யாழ். சாவகச்சேரியில் ஆணின் சடலம் மீட்பு

யாழ்.மாவட்டம் தென்மராட்சி பிரிவின் சாவகச்சேரி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொலிஸாரினால் அழுகிய நிலையில் இருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:-

நேற்று வெள்ளிக்கிழமை இரவு மேற்படி நபரின் சடலம் அழுகிய நிலையில் மண்ணினால் மூடியிருந்ததாகவும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அருகாமையிலேயே இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் இச்சம்பவம் தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டு பின் அடையாளம் காண்பதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 , 35 வயது மதிக்கத்தக்க இந்த ஆணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபரை சித்திரவதை செய்த பின் கொலை செய்துவிட்டு வைத்தியசாலைப் பகுதியில் கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Source & Thanks ; tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.