பிரிட்டன் பிரதமர் வீடு எதிரே தீக்குளிக்க முயன்ற ஈழத் தமிழர் கைது

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனின் வீடு உள்ள டெளனிங் தெரு எதிரே தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்ய முயன்ற ஈழத் தமிழரை போலீஸார் கைது செய்தனர்.


கலகம் விளைவிக்க முயன்றதாக கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட தமிழரின் பெயர் சிவசுப்ரமணியம் லோகேஸ்வரன் (41). மேற்கு இங்கிலாந்தின் கிளௌஸ்டர்ஷயர் பகுதியில் வசித்து வருகிறார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்களை ராணுவம் கொன்று குவிக்கும் செயலால் மன வேதனை அடைந்து காணப்பட்டார் சிவசுப்ரமணியம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று கையில் பெட்ரோலுடன் டெளனிங் தெருவுக்கு வந்தார் சிவசுப்ரமணியம். அங்கு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொள்ள முயற்சித்தார்.

இதைப் பார்த்த அங்கிருந்த பாதுகாவலர்கள் விரைந்து வந்து அவரை தடுத்து காப்பாற்றினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்த முயன்றது, கலகம் விளைவிக்க முயன்றது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.