நாடாளுமன்ற உறுப்பினர்கள் லீவு பெற்றுக் கொண்டு நாட்டிற்கு எதிராக செயற்படுகின்றனர்: தினேஸ் குணவர்தன

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் லீவு பெற்றுக் கொண்டு நாட்டிற்கு எதிராக செயற்பட்டு வருவதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஸ் குணவர்தன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட லீவைப் பயன்படுத்தி அரசியல் சாசனத்திற்கும், நாட்டிற்கு பாதிப்பு ஏற்படக் கூடியவாறு செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிங்கத்திற்கு லீவு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிவாஜிலிங்கத்திற்கு மூன்று மாத கால லீவு வழங்கப்பட வேண்டுமென யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் கோரிக்கை விடுத்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் லீவு பெற்றுக் கொள்வதற்கு தடையில்லை என்ற போதிலும், நாட்டிற்கு எதிரான தேச விரோத செயல்களில் ஈடுபடுவதனை அனுமதிக்க முடியாதென தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.