‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (19.02.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 30 மெட்ரிக் தொன் அடங்கிய நிவாரணப் பொருட்கள் நேற்று புதுமாத்தளன் பகுதிக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினூடாக அனுப்பப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவித்தன. 20 தொன் மா, 6 தொன் தானிய வகைகள் மற்றும் 4 தொன் சீனி போன்றன அந்த நிவாரணப் பொருட்களில் அடங்குவதாகக் கூறப்படுகின்றது.

பொருட்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரது வசதிகளை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றே ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

மேற்படி கப்பல் செஞ்சிலுவைச் சங்கக் கொடிகளைப் பறக்கவிட்டபடியே பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதாகவும் காயமடைந்தோருக்கான சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் விடுத்துள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள 3 இலட்சம் பொதுமக்களுக்கு 30 தொன் உணவுப் பொருள்கள் மட்டுமே சிறீலங்கா அரசினால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் பிரகாரம் உணவுப் பொருள்களை வழங்கல் செய்யும்போது ஒருவருக்கு 66 கிறாம் மாவு, 20 கிறாம் பருப்பு, 14 கிறாம் சீனி என 100 கிறாம் உணவுப் பொருளே கிடைக்கும் எனவும், அனைத்துலகை ஏமாற்றும் சிறீலங்கா அரசின் கபடத்தனம் இதுவெனவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!
சுனாமி அனர்த்தத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது வன்னியில் யுத்த அனர்த்தத்திற்கு உள்ளாகிக் காயமடைந்தவர்களின் நிலை மிக மோசமானது என மட்டக்களப்பு -திருகோணமலை ஆயர் கலாநிதி அதி.வந்.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார் .

திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்டுத் திரும்பிய பின்பு இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

“பாதுகாப்பு தரப்பின் விசேட அனுமதி பெற்றே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டோம்.இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படை ஆகியன அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் வெளியார்கள் பார்வையிடுவதற்கு அனுமதியில்லை. இந்நிலையிலேயே இந்த விசேட அனுமதியைப் பெற்று நாம் நோயாளர்களைப் பார்வையிட்டோம்.

காயமடைந்தவர்களைப் பொறுத்த வரை பலரது கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன . பலர் கைகளையும் கால்களையும் இழந்துள்ளனர். சிலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சிலரது உடலினுள் இன்னமும் குண்டுகள் அகற்றப்படாமல் இருப்பதை எக்ஸ்ரே மூலம் அறியக் கூடியதாக இருந்தது.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது மக்களுக்கு இப்படியும் ஒரு மோசமான நிலை வந்து விட்டதே என்று வேதனையாக உள்ளது. ஏற்கனவே ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கிருந்து சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளமையினால் வைத்திய சாலையில் இட நெருக்கடி காரணமாக மெத்தைகள் போடப்பட்டு நோயாளிகள் நிலத்தில் படுக்க வைக்கப்பட்டுள்ளார்கள் . இதனைத் தவிர ஏனைய வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.

மேலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நிலமையைச் சமாளிப்பதற்கு வைத்தியசாலை நிர்வாகம் அங்கு எந்நேரத்திலும் தயார் நிலையிலேயே இருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. இந்த விடயத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

காயமடைந்து வைத்தியசாலையில் உள்ளவர்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு எந்த சிந்தனையும் இல்லை. அவர்களுடைய உறவினர்களைப் பற்றிய சிந்தனையிலேயே அவர்கள் இருக்கின்றார்கள்.தங்கள் உறவினர்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றுத் தருமாறு அவர்கள் கோரினாலும் அது உடனடியாக சாத்தியப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

வைத்திய வசதிகளும் ஏனைய வசதிகளும் அவர்களுக்கு போதியளவு வழங்கப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாக இருந்தது.வைத்தியர்கள், தாதிகள் உட்பட வைத்திய மற்றும் சுகாதார துறையைச் சார்ந்த சகலரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவது பாராட்டுககுரியது ” என்றும் அவர் தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!
நாட்டில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ளும் நோக்குடன் 1987 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் இல்லாதொழித்து விட்டன என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார் . அதிகாரப் பரவலாக்கலை முறையாக முன்னெடுத்துச் சென்றிருந்தால் இலங்கை இனப்பிரச்சினை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய பஞ்சாயத்து அமைச்சர் மணி சங்கர் ஐயரின் புத்தக வெளியீட்டு விழா புதுடில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டமூலம் தற்பொழுது பொருத்தமான ஒன்றாகும் என்று கூறிய அவர் அதனை நடைமுறைப்படுத்த தான் முயன்றபோதும் ஒரு சில அரசியல்கட்சிகள் அதனை நடைமுறைப்படுத்த அனுமதிக்கவில்லை என்றும் கூறினார். 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது சுதந்திர தமிழ் அரசொன்றை அமைக்க வழி வகுத்துவிடும் என்று சில அரசியற் கட்சிகள் தடுத்து விட்டதாகவும் கூறினார். எனினும் கட்சிகளின் பெயர்களை அவர் பிரஸ்தாபிக்கவில்லை. தொடர்ந்து பேசிய அவர், “13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதவாறு சதி இடம் பெறாதிருந்தால் பிரச்சினைகள் தீர்ந்திருக்கும். ஆனால் பதவிக்கு வரும் ஒவ்வொரு அரசும் குறித்த 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வராதிருப்பதையே உறுதி செய்து வருகின்றன”என்று சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச்டசட்ட மூலத்தை நடைமுறைப்படுத்த தன்னாலும் முடியாது போனது என்பதை ஏற்றுக் கொண்ட அவர் சில வேளைகளில் 75 வீதமான சிங்க மக்கள் புலிகளை தமிழர்கள் ஆதரிப்பதாகக் கூறுகின்றனர். தமிழ் மக்களுக்கு வேறு தெரிவு இல்லை. ஏனெனில் அரசாங்கம் அவர்களுக்கு வேறு தெரிவு எதனையும் வழங்கவில்லை .

புலிகள் சிலவகையில் அவர்களுக்கு கௌரவத்தைக் கொடுக்கின்றனர். எனவே அவர்கள் புலிகளை ஆதரிக்க தள்ளப்படுகின்றனர். அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை.அதற்காக தனிநாடு தேவை என்றோ, அவர்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவென்றோ அர்த்தம் கொள்ளக் கூடாது என்றும்அவர் தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நேற்றைய (புதன்கிழமை) கூட்டத்தில் இலங்கை விவகாரம் பற்றிய விவாதத்தை தடுப்பதில் யப்பான் முனைப்புக் காட்டியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித அவலம் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான மெக்சிக்கோவின் தூதுவர் கிளவுட் ஹெல்லர் (Claude Heller) இம்மாத முற்பகுதியில் கேள்வி எழுப்பியதுடன், ஐக்கிய நாடுகள் சபையில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார
இது பற்றி நேற்று மீண்டும் கருத்து வெளியிட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான மெக்சிக்கோவின் தூதுவர் கிளவுட் ஹெல்லர் (Claude Heller), சபையின் பொதுச் செயலர் பான் கி-மூன் தனது தூதுவரை கொழும்பிற்கு அனுப்பியிருப்பதால், விவாதம் பற்றி முன்னர் தான் விடுத்த வேண்டுகோள் தொடர்ந்தும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறினார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித அவலம் பற்றி மெக்சிக்கோ நேற்று (புதன்கிழமை) மீண்டும் பாதுகாப்பு சபையில் கேள்வி எழுப்பியபோது, இம்மாதம் பாதுகாப்பு சபைக்குத் தலைமை வகிக்கும் யப்பானின் தூதுவர் யுகியோ ரகாசோ (Yukio Takaso), இலங்கை பற்றிய விவாதத்தினைத் தவிர்க்கும் வகையில் பிரயத்தனங்களை மேற்கொண்டு கருத்துக்களை வெளியிட்டதாகவும், சிறீலங்காவைப் பாதுகாப்பது யப்பானின் தேசியக்கொள்கை எனவும் ஐ.நா சபை ஊடகவியலாளர்கள் அவதானம் வெளியிட்டுள்ளனர்.
யப்பான் சிறீலங்காவில் மிகப்பெரும் முதலீடுகளை மேற்கொண்டிருப்பதுடன், பெளத்த நாடு என்ற வகையில் சிறீலங்காவிற்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்கி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது .
!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்ட இந்திய இன்போசிஸ் கணனி நிறுவனத்தின் தலைவர் என்.ஆர். நாராயணமூர்த்தி தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த பதவியை தொடர்ந்து வகிக்க முடியாதென நாராயணமூர்த்தி ஜனாதிபதி மகிந்தவுக்கு அறிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது ஜனாதிபதியினால் தமக்கு அளிக்கப்பட்ட சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பதவி பெருமையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

குறித்த பதவிக்கு தம்மை நியமித்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயணமூர்த்தி ஜனாதிபதியின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன சனிக்கிழமை தகவல் வெளியிட்டிருந்தார்.

எனினும், நேற்றைய தினம் இந்தப் பதவியிலிருந்து தாம் விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நாரயணமூர்த்தி அறிவித்துள்ளார்.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி இலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கக் கூடாதென தமிழகத்தில் கடும் எதிர்ப்பலை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கத
!!!!!!!!!!!!!!!!!
வன்னிப் பிரதேசத்தில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான செய்திகளை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் இருட்டடைப்பு செய்வதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்று வரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை தமிழ் ஊடகங்கள் மற்றும் பி.பி.சி.யின் தமிழழோசை ஆகிய ஊடகங்கள் மட்டுமே செய்தியாக வெளியிட்டு வருவதாக புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இயங்கிவரும் முக்கிய ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்கள் எதுவும் வன்னி பொதுமக்கள் இழப்புக்கள் குறித்து செய்திகளை வெளியிடுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்துவதாகவும், விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து வரும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

எனினும், இவ்வாறான செய்திகள் யதார்த்தத்திற்கு புறம்பான வகையில் வெளியிடப்பட்டு வருவதாகவும், விடுதலைப் புலிகள் பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30,000ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்திருப்பதாக அறிவிக்கப்படும் அதேவேளை, புலிகள் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டால் இவ்வாறான பாரிய எண்ணிக்கையிலான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் பிரவேசிக்க அனுமதி கிடைத்திருக்காது என புலிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இடம்பெயர்ந்த மக்களுக்கு அவுஸ்திரேலியா மேலும் 4 மில்லியன் டொலர் நிதியுதவி
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென மேலும் 4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இருப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறீலங்கா அரசுடன் இணைந்து பணியாற்றும் செஞ்சிலுவை அனைத்துலக சங்கம், மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிநேய அமைப்புக்கள் ஊடாக இந்த உதவி வழங்கப்பட இருப்பதாக , சிறீலங்காவிற்கான அவுஸ்திரேலிய தூதுவர் கதி குளுக்மன் (Kathy Klugman) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளத
வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களிற்கான தற்காலிக குடிசைகள், குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நிதி உதவும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் இன்றுவரை 37.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை மனிதாபிமான உதவிகளுக்கு வழங்கியிருப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மருத்துவ அமைப்புக்கள் வன்னி செல்ல சிறீலங்கா அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. நோர்வே, மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அமைப்புக்களே, தமது நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் என்பவற்றிடம் சிறீலங்கா அரசின் அனுமதிக்கான கோரிக்கையை விடுத்துள்ளன.
அவுஸ்திரேலிய மருத்துவ உதவி மையத்தின் பணிப்பாளர் வி.மனோமோகன், நோர்வே தமிழ் நலவாழ்வு மையத்தின் இணைப்பாளர் ரி.சிவகணேசன் ஆகியோர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது அமைப்புக்கள் சுனாமி ஏற்பட்ட பின்னர் தொடர்ச்சியாக வன்னிக்கு மருந்துப் பொருள்களையும், மருத்துவர்களையும் அனுப்பி வருவதாகவும், இதேபோன்ற முயற்சியே தற்பொழுதும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினர்.
அவுஸ்திரேலிய மருத்துவர்கள் தம்முடன் அவசர மருத்துவத்திற்குத் தேவையான மருந்துப் பொருள்கள் , மற்றும் மருத்துவக் கருவிகளை தம்முடன் எடுத்துச் செல்ல ஆயத்தமாக உள்ளனர்.
இதேபோன்று நோர்வேயில் இருந்து மருத்துவர்கள், மற்றும் மருத்துவ உதவியாளர்கள் 20 பேர் உடனடியாக வன்னி சென்று மக்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்ற போதிலும் , சிறீலங்கா அரசிடம் இருந்து இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என மருத்துவர் ரி .சிவகணேசன் தெரிவித்தார்.
வன்னியில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நாளாந்தம் காயமடைகின்ற போதிலும், அங்கு 6 மருத்துவர்கள் மட்டுமே தற்பொழுது பணியாற்றி வருகின்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான் கி-மூன் (Ban Ki-Moon), அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ் ரீபன் ஸ்மித் (Stephen Smith), மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றிடம் வன்னி செல்வதற்கான அனுமதி பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருப்பதாக மருத்துவர் வி.மனோமோகன் கூறினார்.
2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வன்னிக்கான மருந்துப் பொருள்களுக்கு சிறீலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளதால், பல நூற்றுக்கணக்கான காயமடைந்த மக்கள் மருந்துப் பொருள்கள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவில் உள்ள மருத்துவர்கள், மற்றும் மருத்துவ உதவியாளர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என சிறீலங்கா அரசு உத்தரவிட்டுள்ளதாக, கடந்த 11ஆம் நாள் சிறீலங்கா மருத்துவ சேவையின் பொதுச் செயலர் மருத்துவர் அலித் மென்டிஸ் (Alit Mendes) பி.பி.சி (BBC) செய்திச் சேவைக்குக் கூறியிருந்த நிலையில், தாம் வன்னிக்கு மருந்து மற்றும் மருத்துவர்களை அனுப்பும் இந்த முடிவை எடுத்திருப்பதாக தமிழ் மருத்துவ அமைப்புக்கள் தெரிவித்தன.
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய அமைப்புக்கள் வன்னியிலுள்ள பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகள் தேவை என அறிவித்த பின்னரே அங்குள்ள மருத்துவர்களையும், உதவியாளர்களையும் வெளியேறுமாறு சிறீலங்கா அரசு அறிவித்திருந்தது.
பொதுமக்களுக்கு அசவரமாகத் தேவைப்படும் அடிப்படை மருத்துவ உதவிகளை அந்த நாட்டின் அரசாங்கமே மறுத்துள்ள நிலையில், அந்த மக்களுக்கு உதவி செய்யும் தார்மீகப் பொறுப்பு மருத்துவர்கள் உட்பட அனைத்துலக சமூகத்திற்கு இருப்பதை மருத்துவர் வி.மனோமோகன் சுட்டிக்காட்டினார்
!!!!!!!!!!!!!!!!!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பிரதி செயலாளர் ஜோன் ஹோம்ஸ் இன்று இலங்கை வந்துள்ளார்.
அவர் இன்று அதிகாலை 4.35 க்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு யு. எல். 228 என்ற விமான மூலம்; வந்தடைந்தார்

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.

வடக்கு மாகாண மக்களுக்கென மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்துவதற்காகவே ஜோன் ஹோம்ஸ் இலங்கை வருவதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜோன் ஹோம்ஸ் தமது இந்த விஜயத்தின் போது,ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

!!!!!!!!!!!!!!!!!!
நேற்று புதன்கிழமை அதிகாலை படையினரின் ஆட்லறி ஷெல்கள் பொதுமக்களின் வீடுகள் மீது வீழந்து வெடித்ததால் 38 பேர் கொல்லப்பட்டனர்; 140 பேர் காயமடைந்தனர். ஷெல்கள், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து தெற்கு நோக்கி வந்தனவாகவே தெரிந்தன. புதுமாத்தளன் வைத்தியசாலை அதிகாரியும், சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் துரைராஜா வரதராஜா மேற்கண்ட தகவல்களை ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.

அந்நிறுவனத்துக்கு அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:
அரசாங்கம் பிரகடனம் செய்துள்ள மக்கள் பாதுகாப்பு வலயப்பகுதி நோக்கி நேற்று அதிகாலை ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் நித்திரையில் இருந்த ஒரே குடும்ப உறவுகள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மொத்தம் 38 சடலங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டன.
ஷெல்கள் யாவும் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வந்து பொதுமக்கள் பகுதிகளில் வீழ்ந்தன. பின்னர் இரு தடவைகள் விமானத் தாக்குதல்கள் அந்தப் பகுதியில் நடத்தப்பட்டன . அந்தத் தாக்குதலில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களின் சடலங்களும் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டன. இந்தத் தாக்குதலில் மொத்தம் 80 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நேரில் கண்ட மக்கள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சை இன்றி மரணமாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வேறு வைத்தியசாலைகளுக்கு அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட வசதிகள் குறைந்த வைத்தியசாலையிலேயே டாக்டர் வரதராஜா தன்னால் இயன்றவரை மக்களை காப்பாற்றப் பாடுபடுகின்றார் என்று ஏ.பி . செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவில் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. பொதுமக்கள் கொல்லப்படு வதாக வெளிவரும் தகவல்கள் புனையப்பட்டகதைகள்.
இப்படிக்கூறியுள்ளார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார.
புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மக்கள் பாதுகாப்பு வலயப்பகுதியில் நேற்று அதிகாலை படையினரின் ஷெல் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளிவரும் தகவல்கள் தொடர்பாக அவரிடம் ஏ.பி. செய்தியாளர் கேட்டபோது
பொதுமக்களை இலக்கு வைத்துதாக்கப்பட்டதாகக் கூறப்படுவதை நான் மறுக்கிறேன்.
விடுதலைப் புலிகளின் நிலைகள் மீதே படையினர் தாக்குதல் நடத்துகின்றனர். சில இலக்குகளை படையினர் தெரிவு செய்துள்ளனர் . அவை எல்லாம் விடுதலைப் புலிகளின் இலக்குகளாகும்.
பொதுமக்களுக்கு எதிராக எந்தத் தாக்குதல் நடவடிக்கையையும் அரசு முன்னெடுக்கவில்லை. பொது மக்கள் தாக்கப்பட்டதாக வெளிவரும் தகவல்கள் புனையப்பட்ட தகவல்களே என்றார் அவர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
இராணுவத்தினரை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய இ.போ.ச.பஸ் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வாவியினுள் விழுந்ததால் அதன் சாரதியும், அதில் பயணம் செய்த இராணுவ சிப்பாயும் மரணமானார்கள்.
திங்கட்கிழமை அதிகாலை பொலநறுவை மன்னம்பிட்டி பகுதியில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது .
முல்லைத்தீவிற்கு படையினரை ஏற்றிக் கொண்டு சென்று இறக்கிவிட்டு வரும்போதே இந்த விபத்து இடம் பெற்றது.
பஸ் வாவியில் விழுந்ததால் இருவரும் நீரில் மூழ்கி மரணமானதாக தெரிவிக்கப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் விடுமுறையை அரசியல் அமைப்புக்கும் நாட்டிற்கும் எதிராக பயன்படுத்துவதை இட்டு கவலை அடைவதாக ஆளும்தரப்பின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஸ் குணவர்தன நேற்று புதன் கிழமை சபையில் தெரிவித்தார் .
பாராளுமன்றத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கான விடுமுறைக்கு அனுமதிகோரியதை அடுத்தே அமைச்சர் தினேஸ் குணவர்தன இவ்வாறு கூறினார்.
சிவாஜிலிங்கம் எம்.பி.யின் விடுமுறைக்கான பிரேரணையை சபைக்கு சமர்ப்பித்த தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.யான சொலமன் எஸ். சிரில் சிவாஜிலிங்கம் எம்.பி .க்கு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி (நேற்று) முதல் 3 மாதகாலத்திற்கு சபை அமர்வுகளுக்கு சமுகமளிக்காமல் இந்த அனுமதிதருமாறு கோரினார்.
இந்த பிரேரணையை சக உறுப்பினர் ஒருவர் வழி மொழிந்ததன் பின்னர் எழுந்த அமைச்சர் தினேஸ் குணவர்தன.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு விடுமுறை வழங்குவதில் எமக்கு எந்த ஆட்சேபமும் கிடையாது.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த விடுமுறையை அரசியல் அமைப்புக்குப் நாட்டிற்கும் எதிராக பயன்படுத்துவதையிட்டு நாம் சபையின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் கவலையும் அடைகிறோம்.
இருந்த போதிலும் இன்று (நேற்று) இந்த விடுமுறையை வழங்குவதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது என்று கூறி அமர்ந்தார்.
இதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்னுமொரு எம்.பி.யாண (வன்னி மாவட்டம்) கனகரட்னத்திற்கான விடுமுறை அனுமதிக்கான பிரேரணையும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது .
இந்த பிரேரணையை சமர்ப்பித்த அக் கட்சியின் சக எம்.பி. யான துரைரட்ணசிங்கம் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதியிலிருந்து (நேற்று) கனகரட்ணம் எம்.பி. 3 மாத காலப்பகுதிக்கு சபை அமர்வுகளுக்கு சமுகமளிக்காமல் இருக்க அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார
!!!!!!!!!!!!!!!
பத்திரிகைகளில் காணப்படும் மணமகன் தேவை என்ற விளம்பரங்களைப் பார்த்து அவற்றின் மூலம் ஐந்து பெண்களைத் திருமணம் செய்தவரை எல்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர் தன்னை அமைச்சின் உயர் அதிகாரி என்றும் திணைக்கள உயர் அதிகாரி என்றும் கூறி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட மனைவி தீரவிசாரணை செய்தபோது இவரது காதல் விவகாரங்கள் தெரியவந்தது.
இதுகுறித்து அவர் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்த புகாரையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு எல்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இவருக்கு க.பொ.த.சாதாரண தர வகுப்பில் கல்விகற்கும் மகள் ஒருவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் இப்பெண்களிடம் இருந்து 40 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார் எனவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த ஐந்து பெண்களும் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india news
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்திய விமானப் படை வீரர்கள் 11 பேர், சென்னையில் இருந்து கொழும்பு சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஏர்மார்ஷல் மகேஷ் என்பவர் தலைமையில் இவர்கள் 2 குழுக்களாகப் பிரிந்து கொழும்பு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 17ஆம் தேதி நண்பகல் 7 பேரும், அன்று மாலை 4 பேரும் கொழும்பு சென்றுள்ளனர். செய்தியாளர்கள் கண்டுபிடித்துவிடாமல் இருப்பதற்காக, விமானப்படை வீரர்கள் அனைவருக்கும் குழுவாக இல்லாமல், தனித்தனியே டிக்கெட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது . இலங்கையில் விமானப்படை தாக்குதலை அந்நாட்டு ராணுவம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்திய விமானப்படை வீரர்கள் கொழும்பு சென்றுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில், இலங்கை விமானப்படை வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக சென்னை வந்தபோது, அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!
இந்திய வெளிவிவாகரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையானது ஈழத் தமிழர்கள் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகளை விடக் கொடூரமானது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ சாடியுள்ளார்.
இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
இலங்கையில் நாளாந்தம் செத்துக் கொண்டிருக்கும் தமிழ் இன மக்களை காப்பாற்ற வேண்டும் என்று தாய்த் தமிழகத்து மக்களின் உள்ளம் வேதனையில் துடித்துக் கொண்டு இருக்கையில் , அந்த நெஞ்சில் நெருப்பை அள்ளிப்போடும் அக்கிரமத்தை இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் சிங்கள கொடியோரின் ஊது குழலாக மாறி அறிக்கை தந்துள்ளார்.
மத்திய அரசின் மீது நான்காண்டு காலமாக நான் கொடுத்த குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு பிரணாப் முகர்ஜி தந்த அறிக்கையே ஒப்புதல் வாக்குமூலம் ஆகிவிட்டது.
உலகின் பல நாடுகளில் இருந்தும் பெற்றுள்ள ஆயுத பலத்தோடும், இந்தியா வழங்கி உள்ள மிக சக்தி வாய்ந்த நவீன ஆயுதங்களின் உதவியோடும் சிங்கள இராணுவம் தமிழர் தாயகத்தின் பகுதிகளை ஆக்கிரமித்ததை ராஜபக்ச கெக்கலிகொட்டி கொக்கறிப்பதைப் போல பிரணாப் முகர்ஜியும் அதே மமதையோடும், கும்மாளம் போடும் குதூகலத்தோடும் வார்த்தைகளை வீசியுள்ளார்.
சிங்கள இராணுவம் பாரிய வெற்றிகளை பெற்றுவிட்டதாகவும். கிளிநொச்சி வீழ்ந்து விட்டதாகவும் . ஆனையிறவைக் கைப்பற்றி விட்டதாகவும் முல்லைத்தீவுக்குள் நுழைந்துவிட்டதாகவும் தம்பட்டம் அடிக்கிறார் பிரணாப் முகர்ஜி.
வெறும் 150 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டு விட்டதாகவும் , அதுவும் 70 ஆயிரம் தமிழ் மக்களை வலுக்கட்டாயமாக புலிகள் பிடித்து வைத்திருப்பதாகவும் பிரணாப் முகர்ஜி கூறுகிறார்.
தமிழர்களை சிங்கள இராணுவம் துடிக்க துடிக்க கொல்வதை மூடி மறைத்து தமிழர்களை விடுதலைப் புலிகள் கொல்கிறார்கள் என்று மனச்சாட்சியை குழிதோண்டி புதைத்து விட்டு பிரணாப் முகர்ஜி மிக ஏளனமாகக் குற்றம் சாட்டுகிறார்.
முல்லைத்தீவு பகுதியில் ஏற்கனவே மூன்று லட்சம் தமிழர்கள் இருந்தனர். இப்போது வவுனியாவில் இருந்தும், கிளிநொச்சியிலிருந்தும் இரண்டு லட்சத்து இருபதாயிரம் மக்கள் முல்லைத்தீவுக்குள் வந்துள்ளனர்.
தமிழ் இனத்தையே அழிக்க தன் கொலைகார இராணுவத்தை ஏவி உள்ள ராஜபக்ச கூறியதை இந்திய வெளிவிவகார மந்திரி அப்படியே வழிமொழிகிறார். 35 ஆயிரம் தமிழர்கள் புலிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வந்துவிட்டார்களாம். சிறிலங்கா அரச தலைவர் சொன்னதை இந்தியாவின் மந்திரியும் சொல்கிறார்.
அது மட்டுமல்ல, போர் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் விரைவில் எல்லாம் முடிந்து விடும் என்றும், அதற்குமுன் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்து விடவேண்டும் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
புலிகள் ஏற்கனவே தமிழ் இனத்திற்கு கேடுசெய்து விட்டார்களாம். 23 வருடங்களாக இலங்கைத் தீவில் இருந்த அமைதியின்மை ஒரு முடிவுக்கு வரப்போகிறதாம். அமைதி திரும்பப் போகிறதாம் . அதன்பிறகு தமிழர்கள் பகுதிகளில் பொருளாதார மறுவாழ்வுக்கு இந்தியா உதவுமாம்.
தமிழீழத்தை சுடுகாடாக்கிவிட்டு அதற்குப்பின் இந்தியா அங்கே புதுவாழ்வு கொடுக்கப்போகிறதாம். நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறது.
புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டு வீசியதில் இராணுவத்தின் பீரங்கிகள் தாக்கியதில் மருத்துவமனையில் இருந்தவர்களும் சேர்த்தே கொல்லப்பட்டு விட்டார்கள் . இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு விட்டனர். மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று உள்ளனர்.
பச்சிளம் குழந்தைகளும், தாய்மார்களும் வயது முதிர்ந்தவர்களும் கொல்லப்பட்டனர். இக்கொடூர தாக்குதலுக்கு உலகின் பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், நெஞ்சைப் பிளக்கும் இந்தக் கொடிய துயரம் குறித்து ஒரு வார்த்தை கூட பிரணாப் முகர்ஜி தனது அறிக்கையில் சொல்லவில்லை.
தமிழ்ப் பெண்கள் வவுனியா முகாமில் இருந்து இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டு , அந்த இராணுவ மிருகங்களால் கூட்டம் கூட்டமாகக் கற்பழிக்கப்பட்டு அதன் பின் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிங்களக் காடையர்கள் பிடியிலிருந்து தப்பி வந்த தமிழ்ப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கூறியதை அறியும் போதே நம் அங்கம் எல்லாம் பதறுகிறது. இதயமே நொறுங்குகிறது.
ஆனால், இத்தனை கொடுமைகளையும், தமிழர் இன அழிப்புப் போரையும் சிங்கள அரசு செய்வதற்கு முழுக்க முழுக்க ஆயுதம் உதவி மட்டுமின்றி எல்லாவிதமான உதவிகளையும் இந்திய அரசு செய்து வருவதால்தான் ஒப்புக்கு கூட போர் நிறுத்தம் செய்ய சொல்ல இந்திய அரசு தயாராக இல்லை.
ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி தமிழக மக்கள் அனைவரையும் முட்டாள் ஆக்கிவிடலாம் என்று கருதி நல உரிமைப் பேரவை என்று நாடகம் நடத்துகிறார்.
போரை நடத்துவதே இந்திய அரசு. அந்த இந்திய அரசு மூலம் ஐக்கிய நாடுகள் சபையை அணுகப் போகிறாராம்.
‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தைப் பிளந்து வைகுண்டத்தை காட்டுவேன்’ என்று மார்தட்டுவதைப் போல முதலமைச்சர் ‘இல்லாத ஊருக்கு போகாத வழியைக் காட்டுகிறார்.
மொத்தத்தில் இந்திய அரசின் துரோகத்திற்கு முழுப் பங்காளி கலைஞர் கருணாநிதிதான் ஆவார் . பிரணாப் முகர்ஜியின் அறிக்கை ஈழத்தமிழர்கள் மீது வீசப்படும் கொத்துக்குண்டுகளை விட கொடுமையானது.
தமிழ் மக்கள் அருந்தும் தண்ணீர் தடாகத்தில் கலக்கப்படுகின்ற ஆலகால விடம் ஆகும் . இந்தத் துரோகத்திற்கு இனி எந்நாளும் மன்னிப்பு கிடையாது.
தமிழர்களை அழிக்கும் நோக்கத்துடன் போடப்பட்ட கொடூர சதித்திட்டத்தை யார் வகுத்தார்களோ அந்த மாபாவிகளுக்கு மன்னிப்பே கிடையாது. வினையை விதைத்து இருக்கிறார்கள். வினையை அறுப்பார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!
இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி கோவையில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது . இதில் வைகோ, ராமதாஸ், பழ.நெடுமாறன், தா.பாண்டியன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் , கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் மோகன்குமார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் .

இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில், கோவை ராஜவீதி தேர் நிலைத்திடலில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது
!!!!!!!!!!!!!
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை வேதனை அளிக்கிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ், இந்த மன வேதனையுடன் மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றா‌ர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா, ம‌த்‌திய அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌‌ஜி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசிய பிறகு, நே‌ற்‌றிரவு பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பே‌சிய அவர், டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும், அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் நேரில் சந்தித்து இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தினேன் இருவரும் ஆவன செய்வதாகக் கூறினார்கள் எ‌ன்றா‌ர்.

‌பி‌ன்ன‌ர் இந்திய அயலுறவுச் செயலர் எம்.கே.நாராயண‌னிட‌ம் இலங்கையில் நடைபெற்று வரும் இனப் படுகொலை பற்றி விரிவாகக் கூறினேன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ராமதா‌ஸ், நிச்சயமாக போரை நிறுத்த நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி கூறியதால் மிகுந்த நம்பிக்கை யுடன் இருந்தேன் எ‌ன்றா‌ர் .

ஆனால், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை என் நம்பிக்கையை சுக்குநூறாக்கி விட்டது எ‌ன்று‌ம் இலங்கையில் புதிய மின் திட்டங்களுக்கும், போரில் சிதைவடைந்த பகுதிகளைச் சீரமைக்கவும் உதவி அளிப்போம் என்று அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது எ‌ன்று‌ம் வேதனை தெ‌ரி‌வி‌த்தா‌ர் ராமதா‌ஸ்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தபோது “இலங்கை அதிபர் ராஜபக்சேயின் தம்பியும், இலங்கை ராணுவத் தளபதியும் சேர்ந்து ராணுவ ஆட்சி அமைக்க சதி செய்கிறார்கள்’ என்ற தகவலைக் கூறியபோது, சோனியா “இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் நாம் எப்படித் தலையிட முடியும்’ என்று கூறி விட்டார் . எனவே, மிகுந்த மனவேதனையுடன் மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் எ‌ன்றா‌‌ர்.

எனவே, இலங்கைப் பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பா.ம.க உறு‌ப்‌பின‌ர்க‌ள் (இ‌ன்று ) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார் ராமதாஸ்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை திமுக திடீரென திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது .

அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் சேர்த்து இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றதால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வகணபதி கடந்த சில மாதங்களுக்கு முன் திமுகவில் சேர்ந்து விட்டதால், அவரைக் காப்பாற்றவே இந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பிளசண்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2000ஆவது ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவுக்கும் , முன்னாள் அமைச்சர் செல்வ கணபதிக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து அஇஅதிமுகவினர் தமிழகம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர் . தர்மபுரி அருகே கோவை விவசாயக் கல்லூரி மாணவிகள் வந்த பேருந்துக்கு தீவைக்கப்பட்டதில் , 3 மாணவிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜெயலலிதாவும், செல்வகணபதியும் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஜெயலலிதாவும், செல்வகணபதியும் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

உயர்நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்ததை எதிர்த்து திமுக வழக்கறிஞர் ஆர்.எஸ். பாரதி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் திடீரென்று , வழக்கை திரும்பப் பெறுவதாக பாரதி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முக சுந்தரம் மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதிக்குமாறு நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
!!!!!!!!!!!!!!
இலங்கையில் த‌மிழ‌ர்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் ‌‌சி‌ங்கள அரசை க‌ண்டி‌த்து‌ம் , அ‌ங்கு போர் நிறுத்தம் ஏற்பட வலிறுத்தியு‌ம் கடலூர் ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகம் முன்பு தீக்குளித்த விடுதலை சிறுத்தை க‌ட்‌சி‌யை சே‌ர்‌ந்த த‌மி‌ழ்வே‌ந்த‌ன் ‌எ‌ன்ற வா‌லிப‌ர் நே‌ற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
கடலூர் வண்டிப்பாளையம் குழந்தை காலனியைச் சேர்ந்தவர் ஜோதி என்ற தமிழ்வேந்தன் (28). இவருக்கு ஜான்சி என்ற மனைவியும், சந்தோஷ் என்ற ஒ‌ன்றை வயது மகனும் உள்ளனர். கூலித்தொழிலாளியான தமிழ்வேந்தன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவராவார்.

ஈழத் தமிழர்களிடம் மிகுந்த பற்று கொண்டவராக இருந்த இவ‌ர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈழத் தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டு மிகுந்த உணர்ச்சி பெருக்குடன் பேசினார். இந்த போராட்டத்தினால் உந்தப்பட்ட அவர், இலங்கை தமிழர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக தனது நெருங்கிய நண்பர்களிடம் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப்போகிறேன் என்று கூறி வந்தாராம். இந்த நிலையில் அவர் தீக்குளிப்பதற்காக நேற்று மதியம் 2 மணி அளவில் மண்எண்ணை கேனுடன் கடலூர் ஆ‌‌ட்‌சி‌த் தலைவ‌ர் அலுவலகம் முன்பு உட‌லி‌ல் தீ வைத்துக்கொண்டார்.

உடல் கருகி உயிருக்கு போராடியபடி கிடந்த தமிழ்வேந்தனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ‌பி‌ன்ன‌ர் மே‌ல் ‌சி‌கி‌ச்சை‌க்காக கடலூரில் உள்ள ஒரு தனியார் மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌த்தன‌ர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி நள்ளிரவு 1.30 மணி அளவில் அவருடைய உயிர் பிரிந்தது.

தீக்குளித்த ஜோதியின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் க‌ட்‌சி‌யி‌ன் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ரவிக்குமார் உள்பட அக்கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்காக செ‌ன்னையை சே‌ர்‌ந்த மு‌த்து‌க்குமா‌ர், ‌ப‌ள்ள‌ப்ப‌‌ட்டி ர‌வி, சீ‌ர்கா‌ழி ர‌வி‌ச்ச‌‌ந்‌திர‌ன் , செ‌ன்னையை சே‌ர்‌ந்த அமரேச‌ன், இலங்கை தமிழ‌ர்க‌ள் ராஜா, முருகதாச‌ன் ஆ‌கியோ‌ர் ‌‌தீ‌க்கு‌ளி‌த்து மரண‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர். த‌ற்போது கடலூ‌‌ரை சே‌ர்‌ந்த த‌மி‌ழ்வே‌ந்த‌ன் மரண‌ம் அடை‌ந்து‌ள்ளா‌ர்
!!!!!!!!!!!!!!!

தமிழ்நாட்டில் ஆளும் திமுகவின் செல்வாக்கு சரிந்து எதிர்க்கட்சியான அதிமுகவின் செல்வாக்கு பெருகி இருப்பதாக கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது. தற்போதைய நிலையில் மக்களவை தேர்தல் களத்தில் அதிமுக முன்னணியில் இருப்பதாக அந்த கணிப்பு கூறுகிறது. .

தனியார் தொலைக்காட்சி ஒன்று மக்களவை தேர்தல் குறித்து நாடு தழுவிய கருத்துக்கணிப்பை நடத்தி உள்ளது. அதில் தமிழ்நாட்டில் திமுக அரசின் செயல்பாடு காரணமாக அக்கட்சியின் செல்வாக்கு சரிவை சந்தித்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. மாறாக எதிர்க்கட்சியான அதிமுக வின் செல்வாக்கு பெருமளவுக்கு உயர்ந்துள்ளது.

அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் அதிமுகவுக்கு கடந்த தேர்தலை விட அதிக அளவு ஆதரவு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய கணக்குப்படி திமுகவுக்கும், அதிமுகவுக்கும் சம அளவில் 28 சதவிகித வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 13 சதவிகிதமும், தேமுதிகவுக்கு 9 சதவிகிதமும் ஆதரவு உள்ளதாக அந்த கணிப்பு கூறுகிறது.

பிஜேபிக்கு 6 சதவிகிதம், பாமகவுக்கு 4 சதவிகிதம், இடதுசாரி கட்சிகளுக்கு 3 சதவிகிதம், மதிமுகவுக்கு ஒரு சதவிகிதம் மற்ற கட்சிகளுக்கு 8 சதவிகிதம் வாக்குகள் இருப்பதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விகிதாச்சாரத்தில் எந்த கூட்டணியில் அதிக கட்சிகள் சேருகிறதோ அந்த கூட்டணி பலம் பொருந்தியதாக மாறும். தற்போதைய நிலையில் திமுக அணியில் காங்கிரஸ் மட்டுமே உள்ளது. ஆனால் அதிமுக அணியில் இடதுசாரி கட்சிகள் மதிமுக ஆகியவை உள்ளன. பாமக இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை.

எனினும் காங்கிரஸ் கட்சி இருக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருந்திருக்கிறது என்பது முந்தைய தேர்தல்களின் வரலாறாக உள்ளது. தற்போது அதில் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அந்த கணிப்பு தெரிவிக்கிறது.

இலங்கை பிரச்சனையை கையாண்ட விதம் தொடர்பாக திமுக அரசு மீது பெரும் அதிருப்தி நிலவுகிறது. மேலும் தமிழ்நாட்டில் நிர்வாகம் சீர்குலைந்து விட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இத்தகைய காரணங்களால் திமுக வின் செல்வாக்கு சரிந்துள்ளதாக இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

திமுக அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது என்று 20 சதவிகிதம் பேரும், திருப்திகரமாக உள்ளது என்று 42 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர். திருப்தி இல்லையென்று 30 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். 8 சதவிகிதம் பேர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

எனினும் இலங்கை பிரச்சனையில் எந்த கட்சி மீதும் மக்களுக்கு அபிமானம் இல்லை என்று தெரிய வந்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில், கூட்டணி பலம் வாய்ந்த அதிமுக முந்துகிறது என்று அந்த கணிப்பு கூறுகிறது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பாஜக-விற்கு காங்கிரஸ் கட்சியை விட அதிக ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பல்வேறு தொலைக்காட்சி, பத்திரிகைகளும் கருத்துகணிப்புகளை நடத்தி வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி epWtdq;fs; நடத்திய கருத்துக் கணிப்பில் குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவிற்கு 47 விழுக்காடு வாக்குகள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

அதேநேரம் கடந்த ஆண்டில் செல்வாக்கு சரிந்திருந்த காங்கிர்ஸ் கட்சிக்கு வரும் தேர்தலிக்ல் 45 விழுக்காடு வாக்குகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோசடி தலைமையிலான ஆட்சி மீது திருப்தி அடைவதாக 39 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், அங்கு படேல் மற்றும் பதிதர் பிரிவினரிடையே பாஜகவிற்கு அதிக ஆதரவு உள்ளது.

இதேபோல கர்நாடகா மாநிலத்திலும் பாஜக-வுக்கு அதிக ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது . 39 விழுக்காட்டினர் வரும் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 35 விழுக்காட்டினரே ஆதரவு தெரிவித்துள்ளனர். தேவேகவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 15 விழுக்காடு மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது .
!!!!!!!!!!!!!!!!!
world
பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியில் தாலிபான் ஆதரவாளர்கள் அமைதிப் பேரணி நடத்தியபோது, பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி செய்தியாளர், அடையாளம் தெரியாத மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்டார் . இது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மன்னர் ஆட்சி நடைபெற்றுவந்த ஸ்வாட் பகுதி, கடந்த 1969ஆம் ஆண்டு பாகிஸ்தானோடு இணைந்தது. பாகிஸ்தானின் ஸ்விட்சர்லாந்து என அழைக்கப்படும் இந்த பகுதியின் மொத்த மக்கள் தொகை 50 லட்சம் . தாலிபான் ஆதரவு இயக்கத் தலைவர் மௌலானா சுபி முகமதுவிற்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஸ்வாட் பகுதியில் ஷரியா என்னும் இஸ்லாமிய மதச்சட்டத்தை அமல்படுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இதற்கு பின்னர், ஸ்வாட்டில் மின்கோரா என்னுமிடத்தில் இந்த அமைப்பினர் கடந்த இருதினங்களாக அமைதிப் பேரணி நடத்தினர் . இதுகுறித்து செய்தி சேகரிக்க தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள் அங்கு திரண்டிருந்தனர் . இந்நிலையில், ஷரியா சட்ட ஒப்பந்தம் குறித்து மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுவந்த பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி செய்தியாளர் மூசா கான், அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைக் கண்டித்து பாகிஸ்தானில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அந்நாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானில் ஆப்கன் எல்லை அருகே ஒசாமா பின்லேடன் பதுங்கி இருப்பதாகத் தெரியவந்துள்ள பகுதியில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. சேதவிவரங்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

பாகிஸ்தானில் ஆப்கன் எல்லையையொட்டிய பழங்குடியினர் வசிக்கும் பள்ளத்தாக்குப் பகுதியில் சர்வதேச தீவிரவாதி பின்லேடன் பதுங்கி உள்ளான். இவனைப் பிடிக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், அந்த பகுதியில் குர்ராம் என்னும் இடத்தில் பின்லேடன் பதுங்கி இருப்பதை செயற்கைக்கோள்கள் மூலம் கண்டறிந்ததாக அமெரிக்க விஞ்ஞானிகள் அண்மையில் தெரிவித்தனர். இதனையடுத்து, அந்த பகுதியில் ஆள் இல்லாத விமானம் மூலம் அமெரிக்கா சரமாரியாக குண்டுகளை வீசித்தாக்குதல் நடத்தியது . இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை
!!!!!!!!!!!!!!
தாலிபான்களுடன் 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதுடன், வடமேற்குப் எல்லைப்புற மாகாணத்தில் ஷாரியா சட்டத்தை அமல்படுத்த பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டது தொடர்பாக முழு விளக்கம் அளிக்கும்படி அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளர் கோர்டன் டுகுவிட் “தாலிபான்-பாகிஸ்தான் அரசுக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதித்து வருகிறோம். இது தொடர்பாக, பாகிஸ்தானிடம் இருந்து முழுமையான விளக்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என்றார் .

“இஸ்லாமிய சட்டம் என்பது பாகிஸ்தானின் அரசியல் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டது. எனவே பாகிஸ்தானியர் அல்லாத ஒருவர் இது குறித்து விவாதிக்க முடியுமா என்பது பற்றி தெரியவில்லை” என்றார்.

‌பாகிஸ்தானின் விளக்கத்துக்கு பின்னர் இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

!!!!!!!!!!!!!
பாலத்தீனர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய இராணுவ சிப்பாய் ஒருவர் விடுதலை செய்யப்படும் வரை காசாவின் எல்லைகள் திறக்கப்படமாட்டாது என்றும், ஹமாஸுடன் நீண்ட கால போர் நிறுத்தத்துக்கு உடன்படுவதில்லை என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை தீர்மானித்திருக்கிறது .
மூன்று வருடங்களுக்கு முன்னர் ஹமாஸினால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்த இராணுவ சிப்பாய் ஹமாஸினால் விடுதலை செய்யப்பட்டால் நூற்றுக்கணக்கான பாலத்தீன கைதிகளை விடுதலை செய்வது பற்றி இஸ்ரேலிய அமைச்சரவை விவாதித்தது.
சண்டை நிறுத்தத்துக்காக இஸ்ரேல் விதிக்கும் நிபந்தனைகளை தாம் நிராகரிப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது.
எகிப்திய அரசு நடுநிலை வகித்து உருவாக்கப்பட்ட சண்டை நிறுத்தப் பிரேரணைகளுக்கு மாறாக புதிய நிபந்தனைகளை இஸ்ரேல் விதிப்பதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார் .
!!!!!!!!!!!!!
sports

West Indies won the toss and decided to field
England 1st Innings
566 for 9 (165.2 overs)
West Indies 1st Innings
285 all out (89.2 overs)
England 2nd Innings
221 for 8 (50.0 overs)
West Indies 2nd Innings
143 for 3 (45.0 overs)Ml;lk; njhlh;e;J eilngWfpwJ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
1 euro = 143.50sl /62.74in
1 us $ =114.10sl /49.88in
1swiss fr =97.13sl /42.47in
1uk pound =162.84sl / 71.19in
1Saudi Arabian Riyal =30.42sl /13.30in

Leave a Reply

Your email address will not be published.