சு.சுவாமி மீது தாக்குதல்-பாராட்டி போஸ்டர்கள்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஜனதாக் கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமியை தாக்கியதைப் பாராட்டி சென்னை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது அவரை சில வக்கீல்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். அழுகிய முட்டைகளையும், தக்காளிகளையும் முகத்திலும், முதுகிலும் வீசி அசிங்கப்படுத்தினர்.

நீதிபதிகள் முன்பு நடந்த நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சுப்ரமணியம் சுவாமி மீது முட்டை வீசியதை வரவேற்றும், பாராட்டும் இன்று சென்னை நகரின் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சுப்ரமணியம் சுவாமி செல்லும் இடம் எல்லாம் இதுபோல சிறப்பு செய்யுங்கள் என்று அந்த போஸ்டர்களில் வாசகங்கள் உள்ளன.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.