சென்னையில் இருந்து இந்திய விமானப் படையினர் இலங்கை பயணம்: அதிர்ச்சி தகவல்

இந்திய விமானப் படை வீரர்கள் 11 பேர், சென்னையில் இருந்து கொழும்பு சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் மார்ஷல் மகேஷ் என்பவர் தலைமையில் இவர்கள் 2 குழுக்களாகப் பிரிந்து கொழும்பு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 17ஆம் தேதி நண்பகல் 7 பேரும், அன்று மாலை 4 பேரும் கொழும்பு சென்றுள்ளனர்.

செய்தியாளர்கள் கண்டுபிடித்து விடாமல் இருப்பதற்காக, விமானப்படை வீரர்கள் அனைவருக்கும் குழுவாக இல்லாமல், தனித்தனியே டிக்கெட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் விமானப்படை தாக்குதலை அந்நாட்டு இராணுவம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்திய விமானப்படை வீரர்கள் கொழும்பு சென்றுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில், இலங்கை விமானப்படை வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக சென்னை வந்தபோது, அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.