பாக். எல்லைப்பகுதியில் பின்லேடன்

உலக அளவில் தேடப்படும் பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள நகரில் மறைந்திருக்கக் கூடும் என்று செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

புவியியல் ஆய்வாளர் தாமஸ் கில்லஸ்பி தலைமையிலான அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழுவினர், இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் புகைப்படங்களை ஆய்வு செய்த பின் இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்

பாகிஸ்தான் எல்லையில் இருந்து 12 மைல் தொலைவில் உள்ள பராச்சினார் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒசாமா பின்லேடன் ஒளிந்திருக்கலாம் என்று நவீன தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

3 அடுக்குகளைக் கொண்ட ஒரு வீட்டை ஒசாமா பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

குகை போன்ற வீட்டில் பின்லேடன் இருக்கலாம் என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கில்லஸ்பி கூறியுள்ளார்.

பராச்சினார் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. தவிர, இப்பகுதியில்தான் தாலிபான் அமைப்பினருக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.

ஒசாமா பின்லேடன் தற்போது எந்த இடத்தில் மறைந்திருக்கிறான் என்பதே மிகவும் முக்கியமான கேள்வியாக எழுந்துள்ளது.

குற்றவாளிகள் மற்றும் மிகவும் ஆபத்தான உயிரினங்களை கண்டறிவதற்காக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

மக்கள் தொகையை கண்டறிதல், இரவில் மின்சார பயன்பாடு போன்றவை குறித்து அறியவும் அது பயன்படுத்தப்பட்டது.

பின்லேடன் இதற்கு முன் எங்கு தங்கியிருந்தான், அவனது பழக்க வழக்கங்கள் என்ன போன்றவை குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

தவிர பின்லேடனுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆண்டுகளாக பின்லேடனைத் தேடி வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் முக்கியப் பிரச்சினையாக இது உருவாகியுள்ளதாக கில்லஸ்பி மேலும் கூறினார்.

Source & Thanks : tamil.webdunia.com

Leave a Reply

Your email address will not be published.