் கே.பி.ஜெயின் த‌ெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்
!!!!!!!!!!!!!!!

இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த ஆளுங்கட்சி திமுகவும் , எதிர்க்கட்சி அதிமுகவும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டிருக் கிறார். அவ்வாறு இவ்விரு கட்சிகளும் இணைந்து போராடினால் அவர்களின் பின்னால் தேமுதிகவும் சேர்ந்து போராடுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் . .

இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசை கண்டித்தும், அங்கு போரை நிறுத்து வதற்கு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் தலையிட வலியுறுத்தியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று அக்கட்சியின் சார்பில் தீவுத்திடலில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை பேரணி நடைபெற்றது.

!!!!!!!!!!!!!
TpúYßThP ùUô¯Ls úTÑm UdLû[d ùLôiP Ck§Vô®p, 196 ùUô¯Ls YZdLj§#ÚkÕ Uû\Ùm ATôV ¨ûX«p Es[]. CRuêXm, EXL A[®p A§L A[Ü ùUô¯Ls YZdLj§#ÚkÕ Uû\Ùm Th¥V#p Ck§Vô ØR#Pj§p Es[RôL “Ùù]vúLô’ AûUl× ùR¬®jÕs[Õ.
NoYúRN Rôn ùUô¯ §]m N²d¡ZûU (©l. 21) LûPl©¥dLlTÓ¡\Õ. CûRùVôh¥, I.Sô.®u LXôNôW AûUlTô] “Ùù]vúLô’ YZdLj§#ÚkÕ Uû\Ùm ATôVj§p Es[ ùUô¯Ls ϱjR Th¥VûX ùY°«hÓs[Õ.
A§L ùUô¯Ls YZdLj§#ÚkÕ Uû\Ùm Th¥V#p Ck§VôÜdÏ AÓjRRôL AùU¬dLô (192 ùUô¯Ls) CWiPôm CPj§Ûm, CkúRôú]£Vô (147 ùUô¯Ls) êu\ôm CPj§Ûm Es[].
Ùù]vúLô ùY°«hÓs[ CkRl Th¥V#p úUÛm ùR¬®dLlThÓs[ ®YWm:
EXLm ØÝYÕm RtúTôÕ ÑUôo 6,000 ùUô¯Ls úTNlTÓ¡u\]. CYt±p ÑUôo 2,500 ùUô¯Ls YZdLj§#ÚkÕ Uû\Ùm ATôVj§p Es[].
200 ùUô¯Lû[ ÑUôo 10 úTo UhÓúU úTÑ¡u\]o. 178 ùUô¯Lû[ ÑUôo 10- 50 úTo UhÓúU úTÑ¡u\]o.
LPkR 30 BiÓL°p EXLm ØÝYÕm 200-dÏm úUtThP ùUô¯Ls YZdLj§#ÚkÕ Uû\kÕ®hP]. 538 ùUô¯Ls YZd¡#ÚkÕ Uû\Ùm ATôVLWUô] ¨ûX«p Es[]. 632 ùUô¯Ls Li¥lTôL YZd¡#ÚkÕ Uû\Ùm ¨ûX«p Es[]. 607 ùUô¯Ls TôÕLôlTt\ ¨ûX«p Es[].
RtúTôÕ EX¡p YZd¡p Es[ ùUô¯L°p êu±p JÚ TeÏ ùUô¯Ls Bl©¬dL SôÓL°p úTNlTÓ¡u\]. AÓjR èt\ôiÓdÏs Bl©¬dL ùUô¯L°p 10 NRÅRm Uû\kÕ®Óm.
G²àm, 800-dÏm úUtThP ùUô¯Ls úTNlTÓm Tl×Yô ¨ë ¡²Vô Sôh¥p ÑUôo 88 ùUô¯Ls UhÓúU YZd¡#ÚkÕ Uû\Ùm ATôVj§p Es[] Gußm AkRl Th¥V#p ùR¬®dLlThÓs[Õ.
ùUô¯Ls YZd¡#ÚkÕ Uû\YRôp, AYtû\l úT£ YkR UdL°u TôWmT¬VªdL TiTôÓm Uû\kÕ®Óm Guß Ùù]vúLô RûXûU CVdÏSo úLô£úWô UhÑWô ùR¬®jRôo.
LPkR 2001-p ùY°«PlThP Ùù]vúLô Th¥V#p, EX¡p 900 ùUô¯Ls YZd¡#ÚkÕ Uû\Ùm ¨ûX«p Es[RôLd ϱl©PlTh¥ÚkRÕ. Ùù]vúLô RtúTôÕ ùY°«hÓs[ Th¥V#p, 2500 ùUô¯Ls YZd¡#ÚkÕ Uû\Ùm ATôVm Es[RôLd ϱl©PlThÓs[Õ. EXLm ØÝY§#ÚkÕm ¡ûPdLl ùTßm RLYpLs A¥lTûP«p, CkRl Th¥Vp AqYlúTôÕ Uôt±VûUdLlThÓ ×§V RLYpLÞPu ùY°«PlTÓ¡\Õ.
!!!!!!!!!!!!!!!
world
இந்தியா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு தாலிபான்கள் மிகப்பெரிய ஆபத்தாக திகழ்வதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரிச்சர்ட் ஹோல்ப்ரூக், சமீபத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விட்டு வாஷிங்டன் திரும்பியுள்ளார்.

தனது, சுற்றுப்பயணம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தான் அரசுக்கும், தாலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே செய்யப்பட்டுளள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்தும், வடமேற்கு மாகாணங்களில் ஷாரியா சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது குறித்தும் அமெரிக்காவின் கவலையை ஜர்தாரியிடம் தெரிவித்தேன்என்றார்.

இந்த ஒப்பந்தங்களால், தாலிபான் பயங்கரவாதிகள் , பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல; இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஆபத்தாக திகழ்வதாக ஜர்தாரியிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இதை ஜர்தாரி மறுக்கவில்லை என்றும் , இதுதொடர்பாக, பாகிஸ்தான் வேறு திட்டம் எதுவும் வைத்திருக்கிறதா என்பதும் எனக்கு தெரியவில்லை. ஆனால், இதுகுறித்து பாகிஸ்தான் அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது என்றும் ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் தெரிவித்தார்.

!!!!!!!!!!!!!!!!!!!
தென்கொரியா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவிவரும் சூழ்நிலையில் , வடகொரியாவின் சிறப்புத் தூதராக, அமெரிக்க அயலுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எல்லைப் பிரச்சனை தொடர்பாக, தென்கொரியா மற்றும் வடகொரியா நாடுகள் இடையே நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது.

இதில், அமெரிக்காவின் நட்பு நாடாக திகழும் தென்கொரியாவை பாதுகாப்பதற்காக, அமெரிக்க ராணுவ முகாம் ஒன்றும் அங்கு அமைந்துள்ளது.

சமீபகாலமாக, இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதைதொடர்ந்து தென்கொரியா மீது தாக்குதல் நடத்தப்போவதாக அடிக்கடி மிரட்டல் விடுத்து வருகிறது வடகொரியா.

இந்நிலையில், வடகொரியாவின் சிறப்புத் தூதராக, அமெரிக்காவின் அயலுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, ஹிலாரி கிளிண்டன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “வடகொரியாவுடன் சமரசப் பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுப்பதை நிறுத்திக்கொள்ளாதவரை, அமெரிக்காவுடனான நட்புறவை வடகொரியா மேம்படுத்த முடியாதுஎன்றார்.

அப்போது, தென் கொரிய அயலுறவுத்துறை அமைச்சர் யு மியாங் வான் உடனிருந்தார்.

!!!!!!!!!!!!!!!!!
இஸ்ரேலின் அடுத்த அரசாங்கத்தை அமைக்குமாறு வலதுசாரி லிகுட் கட்சியின் தலைவர் பென்யமின் நெடன்யாஹுவை அதிபர் ஷிமோன் பெரெஸ் கேட்டிருக்கிறார்.
இதர வலதுசாரிக் கட்சிகளின் ஆதரவையும் மதவாதக் குழுக்களின் ஆதரவையும் பெற்றுள்ள நெடன்யாஹூ , பரவலான ஒரு கூட்டணி அரசை அமைக்க விரும்பி கடிமா மற்றும் தொழிற்கட்சியினரோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
“இஸ்ரேலின் வரலாற்றில் இது முக்கியமான காலகட்டம். இன்றைய ஏராளமான சவால்களை கருத்தில்கொண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனால் எதிரணியில் உள்ள கடிமா கட்சியின் தலைவி ஸிப்பி லிவ்னி கருத்து வெளியிடும்போது, வலதுசாரிகளுடன் பொம்மைகளாக ஆட்சியில் அமர்வதைவிட எதிர்க்கட்சினராக செயல்படுவதையே தாம் விரும்புவதாக குறிப்பிட்டார்.
!!!!!!!!!!!!!!!!
N°‡AÚW‘VÖ«¥ ÙTÛQ L¼T³†R 2 ÚTÖ§NÖŸ RÛX ‰z”; ÙTÖ‰UeL· ˜ÁÂÛX›¥ RPÛ]
°‡AÚW‘VÖ«¥ E·[ J£ ÙNeÚTÖÍz¥ ÚTÖ§Í A‡LÖ¡L[ÖL C£‹RYŸL· NXÖÁ‘Á SqŸ, ÙTLÖ†‘Á ANÁ. N•TY†RÁ¿ CYŸL· ÙNeÚTÖÍz¥ C£‹R]Ÿ.

!!!!!!!!!!!!!!!
sports
Ù^VYŸ†RÚ] RÛXÛU›XÖ] CXjÛL f¡eÙLy A‚ TÖfÍRÖÂ¥ r¼¿TVQ• ÚU¼ÙLց| E·[‰. TÖfÍRÖÁ -CXjÛL CÛP›XÖ] 2 ÙPÍy ÙLցP ÙRÖP¡¥ ˜RXÖY‰ ÙPÍy ÚTÖyz LWÖop›¥ CÁ¿ (NÂefZÛU) ÙRÖPjhf\‰.
!!!!!!!!!
பாகிஸ்தான் fuhr;rpapy; Muk;gk; Mfp,Uf;Fk; JLg;ngLj;jhl;lg;Nghl;bapy; Kjypy; JLg;ngLj;jhl;lj;ij Muk;gpj;h rpwpyq;fh mzp KjyhtJ ,dpq;rpy; ,Jtiu 2 tpf;Nfl; ,og;gpw;f;F 26 Xtupy; 120 xl;lq;fis vLj;JJs;sJ

Leave a Reply

Your email address will not be published.