இழு படகு மூலம் வன்னிக்கு உணவு அனுப்பி உலகை ஏமாற்றும் சிறிலங்கா அரசு

வன்னியில் உணவு நெருக்கடியை தணிப்பதாகக் கூறி உலகத்துக்கு காட்டுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இழு படகு மூலம் உணவுப் பொருட்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் வன்னிக்கு இன்று அனுப்பியுள்ளது.

மூன்று சுமையூர்திகள் கொள்ளக்கூடிய உணவுப் பொருட்களை கொழும்பு துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான “சிங்கபாகு -2” எனும் பெயர் கொண்ட இழு படகு மூலம் சிறிலங்கா அரசாங்கம் இன்று புதன்கிழமை வன்னிக்கு அனுப்பியது.

அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதற்காக அனுப்பப்பட்ட இந்த இழு படகில் 20 தொன் மா, 4 தொன் சீனி, 6 தொன் பருப்பு ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன.

நான்கு லட்சம் வரையான மக்கள் வாழும் பகுதிக்கு குறைந்தளவு தொகையான உணவுப் பொருட்களை சிறிலங்கா அரசாங்கம் அனுப்பியிருப்பது அப்பகுதி மக்களுக்கு ஆத்திரத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உணவுப் பொருட்கள் தமக்கு வாய்க்கரிசி போடுவதற்காக அனுப்பப்பட்டவையா என மக்கள் கேள்வி எழுப்பி தமது கோபத்தினை வெளிப்படுத்தினர் என்று “புதினம்” செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கின்றார்.

உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்ட இந்த இழு படகானது (Tug boat) கொழும்பு துறைமுகத்தில் பாரிய கப்பல்களை தள்ளிவிடும் பணிகளை மேற்கொண்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.