வவுனியா தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் படையினரால் கைது;யாழ். குடாவில் மக்கள் ரி.வி. ஒளிபரப்புக்கு இராணுவம் தடை

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் நடத்தப்பட்டு வந்த ‘சன் ரீவி’ மீள் ஒளிபரப்புத் தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் திங்களன்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பொலிஸாரிடம் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உரிய அனுமதிப்பத்திரமின்றி தொலைக்காட்சி நிலையம் நடத்தி வந்தமைக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு சென்ற இராணுவத்தினர் அந்த நிலையத்திற்குப் பொறுப்பாக இருந்தவர் உட்பட நான்கு பேரைக் கைது செய்ததுடன், தொலைக்காட்சி ஒளிபரப்புக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த உபகரணங்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தோனிப்பிள்ளை மரியசீலன் (40), ஜெய்கிஷ் (45), அன்ரனி (40), புரூஸ் (38) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கைதானவர்களை வவுனியா பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை யாழ் குடாநாட்டிலும் தமிழ்நாட்டில் இருந்து ஒளிபரப்பப்படும் மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு யாழ். இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொலைக்காட்சி ஒளிபரப்பில் வன்னியில் தற்போது நடைபெற்றுவரும் மோதல் சம்பந்தமான அரசுக்கு எதிரான காட்சிகளை ஒளிபரப்புவதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.