புதுக்குடியிருப்பைப் பிடித்து விட்டோம் – ராணுவம்

கொழும்பு: விடுதலைப் புலிகள் வசம் இருந்து வந்த புதுக்குடியிருப்பைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள் வசம் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளே உள்ளன. அவற்றையும் பிடிக்க ராணுவம் முயன்று வருகிறது.

இதுதொடர்பாக கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் தினசரி சராசரியாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று வருகிறது ராணுவம்.

இந்த நிலையில், புலிகள் வசம் இருந்த புதுக்குடியிருப்பைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளது.

ராணுவத்தின் 53-வது படைப் பிரிவினர் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை முறியடித்து புதுக்குடியிருப்புக்கு தெற்கே நிலை கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ராணுவத்தின் 55, 58 ஆகிய படைப்பிரிவுகளும் மற்றும் அதிரடிப்படை 2,4 ஆகிய படைப் பிரிவினரும் புதுக்குடியிருப்பை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாகவும் கூறப்படுகிறது.

அங்கிருந்து வெளியேறும் மக்கள் பாதுகாப்பாக ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் விடுதலைப்புலிகள் பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.