விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி ஸ்கூட்டர்கள்!

கொழும்பு: விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வந்த தண்ணீருக்கு அடியில் மூழ்கியபடி செல்ல உதவும் நீர்மூழ்கி ஸ்கூட்டர்கள் (Scuba dive scooters) மற்றும் நீந்திச் செல்ல பயன்படுத்தப்படும் கருவிகளை ராணுவம் பறிமுதல் செய்துள்ளது.

விடுதலைப் புலிகள் வசம் கடைசியாக உள்ளதாக கூறப்படும் பகுதிகளை ராணுவம் படிப்படியாக மீட்டு வருகிறது. நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பு பிடிபட்டது.

அம்பாலவன் போக்கனையும் சிக்கியது:

இந்த நிலையில், புதுக்குடியிருப்புக்கு மேற்கு பகுதியில் உள்ள அம்பாலவன்போக்கனை பகுதியை ராணுவம் சுற்றிவளைத்து கைப்பற்றியது.

விடுதலைப்புலிகளோடு 5 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற சண்டைக்கு பிறகு ராணுவம் இந்த பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

பின்னர் இந்தப் பகுதியில் புலிகள் தண்ணீருக்கு அடியில் நீந்தி செல்ல பயன்படுத்திய நீர்மூழ்கி ஸ்கூட்டர் மற்றும் உபகரணங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

நீருக்கு அடியில் பயன்படுத்தும் கவச ஆடைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் இதர ஆயுதங்களையும் ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் நீண்ட தூரத்திற்கு நீந்திச் செல்ல இவை பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடல் புலிகள் பிரிவினர் இதைப் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.

Source & Thanks : hatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.