கடந்த 9 வருடங்களில் சிறிலங்காவின் பாதுகாப்பு செலவு 774 பில்லியன் ரூபாய்கள்

கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலுமான காலப்பகுதியில் சிறிலங்கா அரசு 774 பில்லியன் ரூபாய்களை படையினருக்கு செலவிட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை நிர்வாக அமைச்சரான தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

2000 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையிலும் 592 பில்லியன் ரூபாய்கள் இராணுவத்திற்கும், 91 பில்லியன் ரூபாய்கள் வான்படையினருக்கும், 49 பில்லியன் ரூபாய்கள் காவல்துறையினருக்கும், 32 பில்லியன் ரூபாய்கள் கடற்படையினருக்கும் செலவிடப்பட்டுள்ளன.

ஏ-32 மற்றும் ஏ-9 நெடுஞ்சாலைகளை புனரமைக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகின்றது என்றார் அவர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.