‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (18.02.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

வன்னியில் “மக்கள் பாதுகாப்பு வலய” பகுதிகளில் இன்று புதன்கிழமை அதிகாலை வேளை சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களில் 108 தமிழர்கள் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 223 பேர் காயமடைந்துள்ளனர்.

“மக்கள் பாதுகாப்பு வலய” பகுதிகளான புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை இருளில் 2:00 மணி தொடக்கம் 5:00 மணிவரை கொரடூரமான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

ஆட்லெறி கொத்துக் குண்டுகள், மோட்டார் எறிகணைகள், பல்குழல் வெடிகணைகள் என 200-க்கும் அதிகமான குண்டுகள் இன்று அதிகாலை மக்கள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன.
தூக்கத்தில் இருந்த பெருமளவிலான மக்கள் படுகொலை செய்யப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் .
கொல்லப்பட்டவர்களில் 49 சிறுவர்களும், 21 பெண்களும் அடங்குவர்.
அப்பகுதியில் இருந்து மக்களின் பெரும் ஓலங்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளதாகவும் “தெரிவிf;fg;gLfpwJ
அதிகாலை வேளை இருளில் நடைபெற்ற தாக்குதல் என்பதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து – அவலப்பட்டு – நாலாபக்கமும் சிதறி ஓடிய வண்ணம் உள்ளதாகவும் mwpag;gLfpwJ
!!!!!!!!!!!!!!!!!
,NjNtisapy; New;W சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திவரும் தாக்குதலை நிறுத்தினால் , விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது.

இலங்கை வன்னி பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடைபெற்றுவரும் உச்சகட்ட போரில், அப்பாவித் தமிழர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர் . அங்கு போரை நிறுத்த வேண்டும் என்று ஐநா சபை உட்பட பல்வேறு உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், விடுதலைப்புலிகள் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டணியின் மூத்த தலைவர் நல்லதம்பி ஷ்ரீகந்தா கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் இருந்து மக்கள் வெளியேறுவதை விடுதலைப்புலிகள் தடுப்பதாக இலங்கை அரசு குற்றம்சாட்டி வருவதை மறுத்த அவர், விடுதலைப்புலிகள் வசம் உள்ள பகுதிகளில் இருந்து இதுவரை சுமார் 50 ஆயிரம் பேர் இலங்கை அரசு அறிவித்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்திருப்பதை சுட்டிக்காட்டினார் . சண்டையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருவது குறித்து விடுதலைப்புலிகளுடன் பேசியதாகவும் , போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவித்தால், தாங்களும் போரை நிறுத்த தயாராக இருப்பதாக புலிகள் தெரிவித்ததாகவும் ஷ்ரீகந்தா கூறினார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!
கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலுமான காலப்பகுதியில் சிறிலங்கா அரசு 774 பில்லியன் ரூபாய்களை படையினருக்கு செலவிட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை நிர்வாக அமைச்சரான தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

2000 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையிலும் 592 பில்லியன் ரூபாய்கள் இராணுவத்திற்கும் , 91 பில்லியன் ரூபாய்கள் வான்படையினருக்கும், 49 பில்லியன் ரூபாய்கள் காவல்துறையினருக்கும், 32 பில்லியன் ரூபாய்கள் கடற்படையினருக்கும் செலவிடப்பட்டுள்ளன.

ஏ-32 மற்றும் ஏ-9 நெடுஞ்சாலைகளை புனரமைக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகின்றது என்றார் அவர்.
!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கும் போகலாம் .இதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட மாட்டாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகின்றார்.

அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான mAjjhup fUzh தான் அக் கட்சியிலிருந்து விலகியுள்ளதாகவும்,தானும் இன்னும் சிலரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சேரப் போவதாகவும் தெரிவித்துள்ளளார். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன்,

“ஜனநாயக நாட்டில் யாரும் எந்த கட்சியிலும் இருக்கலாம் .அது அவர்களுடைய உரிமை மட்டுமல்ல சொந்த விடயமுமாகும்.இதனால் யாரும் அதற்கு குறுக்கே நிற்க முடியாது .எமது கட்சியிலிருந்து ஒரு சிலர் வேறு கட்சிக்கு செல்லும் நிலை வரும்போது களநிலையில் மட்டும் சில பிரச்சினைகள் அதிகரிக்கலாம் . இதனால் பொது மக்களும் அரசாங்க அதிகாரிகளுமே சிக்கல்களை எதிர் நோக்க வேண்டியிருக்கும் .

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஒரு தலைவரே இருக்க முடியும் . எமது கட்சியின் தலைவராகவிருந்த குமாரசாமி நந்தகோபன்( ரகு) என்பவரின் படுகொலையையடுத்து கட்சி தலைமைப் பதவி தொடர்பாக சில பிரச்சினைகள் எழுந்தது என்பது உண்மை தான்.

கிழக்கு மாகாணததைப் பொறுத்த வரை சகலரும் ஒரே கட்சியாக இருப்பதே மக்களுக்கு பலமாக இருக்கும் .இதன் அடிப்படையிலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமது வேலைத் திட்டங்களை முன்னெடுத்தது.

கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரசியல் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மக்கள் பலத்தையே நம்பியிருப்பதால் யார் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம் அதனால் எமது கட்சிக்கு பாதிப்பு ஏற்படாது” என அவர் தெரிவித்தார்.*
!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவிலிருந்து யுத்தத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்களும் என மூன்று தொகுதியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கடல் வழியாக அழைத்து வரப்பட்ட 1060 பேரில் 678 பேரே தொடர்ந்தும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இறுதியாக கிடைத்த வைத்தியசாலை தகவல்களின் படி நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என சிகிச்சைக்காக அனுமதிக்கப்படடிருந்த 1060 பேரில் 218 பேர் நேற்று வரை சிகிச்சை முடிந்து வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தம்பலகாமம் வைத்தியசாலையில் 34 பேரும்,கந்தளாய் வைத்தியசாலையில் 84 பேரும் ,பொலன்னறுவை வைத்தியசாலையில் 86 பேரும்,கண்டி வைத்தியசாலை 28 பேரும் என 232 பேர் வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

திருகோணமலை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ள 678 பேரில் 53 பேர் மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வைத்தியமனையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் .

இதனைத் தவிர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின் நேற்று மாலை இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனார்
!!!!!!!!!!!!!!
விடுவிக்கப்படாத பகுதியில் தங்கியுள்ள பொதுமக்கள் மரண அவலத்தை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் போல் கஸ்டெல்லா குறிப்பிட்டுள்ளார் .
சர்வதேச செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் தொடர்ச்சியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள போதிலும், இன்னமும் பெருந்தொகையான பொதுமக்கள் இடர்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

புதுமாத்தளன் பகுதியில் உள்ள பொதுமக்கள் மரண அவலத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்தொகையான நோயாளிகள் பகுதியில் சிகிச்சைக்காக காத்திருப்பதாகவும், மருந்து வகைகள் மற்றும் மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்திலிருந்து நோயாளிகளை வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!
அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அர்த்தமுள்ள, காத்திரமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாதிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் போக்கு நிலைப்பாடு குறித்து நாம் மிகுந்த கவலை கொண்டுள்ளோம்; அதிர்ச்சி அடைந்துள்ளோம் .
இவ்வாறு விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
போரை நிறுத்துவதே இன்றைய உடனடித் தேவை. அதனைச் செய்யாமல், என்ன நடைபெறுகிறது என்ற உண்மை நிலையை நேரில் வந்து கண்டறியாமல், பிழையான தரப்பு மீது பயனற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கொண்டிருக்கும் தேவையற்ற பணியில் ஐ.நா. ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்றும் பா. நடேசன் நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார் .
!!!!!!!!!!!!!!!!!
வடபகுதியில் இடம்பெற்று வரும் நடவடிக்கைகளில் பொது மக்களுக்கு இழப்புகள் ஏற்படுவதை தவிர்ப்பதில் அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புலிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக படையினர் மறைமுகமாக தாக்குதல் நடத்துவது தடுக்கப்பட்டுள்ளது என்று ராய்ட்டர் நிறுவனத்துக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் படையினருக்கு இழப்பு ஏற்படுவதாகவும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளின் தெளிவான வெளிப்பாடு இதுவாகும் . பொதுமக்கள் காயமடைவதை தவிர்க்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இது நாம் மிகவும் கரிசனைக் கெடுத்திருக்கும் விடயமாகும். இல்லாவிடின் நாம் அதிகளவு ஆட்லறிகளை பயன்படுத்தி நகர்ந்திருக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
பல்வேறு வட்டாரங்களிலிருந்து வெளியிடப்பட்டுள்ள பொதுமக்கள் இழப்புகள் தொகை தொடர்பாக குறிப்பிட்ட அவர், புலிகள் மறைந்திருக்கும் பகுதிகளில் அகப்பட்டுள்ள பொதுமக்கள் தொகை மற்றும் இழப்புக்கள் தொடர்பாக அதிகளவு மிகைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
50 ஆயிரத்திற்கும் 70 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான பொதுமக்களே போர் வலயத்தில் அகப்பட்டிருப்பதாகவும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடந்த 10 நாட்களில் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் புலிகள் பொதுமக்களை தொடர்ந்து மனிதக் கேடயங்களாக வைத்திருக்கும் போது பொதுமக்கள் பாதிப்படையும் சாத்தியம் இருப்பதாகவும் ஆயுதப் படைகளிடம் புகலிடம் கோரும் முயற்சிக்கும் பொதுமக்கள் மீது சூடு நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். புலிகளும் அனுதாபிகளும் பொதுமக்கள் இழப்புகளை மிகைப்படுத்துவதாகவும் பிரசாரத்திற்காக செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்கள் இழப்புகள் இருக்கக் கூடும் ஆனால் அதிக தொகையில் அல்ல. இறந்த கெரில்லாக்களின் எண்ணிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் போன்று உடையணிந்திருப்பதால் போராளிகள் அல்லாதோருடன் அவர்களை வேறுபடுத்திக் கொள்ள இயலாது.
ஒரு மாதத்தில் எங்கள் தரப்பில் ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். எமது சக்தி , எமது படையினரின் பயிற்சி என்பனவற்றை கருத்திற்கெடுத்தால் புலிகளுக்கு அதிகளவில் இழப்புகள் ஏற்பட்டிருக்கவேண்டும். அந்த இழப்புகள் எல்லாம் எங்கே? புலிகளுக்கு இழப்புகள் இல்லையென யாராவது கூற முடியுமா? என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வன்னியில் ஒளிந்திருப்பதாகவும் பொதுமக்களை பலவந்தமாக மனிதக்கேடயமாக வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் இங்கேயே உள்ளார், ஏனைய தலைவர்களுடன் வெளியேற திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். போறதா தொடர்ந்து இருப்பதா தற்கொலை செய்வதா என்பது அவர்கள் தீர்மானித்திருக்காத விடயங்கள் அல்ல. என்றும் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
சரணடைந்த புலி உறுப்பினர்கள் மற்றும் தப்பிவந்த பொதுமக்கள் என்பவற்றின் மூலம் திரட்டப்பட்ட புலனாய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கருத்துகளை தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் , காலத்தை எடுப்பதற்கு மக்கள் பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளார்.
“இந்தப் பொதுமக்களை கேடயமாக வைத்திருக்கின்றனர். அவர்கள் தப்பிச் செல்லும் போது இவர்களை போக விடுவார்கள்’ என்று அவர் தெரிவித்தார்.
மனித ஆட்கடத்தல் வலைப் பின்னல் அமைப்பை உருவாக்கியபின் புலிகளின் தலைவர் தப்பிச் சென்று அரசியல் புகலிடத்திற்கு முயற்சிக்க கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
“உதாரணமாக அவர்களால் அவுஸ்திரேலியாவுக்கு போக முடியும் அங்கு சூசை அல்லது பொட்டு அம்மானை யாருக்கு தெரியும்? ஏதோவொரு பெயரை கூறி இலங்கை அரசு எனது வீட்டையும் எல்லாப் பொருட்களையும் எரித்துவிட்டது என்று கூற முடியும். ஏனெனில் அவுஸ்திரேலியாவில் இருந்து கூறமுடியும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிறந்த குழந்தையை ஏழாம் நாளில் விற்பனை செய்த அக் குழந்தையின் தாயாரும் அதற்கு உதவிய மந்திகை ஆஸ்பத்திரி குடும்பநல ஊழியரையும் நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பருத்தித்துறை ஆஸ்பத்திரியில் பிறந்த இக் குழந்தையின் தாயார் திருமணமாகாத 17 வயது இளம் பெண் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இக் குழந்தையின் தந்தையாரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.
இக் குழந்தை வியாபாரம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து , பொலிஸார் இதனைக் கண்டு பிடித்தனர்.
தாயாரும், குடும்ப நல ஊழியரும் குழந்தையும் பருத்தித்துறை நீதவான் க.அரியநாயகம் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அத்துடன் குழந்தையை கைதடி அநாதைச் சிறார்கள் இல்லத்தில் ஒப்படைத்து பராமரிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
குழந்தைகள் விற்பனை செய்யும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வருவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!
வன்னியில் யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களையும், காயமடைந்து திருகோணமலை மற்றும் வவுனியா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் இலங்கை அமெரிக்கன் மிசன் திருச்சபைக் குழுவொன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளது.

இலங்கை அமெரிக்கன் மிசன் திருச்சபையின் தலைவரான அருட் கலாநிதி. எஸ்.ஜெயநேசன் தலைமையிலான இக்குழுவில் திருச்சபையின் மதகுருமார்களும் மற்றும் நிவாரணப் பணியாளர்களும் என 7 பேர் இடம் பெற்றிருந்தனர்.

வவுனியாவிலுள்ள 3 நலன்புரி நிலையங்களுக்குத் தாங்கள் விஜயம் செய்ததாக தெரிவித்த அருட் கலாநிதி. எஸ்.ஜெயநேசன்,அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள ஆயிரக் கணக்கான மக்கள் வெளியிட தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இருப்பதாகக் கூறினார்.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைப் பொறுத்தவரையில் குறிப்பாக கைகளும் கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்கைள் உட்பட பலரும் காணப்படுவதாகவும் கூறினார்.

தங்கள் திருச்சபை ஊடாக ஒரு தொகுதி மருந்துகள், குழந்தைகளுக்கான உணவுகள் மற்றும் உடுதுணிகள் வழங்கப்பட்டதாகவும் இலங்கை அமெரிக்கன் மிசன் திருச்சபையின் தலைவரான அருட் கலாநிதி. எஸ்.ஜெயநேசன் மேலும் குறிப்பிட்டார்
!!!!!!!!!!!!
முல்லைத்தீவிலிருந்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி 16 திங்கட்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ள வன்னிப் பொதுமக்களின் பெயர், விபரங்கis vkJ ,izajsj;jpy; ghh;itaplyhk;.

india news
ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு தழுவிய மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .

மொத்தம் 2 ஆயிரம் கிலோ மீற்றர் நீளத்துக்கு நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

வடக்கே தாம்பரத்தில் தொடங்கி செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக தெற்கே கன்னியாகுமரி வரை கிட்டத்தட்ட 717 கிலோ மீற்றர் தொலைவுக்கு முதல் அணிவகுப்பு நடைபெற்றது.

மேற்கே கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர் , நீடாமங்கலம், நாகப்பட்டினம் வரை 352 கிலோ மீற்றர் தொலைவுக்கு 2 ஆவது மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடைபெற்றது.

தாம்பரத்தில் தொடங்கிய மனிதச் சங்கிலி கன்னியாகுமரி வரை இடைவிடாமல் நீண்டிருந்தது. ஒரு சில இடங்களில் இடைவெளி இருப்பதை பார்த்ததும் அந்தந்த பகுதி மக்களும் ஓர் ஊரில் இருந்து மற்றோர் ஊருக்குச் செல்வோரும் தாங்களாக முன்வந்து மனிதச் சங்கிலியில் நின்றிருந்தவர்களுடன் கரம் கோர்த்தனர். இதனால் 3 பாதைகளிலும் அமைக்கப்பட்ட மனிதச் சங்கிலி இடைவிடாமல் நீடித்தது.

மொத்தம் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த மனிதச் சங்கிலியில் பங்கேற்றதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றது.அனைத்து ஊர்களிலும் பாடசாலை , கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

!!!!!!!!!!!!!!!
மக்கள்” தொலைக்காட்சிக்கு இலங்கையில் இராணுவத்தினர் விதித்துள்ள தடை, உலகளவில் கருத்து சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய கரும்புள்ளி என “”மக்கள்”” தொலைக்காட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக “மக்கள்” தொலைக்காட்சியின் முதன்மைச் செயலாளர் அ.சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“மக்கள்” தொலைக்காட்சி தொடங்கப்பட்டதிலிருந்து எல்லா விதத்திலும் நடுநிலையாக செயல்பட்டு வருவதை, பலவிதமான ஆய்வுகளும், அமைப்புக்களும் பாராட்டியுள்ளன.
ஊடக நெறியை மீறாமல் உலகத் தமிழர்களின் குரலாக இன்று வரை ஒலித்துக்கொண்டிருக்கின்றோம் .
இந்நிலையில், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை தொடர்பான உண்மை நிலையை மட்டும் விருப்பு வெறுப்பின்றி தொடர்ந்து எடுத்துரைப்பதால், சிறிலங்கா இராணுவம் “மக்கள்” தொலைக்காட்சியை அந்நாட்டில் ஒளிபரப்ப முழுவதுமாக தடை விதித்துள்ளது.
“மக்கள்” தொலைக்காட்சிக்கு இலங்கையில் இராணுவத்தினர் விதித்துள்ள தடை, உலகளவில் கருத்து சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய கரும்புள்ளி. ஊடக சுதந்திரத்தின் குரல் வளையை நெரித்துவரும் சிறிலங்கா அரசின் சர்வாதிகார நடவடிக்கையையே இந்த செயல் காட்டுகிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளர்கள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர்.
இனப்படுகொலை செய்திகளை வெளியிட்டதற்காக பி.பி.சி. உள்ளிட்ட பல வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசு ஜனநாயக பாதையைவிட்டு தடம்மாறி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் “மக்கள்” தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் ஒரு சான்றாகும்.
இலங்கையில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் “மக்கள்” தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பக்கூடாது என அங்குள்ள கம்பிவட இயக்குநர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது .
சிறிலங்கா அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக அரசியல் தலைவர்களும், சக ஊடகவியலாளர்களும் , பொதுமக்களும் தங்கள் கண்டனக் கணைகளை பதிவு செய்ய வேண்டும்.
தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் “மக்கள்” தொலைக்காட்சிக்கும், ஊடக நெறியைக் காப்பாற்றப்படுவதற்கும் துணை நிற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!

தேர்தல் நேரத்தின் போது கருத்து கணிப்புகளை வெளியிட பத்திரி கைகள், தொலைக்காட்சிகளுக்கு புதிய கட்டுபாடுகளை வதித்து தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக புதிய விதிமுறைகளை நேற்று வெளியிட்டுள்ளது. .

பல கட்டமாக நடைபெறும் பொது தேர்தலின் போது, கடைசி கட்ட தேர்தல் முடியும் வரை தேர்தல் குறித்த கருத்து கணிப்புகளை பத்திரிகைகள், தொலைகாட்சிகள் வெளியிட கூடாது.

ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலின் போது, வாக்குபதிவு முடியும் நேரம் என்று குறிப்பிடும் நேரத்திலிருந்து, 48 மணி நேரத்திற்கு முன்பே கருத்து கணிப்புகளை வெளியிடுவதை நிறுத்தி விட வேண்டும்.

பல கட்டமாக நடைபெறும் தேர்தலில், முதல் கட்ட வாக்குபதிவு முடியும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாகவும், கடைசி கட்ட தேர்தலின் வாக்குபதிவு முடியும் நேரம் வரை, வாக்குபதிவு குறித்த தேர்தல் கணிப்புகளை வெளியிட கூடாது என்று தேர்தல் ஆணையம் விதிமுறைகளை வகுத்துள்ளது .
!!!!!!!!!!!!

!!!!!!!!!!!!!!!!!
world

கத்தோலிக்க மத தலைவர் போப் பெனடிக், ஜோர்டன் நாட்டில் உள்ள மிகப் பெரிய மசூதிக்கு செல்ல உள்ளார். போப் பெனடிக் மே மாதம் ஜோர்டன் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள புனித நிலத்திற்கு விஜயம் செய்கிறார். இந்த பயணத்தின் போது அவர் ஜோர்டனில் உள்ள மிகப் பெரிய மசூதிக்கு செல்ல உள்ளார் .

அவர் மசூதிக்கு செல்வது இது 2-வது முறை. ஏற்கனவே துருக்கியில் உள்ள ஒரு மசூதிக்கு அவர் கடந்த 2006-ல் சென்றிருக்கிறார்.

!!!!!!!!!!

அமெரிக்க பொருளாதாரத்தை மீட்பதற்கான நிதியுதவி வழங்கும் சட்டத்தில் அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். .

அமெரிக்க பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக 787 பில்லியன் டாலர் நிதியுதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சட்ட வடிவில் ஒபாமா நேற்று கையெழுத்திட்டார் . ஏற்கனவே அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது .

1534 பக்கங்கள் கொண்ட இந்த சட்டத்தில் கையெழுத்திட்ட ஒபாமா, அடுத்த 3 ஆண்டுகளில் லட்சக் கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

!!!!!!!!
சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் பாகிஸ்தானில் ஒளிந்திருக்கும் இடத்தை செயற்கைக்கோள் உதவியுடன் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்துவரும் பின்லேடன், அமெரிக்க இரட்டைக் கோபுர தகர்ப்பு உள்ளிட்ட பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறான். அவனைப் பிடிக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், செயற்கைக்கோள் உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில், ஆப்கன் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் பராசினார் நகரில் அவன் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுக்குழுவின் தலைவர் தாமஸ் கில்லஸ்பி தெரிவித்துள்ளார் . சுற்றுச்சுவருடன் கூடிய 3 கட்டிடங்களில் ஒசாமா பின்லேடன் மறைந்துள்ளதாகவும், உளவு விமானங்களின் பார்வையில் இருந்து தப்புவதற்காக அக்கட்டிடம் முழுவதும் மரங்களால் சூழப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மின்சார வசதியுடன் கூடிய அந்த இடத்தில் அவனுக்கு பாதுகாப்பாக மெய்க்காப்பாளர்கள் சிலர் இருப்பதாகவும், பின்லேடனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தாமஸ் தெரிவித்துள்ளார்.

.

!!!!!!!!!
ஆப்கன் பிரச்னையை அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பதே சிறந்தது என்றும், பயங்கரவாதிகளை ஒடுக்க ராணுவ தாக்குதல் சரியான வழியாக அமையாது என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஆப்கன்-பாகிஸ்தான் எல்லைகளில் பழங்குடியினர் பகுதியில் தாலிபான் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் அவ்வப்போது விமானத் தாக்குதலும் நடத்திவருகிறது. மேலும், பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக ஆப்கனுக்கு கூடுதலாக 17 ஆயிரம் படைவீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவுசெய்துள்ளது. இந்நிலையில், கனடா தொலைக்காட்சி ஒன்றிற்கு நேற்று பேட்டியளித்த ஒபாமா, அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளால் மட்டுமே ஆப்கன் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார் . போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைத்து, அதனை மேம்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் , பயங்கரவாத செயல்களை ஒடுக்க இதுபோன்ற அணுகுமுறைகள் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
!!!!!!!!!
sports
துபாய் ஓபன் டென்னிஸ் போட்டி இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா , எஸ்டோனியாவைச் சேர்ந்த கனெபியிடம் தோல்வி அடைந்தார்.

துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ரஷ்ய வீராங்கனை மெக்ரோவாவை வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்கு சானிய மிர்சா தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றுப் போட்டியில் எஸ்டோனியாவைச் சேர்ந்த வீராங்கனை கனெபியுடன் சானியா மோதினார். நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் , 5-7, 2-6 என்ற செட் கணக்கில் கனெபியிடம் சானியா மிர்சா தோல்வி அடைந்தார். இந்த போட்டியில் தோல்வியடைந்தபோதிலும், சானியா மிர்சாவிற்கு சுமார் 10 ஆயிரம் டாலர்கள் பரிசுத் தொகையாகக் கிடைத்தது.
!!!!!!!!!
உக்ரைனின் டோநெட்ஸ்க் நகரில் நடந்த சர்வதேச உள்ளரங்க போல்வால்ட் போட்டியில் ரஷ்ய வீராங்கனை இசின்பயீவா 5.0 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலக சாதனை படைத்துள்ளார் .

இப்போட்டியில் முதல் முயற்சியில் 4.97 மீட்டர் தாண்டி தனது முந்தைய சாதனையை அவரே முறியடித்தார்.தொடர்ந்து மீண்டும் முயன்று, 2-வது முயற்சியில் 5.0 மீட்டர் தாண்டி அவர் புதிய உலக சாதனை படைத்தார்.

ஏற்கனவே திறந்தவெளி போல்வால்ட் போட்டியில் 5.05 மீட்டர் உயரம் தாண்டி இசின்பயீவா உலக சாதனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

!!!!!!!!!!!!
1 euro = 143.97 sl / 62.73in
1 us $ = 114.15sl /49.73in
1 swiss fr =97.78sl /42.60in
1 uk pound = 163.02 sl 71.02in
Saudi Arabian Riyal = 30.43sl /13.25in

Leave a Reply

Your email address will not be published.