பிரிட்டனில் 9,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது கே.எஃப்.சி

லண்டன் : பிரபல அமெரிக்க ஃபாஸ்ட் புட் நிறுவனமாக கே.எஃப்.சி., பிரிட்டனில் 9,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. இன்னும் மூன்று முதல் ஐந்து வருடங்களில் அங்கு 300 க்கும் மேற்பட்ட புது ரெஸ்ட்டாரன்ட்களை துவங்குவதன் மூலம் அது 9,000 புதிய வேலைவாய்ப்புகள் <உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக 150 மில்லியன் பவுன்ட்கள் முதலீடு செய்யவும் அந்த நிறுவனம் முடிவு செய்திருப்பதாக டெலகிராப் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது. பிரிட்டனும் இப்போது கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் அங்குள்ளவர்கள் இப்போது குறைந்த செலவில் சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனை பயன்படுத்தி கே.எஃப்.சி., அங்கு புதிய ரெஸ்ட்டாரன்ட்களை திறக்க முன்வந்துள்ளது. இப்போது பிரிட்டனில் இருக்கும் கே.எஃப்.சி., ரெஸ்ட்டாரன்ட்களில் 22,000 பேர் ஷிப்ட் முறையில் வேலைபார்க்கிறார்கள். அவர்களுக்கு மணிக்கு 5.73 பவுன்ட் ( சுமார் ரூ.395 ) என்ற கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அமெரிக்கா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்தாலும், கே.எஃப்.சி., நிறுவனம் கடந்த வருடத்தில் 36 புதிய ரெஸ்ட்டாரன்ட்களை திறந்திருக்கிறது. இந்த வருடத்தில் 44 புதிய ரெஸ்ட்டாரன்ட்களை திறக்க இருக்கிறது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.