இலங்கை ராணுவத்தினரின் துப்பாக்கி மிரட்டலுக்கு பயந்து அகதியாக வந்தோம்

ராமேஸ்வரம்: இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கி மிரட்டலுக்கு பயந்து குடும்பத்துடன் அகதியாக வந்துவிட்டோம் என நேற்று வந்த அகதிகள் தெரிவித்தனர். இலங்கை மன்னார் உப்புக்குளம் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் கோபாலகிருஷ்ணன்(35), இவரது மனைவி ராஜாம்பிகா(33), 2 மாத குழந்தை பியூனிக்கா மற்றும் இவரது மைத்துனர் மஞ்சுநாத் ஆகியோர் நேற்று முன்தினம் படகில் புறப்பட்டு தனுஷ் கோடி துறைமுகம் வந்திறங்கினர்.

அகதிகளாக பதிவு செய்த தனுஷ்கோடி போலீசார் விசாரணைக்குப் பின் இவர்களை மண்டபம் முகாம் அனுப்பி வைத்தனர். அகதி கோபாலகிருஷ்ணன் கூறும்போது, “சொந்த லாரியில் கொழும் பிலிருந்து உணவுப் பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து கடைகளுக்கு சப்ளை செய்தேன். மன்னார் பகுதியிலுள்ள இலங்கை ராணுவத்தினரும், போலீசாரும் அடிக்கடி பணம் கேட்டு துன்புறுத்தினர். மறுத்தபோது ராணுவத்தினர் துப்பாக்கியால் மிரட்டி எனது லாரியை பறித்துக்கொண்டனர். தொழில் செய்ய முடியாமல் போனதாலும், ராணுவத்தினர் தொடர்ந்து மிரட்டியதாலும் உயிருக்கு பயந்து மனைவி குழந்தையுடன் இங்கு அகதியாக வந்துவிட்டேன். இலங்கையில் படகு கிடைக்காததாலும், ராணுவத்தினரின் கெடுபிடியாலும் இங்கு வரமுடியாமல் பயந்து கொண்டு ஏராளமானவர்கள் மன்னாரில் தங்கியுள்ளனர்’ என்றார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.