வன்னியில் இருந்து மேலும் 400 படுகாயமடைந்த மக்களை ஐ.சி.ஆர்.சி. கடல் மார்க்கமாக வெளியேற்றியது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தலன் பகுதியிலிருந்து சிறிலங்கா படையினரின் ஆட்லறித் தாக்குதலில் படுகாயமடைந்த 400 தமிழ்மக்களை சர்வதேச நெஞ்சிலுவை சங்கம் நேற்று திங்கட்கிழமை கப்பல் மூலம் மேலதிக சிகிச்சைக்காக வெளியேற்றிக் கொண்டு சென்றது

இது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மேலதிக சிகிச்சை அளிப்பதற்காக கடல் மார்க்கமாக கொண்டு செல்லும் படுகாயமடைந்த பொதுமக்களின் மூன்றாவது தொகுதியாகும்.

காயமடைந்த இவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் “கிறீன் வோஷன்” கப்பலின் மூலம் திருகோணமலைக்கு வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வந்தவர்கள் அனைவரும் இன்று அதிகாலை 3 மணியளவில் முற்றாக இறக்கப்படடுள்ளனர்; இவ்வாறு வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் செஞ்சிலுவை சங்கம் தற்காலிக மருத்துவ முகாம்களை அமைத்திருக்கும் அதேவேளை, அங்கிருந்து காயமடைந்த மற்றும் நோயாளர்கள் என 750 பொதுமக்கள் கடந்த 10 ஆம் திகதியும் 12 ஆம் திகதியும் வெளியேற்றப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இந்த நோயாளர்களின் மருத்துவ பணிகளில் சரவதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூன்று வைத்திய நிபுணர்கள் கடமையாற்றுவதாக சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை வன்னியில் படுகாயமடைந்த பொதுமக்களுக்கு எதுவித மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ளமுடியாத சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.