2ம் இணைப்பு)மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட மூவர் கடலில் உயிரிழப்பு

சிறிலங்கா படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினால் கொண்டு செல்லப்பட்டவர்களில் மூன்று தமிழர்கள் கடலில் இன்று உயிரிழந்துள்ளனர்.

கடல் கொந்தளிப்பு அதிகமாகவுள்ள நிலையில் மாத்தளனில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை படகு மூலம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினால் கப்பலுக்கு நோயாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

படுகாயமடைந்த நிலையில் இருந்த நோயாளர்கள் கொந்தளிப்புக்கு மத்தியில் படகுகளில் கடல் நீர் நுழைய அவலப்பட்டு கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த அவலத்தில் படகில் மூவர் உயிரிழந்து விட்டனர்.

சிவகுமாரன் சுலக்சனா (வயது 03)

சிறீபன் சவிதா (வயது 10)

நடராஜா நாகேஸ்வரி (வயது 62)

ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர்.

ஏற்கனவே இவ்வாறு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட வேளையில் 3 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த இழப்புக்களுக்கு இந்த அவலப் பயணம்தான் காரணம் என மருத்துவர்கள் ‘புதினம்’ செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருந்துகளை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்திருப்பதே இந்த இழப்புக்களுக்கு காரணமாக உள்ளது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, இன்று நோயாளரை ஏற்றிச்சென்ற ‘கிறின் ஓசனிக்’ கப்பலில் 10 மெற்றிக்தொன் மா மட்டுமே வந்துள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.