தங்கம் விலை உயர்வால் தவிக்கும் நடுத்தர மக்கள்: சவரன் விலை 11,000 ரூபாயை தாண்டி எகிறியது

சாமானிய மக்கள் தொட முடியாத உயரத்தில் தங்கத்தின் விலை எகிறி, 11 ஆயிரம் ரூபாயை தாண்டி தகித்துக் கொண்டிருக்கிறது. சென்னை மட்டுமல்லாமல் மும்பை, டில்லியிலும் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்போதுள்ள சூழலில், நிலத்தில், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை விட, தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் தங்கத்தின் விலையில் இரு மாதங்களாக ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சி தான். பொதுவாக அட்சய திரிதியை உள்ளிட்ட முக்கிய விசேஷ தினங்கள், முகூர்த் தங்கள் வரும் ஆவணி, தை உள்ளிட்ட மாதங்களில் தான் தங்கத்தின் விலை சிகரத்தை அடையும். ஆனால், தற்போது தங்கத் தின் விலை வரலாறு காணாத வகையில் தகித் துக் கொண்டிருக்கிறது.

கடந்த ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் ஒரு சவரன் 10 ஆயிரம் ரூபாய் என்ற எல்லைக்கோட்டை தாண்டி பயணிக்கத் துவங்கியது. விலை இறங்குவது போல் பாவலா காட்டினாலும், தொடர்ந்து ஏறுமுகத்தைச் சந்தித்து நேற்று 11 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. இந்த வகையில் ஒன்றரை மாதத்தில் ஒரு கிராமுக்கு 136 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வால் நடுத்தர மக்கள், தங்கள் பிள்ளைகளின் திருமணத் திற்காக நகை வாங்க என்ன செய் வது என்ற அதிர்ச்சி நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, டாலரின் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுகள், பங்குச் சந்தையின் நிலையற்ற தன்மை, தங்கத்தின் மீதான அதிகப்படியான முதலீடு, தங்கத்தின் விலையை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளன. கடந்தாண்டு அக்டோபரில் தங்கத்தின் விலை உயர்ந்து, ஒரு கிராம் 1,284 ரூபாயாகவும், ஒரு சவரன் 10 ஆயிரத்து 272 ரூபாய்க் கும் விற்கப்பட்டது. இந்நிலையில், நவம்பர் மாத துவக்கத்தில் தங்கத் தின் விலை சரிந்தது. ஒரு கிராம் 1,097 ரூபாய்க்கும், ஒரு சவரன் 8,774 ரூபாயக்கும் விற்பனை செய்யப்பட்ட தங்கம், டிசம்பர் மாதத்தில் ஒரு கிராம் 1,201 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் தென்பட்டது.

டிசம்பர் மாத இறுதியில் ஒருகிராம் 1,247 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், நான்கு மாதங்கள் கழித்து, கடந்த ஜனவரி முதல் வாரத்தில் 10 ஆயிரம் ரூபாயைத் தொட்டது. ஜனவரி 2ம் தேதி ஒரு கிராம் 1,250 ரூபாய்க்கும், ஒரு சவரன் 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப் பட்டது. இதைத் தொடர்ந்து தங்கத்தின் விலையில் சரிவை காணமுடியவில்லை. ஜனவரி 25ம் தேதி நிலவரப்படி ஒரு கிராமுக்கு 51 ரூபாய் அதிகரித்து 1,301 ரூபாய்க்கும், ஒரு சவரன் 10 ஆயிரத்து 408 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த 13ம் தேதி தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 1,366 ரூபாயாகவும், ஒரு சவரன் 10 ஆயிரத்து 978 ரூபாயாகவும் இருந்தது. நேற்று ஒரு கிராமுக்கு 38 ரூபாய் உயர்ந்து 1,404 ரூபாயை தொட்டது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 11 ஆயிரத்து 232 ரூபாயாக விற்பனை செய்யப் பட்டது. இது தவிர 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 10 கிராம் 14 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது. மும்பை மார்க் கெட்டில் ஆபரணத் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் 1,475 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ஒரு கிராமுக்கு 29 ரூபாய் உயர்ந்து 1,504 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 24 காரட் சுத்த தங்கம் 10 கிராம் 14 ஆயிரத்து 810 ரூபாயிலிருந்து உயர்ந்து 15 ஆயிரத்து 105 ரூபாய்க்கு விற்கப்பட்டது. டில்லியில் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து 360 ரூபாய் அதிகரித்து 10 கிராம் 15 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப் பட்டது. செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, கற் களுக்கு விலை இல்லை என்று விளம்பரங்கள் செய்யப்பட்டாலும், தங்கத்தின் விலை உச்சத் திற்கு சென்று கொண்டிருப்பதால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஒன்றரை மாதத்தில் ஒரு கிராமுக்கு 136 ரூபாய், சவரனுக்கு 1,088 ரூபாய் என விலை உயர்வு என்பது அனைத்து தரப்பட்ட மக்களையும் பாதிக்கும் என்பது உறுதி. இதனால், ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து தங்கத்தை எடுக்க வேண் டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.