(5ம் இணைப்பு)கொழும்பில் விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்: 2 பேர் பலி; 47 பேர் படுகாயம்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்குள் பிரவேசித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இன்று இரவு கரும்புலித் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன.

எனினும் இந்த வானூர்திகள் இரண்டும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கட்டுநாயக்க சிறிலங்கா வான் படையினர் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் பகுதி ஊடாக இன்று வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில் இரண்டு வானூர்திகள் கொழும்பு நகரை நோக்கிப் பிரவேசிப்பது கற்பிட்டி பகுதியில் உள்ள கதுவீகளால் அவதானிக்கப்பட்டது.

உடனடியாகவே கொழும்பு நகரில் வானூர்தி எதிர்ப்பு பொறிமுறையைச் செயற்படுத்திய படையினர், கொழும்பு நகரில் முழுமையாக மின்சாரத் தடையை ஏற்படுத்தினர்.

அதேவேளையில், வானை நோக்கி வெளிச்சம் பாய்ச்சப்பட்ட அதேவேளையில், வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வானை நோக்கி கடுமையான துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்பட்டது.

[படம்: ரொய்ட்டர்ஸ்; கட்டுநாயக்க பகுதியில் வீழ்ந்ததாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் வானூர்தி]

இதனால் கொழும்பு நகர் இரவு சுமார் 9:20 முதல் சுமார் ஒரு மணி நேரத்துக்குத் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களால் அதிர்ந்து கொண்டிருந்தது. இதனால் கொழும்பில் பெரும் பதற்றம் காணப்பட்டது.

வான் கரும்புலி தாக்குதலில் பங்கேற்ற முதலாவது வானூர்தி கொழும்பு கொம்பனித்தெரு அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வான்படை தலைமையகத்தை அண்மித்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது குண்டு ஒன்றை வீசியதுடன் அங்கு தற்கொலைத் தாக்குதலையும் நடத்தியிருக்கின்றது.

இதனால் கட்டடத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதுடன், இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 47 பேர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள கட்டடத்தின் மீது குண்டு வீச்சு மற்றும் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளது. பாரிய சத்தத்துடன் இடம்பெற்ற கரும்புலித் தாக்குதலின்போது 13 மாடிகளைக் கொண்ட இந்த பாரிய கட்டடம் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது. கட்டத்தின் சிதைவுகள் வீதியில் சிதறிக்கிடக்கின்றன.

உடனடியாகவே தீயணைப்புப் படையினரும், மீட்புப் பிரிவினரும் அப்பகுதிக்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்தில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிகின்றது.

இத்தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இரவு 11:30 நிமிடமளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். மேலும் இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

[படம்: ரொய்ட்டர்ஸ்; விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலுக்குள்ளான உள்நாட்டு இறைவரி திணைக்களம்]

காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா வான் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இச்சம்பவத்தில் காயமடைந்த 47 பேர் இதுவரையில் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா வான் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதில் இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா வான் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

வான் கரும்புலி தாக்குதலில் பங்கேற்ற இரண்டாவது வானுர்தி கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

இதேவேளையில், கட்டுநாயக்க வானூர்தி நிலையப் பகுதியில் தாக்குதலை நடத்திய விடுதலைப் புலிகளின் மற்றைய வானூர்தி வான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

வானூர்தி நிலைய பகுதியில் இருந்து புலிகளின் வானூர்தியின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் வானோடியின் உடலமும் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் இந்த வானூர்தி தாக்குதலில் ஏற்பட்ட உண்மையான சேத விபரங்கள் அல்லது எவ்வாறான தாக்குதல் இடம்பெற்றது என்பது பற்றிய சுயாதீனமான தகவல் எதனையும் பெற முடியாத வகையில் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் ஊடகங்களுக்கு மறைமுகமான தடை உத்தரவு ஒன்றை இன்றிரவு பிறப்பித்திருந்தது.

விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல்கள் முன்னர் நடைபெற்ற போது வன்னியில் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தரையிறங்கும் இடத்தை தேடி சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் பறப்புகளை மேற்கொள்வதும் புலிகளின் வானூர்தி ஓடுதளங்கள் என கணிக்கும் இடங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதும் வழமை.

எனினும் நேற்றைய தாக்குதலின் போது இத்தகைய பறப்புக்களையோ தாக்குதல்களையோ சிறிலங்கா வான்படை மேற்கொள்ளவில்லை என வன்னியில் உள்ள ‘புதினம்’ செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.