“இந்திய அரசே கண்ணைத் திறந்து பலியாகும் தமிழனைப் பார்”: பிரித்தானியாவில் இந்திய தூதரகம் முன்பாக போராட்டம்

தமிழர் தாயகத்தில் நடைபெறுகின்ற தமிழின சுத்திகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக பிரித்தானிய தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.

பிரித்தானிய தழிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் மகளிர் அமைப்பு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியனவற்றின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை காலை 10:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:00 இக்கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் குழந்தைகள், முதியவர்கள் என வயது வேறுபாடின்றி 2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

அங்கு கூடியிருந்த மக்கள்

“இந்தியா, இந்தியா இலங்கையில் நடக்கும் போரை நிறுத்து”

“நிறுத்து, நிறுத்து ஆயுத உதவியை நிறுத்து”

“நிறுத்து, நிறுத்து நிதி உதவியை நிறுத்து”

“உதவு, உதவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவு”

“இந்திய அரசே கண்ணைத் திறந்து பலியாகும் தமிழனைப் பார்”

“ஜ.நா. தடை செய்த கொத்துக்குண்டு தமிழனை கொள்வது தெரியவில்லையா?”

“வேண்டும், வேண்டும் சமாதானம் வேண்டும்”

“வேண்டும், வேண்டும் தமிழீழமே வேண்டும்”

போன்ற பதாதைகளை ஏந்தியவாறும், முழக்கங்களை எழுப்பியவாறும் தமது ஆதங்கங்களை இந்திய அரசின் துரோகத்தனத்திற்கு எதிராக வெளிப்படுத்தினர் .

ஆர்ப்பாட்டதின் முடிவில் இந்திய தூதரகத்திடம் மனு கையளிக்கப்பட்டது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.