இயக்குநர் சீமான் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவார் : சட்டசபையில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி உறுதி

சென்னை : விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பேசிய இயக்குநர் சீமான் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் கைது செய்யப்படுவார் என மின்சார துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு வேலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஞானசேகரன் , இந்திய இறையான்மைக்கு எதிராக பேசி வரும் சீமானை ஏன் தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் இருக்கிறது என கேள்வி எழுப்பினார். எம்.எல்.ஏ., ஞானசேகரனது கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியதாவது : இயக்குநர் சீமானை பிடிக்‌க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்னும் இரு தினங்களுக்குள் நிச்சயமாக சீமான் பிடிபடுவார் . இவ்வாறு அவர் தெரிவித்தார். இயக்குநர் சீமான் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதற்காக ஏற்கனவே இரு முறை கைது செய்யப்பட்டு , பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.